Home /News /lifestyle /

டியோடரன்ட் கிரீம் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்..? தெரிந்து கொள்ளுங்கள்

டியோடரன்ட் கிரீம் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்..? தெரிந்து கொள்ளுங்கள்

டியோடரன்ட் கிரீம்

டியோடரன்ட் கிரீம்

நம் உடல் பராமரிப்புக்கு அவசியமான சில பொருட்களில் டியோடரன்ட் கிரீம்களும் ஒன்று.

நம் உடல் பராமரிப்புக்கு அவசியமான சில பொருட்களில் டியோடரன்ட் கிரீம்களும் ஒன்று. கிளைனைசர், மாய்ஸ்ச்சுரைசர் போல தினசரி வாழ்வில் மிக முக்கியமான இடம் டியோடரன்ட் கிரீம்களுக்கு உண்டு. பல ஆண்டுகளாக நாம் டியோடரன்ட் ஸ்ப்ரேம், பவுடர், ஸ்டிக்ஸ் மற்றும் வைப்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் டியோடரன்ட் கிரீம் என்றால் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

டியோடரன்ட் கிரீம் என்றால் என்ன.?

பெயரில் உள்ளதைப் போலவே இது மிகவும் மிருதுவான கிரீம் ஆகும். பொதுவாக சின்ன டியூப் அல்லது டப்பாவில் வரும். ஸ்ப்ரே அல்லது லோஷன் போல அல்லாமல் உங்கள் விரல்களாலேயே இதை உடலில் தடவிக் கொள்ளலாம். குறிப்பாக, கை அக்குள் பகுதியில் இதை பயன்படுத்துவதன் மூலமாக வியர்வையை தடுக்கலாம். கை மணிக்கட்டு மற்றும் முட்டிகள் போன்ற பகுதிகளில் இந்த கிரீமை தடவினால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி வீசும்.

டியோடரன்ட் கிரீம்களின் பலன்கள்..

பொதுவாக மார்க்கெட்டில் கிடைக்கும் டியோடரன்ட் கிரீம்கள் அனைத்தும் அத்தியாவசிய எண்ணெய், தேங்காய் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை ஆகும். ஆகவே, இது உங்கள் சரும பாதுகாப்பிற்கு நல்லது. கெமிக்கல்கள் நிறைந்த டியோடரன்ட் ஸ்ப்ரே வகையைக் காட்டிலும் இது சருமத்திற்கு நல்லது.



 

இது வெண்ணெய் போல இருப்பதால் ஸ்ப்ரே மற்றும் வைப்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம். டியோடரன்ட் கிரீம்களை எங்கும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும். பொதுவாக டியூப் அல்லது சின்ன டப்பாவில் வருவதால், பயணத்தின் போது கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.

 

டியோடரன்ட் ஸ்ப்ரே, வைப்ஸ் போன்றவற்றை ஒப்பிடுகையில் இதன் விலை சற்று குறைவாகும். டியோடரன்ட் ஸ்டிக்குகளை போல அல்லாமல் இதை மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ஏனென்றால், நாம் இதை கைகளில் எடுத்த பிறகே பயன்படுத்துகிறோம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வதால் பணம் சேமிக்கப்படும்.

கடலை மாவு இருந்தால் போதும் சூப்பராக ஃபேஷியல் செய்யலாம்!

டியோடரன்ட் கிரீம்களை பயன்படுத்துவது எப்படி.?

குளித்து முடித்த பிறகு டியோடரன்ட் கிரீம்களை உடலில் தேய்த்துக் கொள்ளலாம். முதலில் கொஞ்சமாக எடுத்து பயன்படுத்துங்கள். தேவைப்பட்டால் பின்னர் மிகுதியாக எடுத்துக் கொள்ளலாம். இதை அளவுக்கு அதிகமாக எடுத்து அக்குள் பகுதியில் பயன்படுத்தினால், அங்கு பிசுபிசுப்பாக தோன்றும். ஆகவே அளவோடு பயன்படுத்தவும்.



கை அக்குள் பகுதிகளில் ஷேவ் செய்து முடித்த உடனேயே இந்த க்ரீம்களை பயன்படுத்தாதீர்கள்.
உங்களுக்கு அதிகப்படியாக வியர்வை சுரக்கிறது என்றால், ஒரே நாளில் மீண்டும், மீண்டும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பாக டிஸ்யூ அல்லது தண்ணீர் கொண்டு கை அக்குள் பகுதி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Deodorant

அடுத்த செய்தி