Home /News /lifestyle /

சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது தோல் முதிர்ச்சி அடைவதை தடுக்க உதவுமா? தோல் மருத்துவரின் அறிவுரை..

சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது தோல் முதிர்ச்சி அடைவதை தடுக்க உதவுமா? தோல் மருத்துவரின் அறிவுரை..

காட்சி படம்

காட்சி படம்

How To Use Sunscreen : சன்ஸ்கிரீன் லோசனை முகத்தில் எப்படி அப்ளே செய்ய வேண்டும்? தெரிந்துக்கொள்ளுங்கள்..

அழகு மீதும் அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணமும் தற்போது இளம் பெண்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை நன்றாக புரிந்து கொண்ட அழகு சாதன பொருட்கள் தயாரிப்பாளர்களும் சருமத்தின் நிறம் மற்றும் வகைக்கு ஏற்றார் போல் சரும பராமரிப்பு சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அவை அனைத்தும் உண்மையில் சிறப்பாக வேலை செய்வது கிடையாது. உண்மையான சரும பராமரிப்பிற்கு எப்போதும் சன்ஸ்கிரீன் கிரீம்கள் தேவைப்படுகின்றன. சூரியனின் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், வயதான தோற்றத்தை தடுக்கவும் தேவையான காரணிகள் அதில் உள்ளன. 2013ம் ஆண்டு வெளியான ஆய்வு முடிவுகளின் படி, வழக்கமான சன்ஸ்கிரீன் பயன்பாடு சூரியனின் புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினால் ஏற்படும் கலர் மாற்றம், சுருக்கங்கள், புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக சுமார் 900க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சிலருக்கு தினமும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தச் சொல்லப்பட்டது மற்றும் சில மணிநேரங்கள் வெளியில் இருந்த பிறகு, தண்ணீரில் இறங்கிய பிறகு அல்லது அதிக வியர்வை வெளியேறிய பிறகு மீண்டும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது உட்பட, சரியான பயன்பாட்டில் அறிவுறுத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளில் 900க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதுalso read : உங்கள் குழந்தையிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? தெரிந்துக்கொள்ளுங்கள்..

மற்ற பங்கேற்பாளர்களுக்கு சன்ஸ்கிரீனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்ரோடோகிராபி எனப்படும் நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இரு குழுக்களிடையே தோல் மாற்றங்களை அளவிட்டனர். சூரிய ஒளியின் வெளிப்பாட்டால் ஏற்படும் சேதம் ஒன்று முதல் ஆறு வரையிலான அளவில் அளவிடப்பட்டது, ஒன்று சேதம் இல்லை என்றும், ஆறு என்பது கடுமையான வயதான தோற்றத்தை கொடுக்கும் தோலை உருவாக்கியுள்ளதாகவும் கணக்கிடப்பட்டது. தினசரி சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துபவர்களுக்கு வயதான அறிகுறிகளைக் காட்டுவதற்கான வாய்ப்பு 24 சதவீதம் குறைவாக இருப்பதாக முடிவுகள் கண்டறிந்துள்ளன

அமெரிக்க தோல் மருத்துவர் ரானெல்லா ஹிர்ஷ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "சன்ஸ்கிரீனில் உள்ள எஸ்பிஎஃப் (SPF) சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது என்றும், புற ஊதா கதிர்களின் தாக்கம் தோலை முதிர்ச்சி அடையச் செய்வதோடு, தோல் புற்றுநோயையும் உருவாக்கும் என எச்சரிக்கிறார்.சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது தொடர்பாகவும் அதுபற்றிய வதந்திகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்:

1. உங்கள் சருமத்தில் டான் இருந்தால், புற ஊதா கதிர்களின் தாக்கத்திற்கு ஏற்கனவே பழியாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

2. 18 வயதிற்கு முன்பு சூரிய ஒளியால் சருமத்திற்கு 25 சதவீத பாதிப்புகள் ஏற்பட்டுவிடுகிறது, மேலும் ஆபத்துக்களை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே சிறப்பான சன்ஸ்கிரீன்களை தேர்வு செய்ய தாமதிக்க கூடாது.

3. நான் SPF 50 அப்ளை செய்துள்ளேன், அதனால் மீண்டும் அப்ளே செய்ய தேவையில்லை:

சன்ஸ்கிரீனை மதிப்பிட பயன்படும் அளவான எஸ்பிஎஃப் 50 என்பது எவ்வளவு காலம் தொடர்ந்து சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. அனைத்து சன்ஸ்கிரீன்களும் 90 முதல் 120 நிமிடத்திற்குள் வியர்வை போன்ற காரணங்களால் அழியத் தொடங்கும். எனவே குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் சன்ஸ்கீரின் அப்ளே செய்து கொள்வது நல்லது.

4. நான் SPF 50 அப்ளை செய்துள்ளேன், சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பாக உணர்கிறேன்:

எஸ்பிஎஃப் புற ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதை பற்றி குறிக்கிறது. UVA கதிர்கள் உங்கள் சருமத்தை முதிர்ச்சியடையச் செய்து தோல் புற்றுநோயை உண்டாக்கும்.

also read : உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!5. நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன், எனக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை:

நீங்கள் வீட்டிலேயே ஜன்னலுக்கு அருகில் வேலை செய்கிறீர்கள் என்றால் நிச்சயம் புற ஊதா கதிர்களிடம் இருந்து தாக்கத்தை அனுபவிப்பீர்கள். ஏனெனில் ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருக்கும் போது கட்டாயம் புற ஊதா கதிர்கள் உங்களது சருமத்தில் படும்.

6. என் மேக்கப்பிலேயே எஸ்பிஎஃப் உள்ளது, அதனால் சன்ஸ்கிரீன் பூசவில்லை:

தற்போது பவுண்டேஷன், மாய்சுரைசர்களில் கூட எஸ்பிஎஃப் பாதுகாப்பு உள்ளது. அதனை மேக்கப்பிற்காக பயன்படுத்தினால் தனியாக சன்ஸ்கிரீன் உபயோகிக்க தேவையில்லை என்பது தவறானது. ஏனெனில்  சிறிது அளவாவது சன்ஸ்கிரீன் லோஷன் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிறார் ரானெல்லா.

7. மேகமூட்டமாக இருப்பதால் SPF தேவையில்லை:

மேகத்திற்கு பின்னால் இருந்து சூரிய ஒளி வீசினாலும் சரி, நேரடியாக ஒளி வீசினாலும் சரி சருமத்திற்கு தோல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்பதை மறக்காதீர்கள்.

8. நான் சிறப்பாக சருமத்தை பராமரிப்பதால் சன்ஸ்கிரீன் தேவையில்லை:

ஏற்கனவே சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தும் பொருட்களுடன் சன்ஸ்கிரீன் லோஷனையும் இணைப்பது நல்லது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Beauty Tips, Sunscreen

அடுத்த செய்தி