நொடியில் அழகு தரும் ’ஃபேஸ் ஷீட் மாஸ்க்’... எவ்வாறு அப்ளை செய்ய வேண்டும்..?

இந்த ஃபேஸ் ஷீட் மாஸ்க்குகள் வெள்ளரி, அவகோடா, ப்ளூபெர்ரி போன்ற  பழங்களின் சீரத்தில் மூழ்க வைத்த காகிதங்களே இந்த மாஸ்க்.

news18
Updated: August 13, 2019, 4:33 PM IST
நொடியில் அழகு தரும் ’ஃபேஸ் ஷீட் மாஸ்க்’... எவ்வாறு அப்ளை செய்ய வேண்டும்..?
ஃபேஸ் ஷீட் மாஸ்க்
news18
Updated: August 13, 2019, 4:33 PM IST
செலவு செய்வதில் ஷாப்பிங்கிற்கு அடுத்த இடத்தைபிடிப்பது பியூட்டி உலகம்தான். அந்த வகையில் முகத்தை பராமரிப்பதற்கு மட்டும் செய்யும் செலவுகள் கணக்கிலடங்காதவை. தற்போது சருமத்தை பாதுகாக்க உதவும் ஷீட் மாஸ்க் அனைவரிடமும் பிரபலமாகி வருகிறது.

அதை எவ்வாறு அப்ளை செய்ய வேண்டும்..அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

இந்த ஃபேஸ் ஷீட் மாஸ்க்குகள் வெள்ளரி, அவகோடா, ப்ளூபெர்ரி போன்ற  பழங்களின் சீரத்தில் மூழ்க வைத்த காகிதங்களே இந்த மாஸ்க். இந்த ஷீட்டுகள் பேப்பர், நார் அல்லது ஜெல் ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன. இவை ஒரே ஒரு ஷீட்டாக மட்டுமே கிடைக்கும். இதைப் பயன்படுத்தும் முறையும் எளிது.

அதாவது..பாக்கெட்டில் இருக்கும் ஈரப்பதம் கொண்ட ஷீட்டை பதமாக எடுத்து முகத்தில் சீராக அப்ளை செய்து ஒட்டவும். அதில் உள்ள ஈர்ப்பதம் முகத்திற்குக் குளுமையைத் தரும்.



அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் காயும் வரைக் காத்திருக்கவும். அப்போது கண்களை மூடி ஓய்வு நிலையில் இருப்பது நல்லது. கண்களுக்கு வெள்ளரியை வைத்துக்கொள்ளலாம்.

காய்ந்த பின் ஷீட்டை கூடுதல் பளபளப்பிற்கு ஸ்க்ரப் போல் தேய்த்து பின் கழுவலாம் அல்லது அப்படியேவும் நீக்கிவிட்டு தண்ணீரால் கழுவி விடலாம்.

இதை வாரம் ஒரு முறை செய்வதால் முகம் எப்போதும் பிரகாசமாக மின்னும். நீங்கள் ஏதேனும் நிகழ்ச்சி, பார்ட்டிக்கு செல்வதானாலும் இந்த ஃபேஸ் ஷீட் மாஸ்கை அப்ளை செய்தால் நொடியில் சோர்வான முகம் பளபளக்கும். இதன் விலை வெறும் 100 - 150 ரூபாயிலிருந்தே கிடைக்கின்றன.

இதுவரை முயற்ச்சிக்கவில்லை எனில்..இனி செய்து பாருங்கள். அழகில் மாற்றத்தை உணர்வீர்கள்.!




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...