முட்டை சருமப் பராமரிப்பால் இத்தனை நன்மைகளா..? வாரம் ஒருமுறையேனும் டிரை பண்ணுங்க

முட்டை சருமப் பராமரிப்பால் இத்தனை நன்மைகளா..? வாரம் ஒருமுறையேனும் டிரை பண்ணுங்க

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இது கூந்தலுக்கும், முகத்துக்கும் பல நன்மைகளை அளிக்கிறது.

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இது கூந்தலுக்கும், முகத்துக்கும் பல நன்மைகளை அளிக்கிறது.

  • Share this:
பொலிவான சருமத்தை பெற உதவும் முட்டை... பேஸ் பேக் டிப்ஸ்! முட்டைகள் ஒரு அதிசய உணவு என்று கூறப்படுகிறது, அவை உடலுக்கு மட்டும் நல்லது அல்ல சருமம் மற்றும் கூந்தலுக்கும் நல்லது. முட்டைகள் இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் அதிக எண்ணிக்கையிலான சுகாதார நன்மைகளை வழங்குகின்றன.

குறிப்பாக முட்டையின் வெள்ளை கரு நம் அழகை மேம்படுத்த மிகவும் பயனளிக்கிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இது கூந்தலுக்கும், முகத்துக்கும் பல நன்மைகளை அளிக்கிறது. முக்கியமாக சருமத்தின் தளர்வை குறைத்து இறுக்கமாக வைத்திருக்கிறது. முட்டை வீட்டில் இருந்தால் தினம் ஒரு அழகு குறிப்பை செய்து உங்கள் முகத்தை பராமரியுங்கள்.

எண்ணெய்பசை சருமத்திற்கு :

எண்ணெய்பசை சருமம் இருப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த தேர்வாக இருக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் கெட்டித்தயிர், கற்றாழை எடுத்து நன்கு கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை முகத்தில் ஊறவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவது குறைந்து, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். பிறகு பஞ்சை கொண்டு அழுத்தி துடைத்துவந்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய் பசைகள் வெளியேறும். சருமம் பளபளவென்று இருக்கும்.வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு :

வறண்ட சருமம் இருப்பவர்களும் முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தலாம். ஆனால் அவற்றுடன் சேர்க்கும் பொருட்களை கவனமாக சேர்க்க வேண்டும். முட்டையின் வெள்ளைகரு 3 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், காய்ச்சாத பால் - 3 டீஸ்பூன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை பத்து நிமிடங்கள் கழித்து முகம் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவி எடுங்கள். சருமத்தின் வறட்சி நீங்கும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி ஈரப்பதமாக இருக்கும்.

சரும நிறம் அதிகரிக்க :

சரும நிறத்தை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முட்டையின் வெள்ளை கருவை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இதற்கு 1 முட்டையின் வெள்ளைக் கருவுடன், 2 ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், 1 டீஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் தேவை. முதலில் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை மிக்சியில் நன்கு மசித்து, அதனுடன் முட்டையின் வெள்ளை கரு, தயிர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் தயாரிக்கவும் . இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.சரும சுருக்கங்களை நீக்க :

சரும சுருக்கம் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. வயதானவர்களுக்கு மட்டுமின்றி இளம்பெண்களும் தற்போது சரும சுருக்கம் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதற்கு 1 முட்டை வெள்ளை கருவை, அரை டீஸ்பூன் தேனுடன் கலப்பதன் மூலம் நீங்கள் வீட்டிலேயே ஒரு சூப்பர் பேஸ் பேக்கை தயாரிக்கலாம். இது உங்கள் சரும துளைகளை அடைத்து சருமத்தை இறுக்கமடைய செய்கிறது. இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து சருமம் பொலிவாகும். இந்த பேக்கை, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்துவந்தால் விரைவில் நல்ல பலனை பெற முடியும்.

பருக்கள் மறைந்தாலும் அதன் வடுக்கள் மறையவில்லையா..?  உங்களுக்கான ஹோம் டிப்ஸ்..!

ஆரோக்கியமான சருமத்திற்கு :

சருமத்தில் உள்ள தூசிகள், மாசுகளால் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் பரு, எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு முதலில் உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். சரும துளைகளை சுத்தம் செய்வதற்கும், தெளிவான சருமத்தையும் பெற முட்டையின் வெள்ளை கரு , 1 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட்டாக முகத்தில் தேய்த்து உலரவிட்டு கழுவவும். சர்க்கரை சரும துளைகளில் உள்ள மாசுகளை வெளியேற்றும், இதனால் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: