ரோஸ் வாட்டர் என்பது ரோஜா பூவின் இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவம் ஆகும். தரமான ரோஸ் வாட்டர் என்பது புதிய பன்னீர் ரோஜாக்களைக் கொண்டு ஆவி வடித்தல் முறையின் (Steam Distillation Method) மூலம் செய்யப்படும். இது உங்களுக்கு அழகையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும். ரோஸ்வாட்டர் சரும பராமரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது கோடையில் ஒரு சிறந்த தேர்வாகும். தோல் வறட்சி, சரும அரிப்பு போன்ற தோல் தொடர்பான பல பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதிலும் இது சிறப்பாக செயல்படுகிறது.
ரோஸ் வாட்டர் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகும். இது கோடைகால பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. பொதுவாக கோடை காலம் வரும்போது, சூரிய ஒளி, வெயில், நமது சருமம் தொடர்பான பல சிக்கல்கள் வருகிறது. இதனால் சருமத்தில் தடிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இதற்கு ஒவ்வாமை அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் இதற்கு ரோஸ் வாட்டர் நல்ல பலனை தரும். ரோஸ்வாட்டர் சருமத்தின் pH சமநிலையை பராமரிப்பதன் மூலமும், அதிகப்படியான எண்ணெய் மற்றும் கடுகடுப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் சரும அழகை பராமரிக்கிறது. கோடையில் உங்கள் அன்றாட ஸ்கின் கேர் ரொட்டினில் ரோஸ் வாட்டரைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் பிளாக்ஹெட்ஸ், ஒயிட் வைட்ஹெட்ஸ், முகப்பரு உள்ளிட்ட பிரச்சனைகளை குணமாக்கலாம்.
தினமும் உங்கள் சருமத்தில் ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதால், உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்கும், இதனால் சரும சுருக்கங்கள் நீங்கி பொலிவாகும். நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு காட்டன் பேடில் ரோஸ் வாட்டரை எடுத்து உங்கள் முகத்தில் மெதுவாகத் தட்டவும் அல்லது டோனர் போல நேரடியாக தெளிக்கவும். இப்படி செய்வதால் உங்கள் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் பிரகாசமாகவும் தோன்றும். கோடையில், நம் உச்சந்தலையில் பெரும்பாலும் வறண்டதாக இருக்கும், இதனால் பொடுகு பிரச்னை ஏற்படுகிறது. இதற்கும் ரோஸ் வாட்டர் நல்ல பலனை தருகிறது.
உண்மையான ஃபிட்னஸ் எது தெரியுமா.? தீபிகா படுகோன் சொல்வதை கேளுங்கள்..
ரோஸ் வாட்டர் நன்மைகள் :
* முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், சந்தனப் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு, பின் 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால்அசிங்கமான பருக்களைப் போக்கலாம்.
* முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், பருக்கள் நீங்குவதுடன், சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். இது எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
* ரோஸ் வாட்டருடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் மாஸ்க் போட்டு, 1 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
* பொலிவான சருமத்தை பெற, கடலை மாவு அல்லது முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரித்து பொலிவாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Rose water, Summer tips