• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சரும பராமரிப்பில் ரெட்டினோலுக்கு மாற்றாக இருக்கும் பாகுச்சியோல்.. இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா ?

சரும பராமரிப்பில் ரெட்டினோலுக்கு மாற்றாக இருக்கும் பாகுச்சியோல்.. இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா ?

காட்சி படம்

காட்சி படம்

பாகுச்சியோல் ஆயுர்வேத மருந்துகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மூலிகை ஆகும்.

  • Share this:
தோல் பராமரிப்பில் ரெட்டினோலுக்கு (retinol) மென்மையான மாற்றாக இருக்கும் பிரபல பொருட்களில் ஒன்று பாகுச்சியோல் (bakuchiol). இதிலும் சரும சேதங்களை குணப்படுத்துதல் மற்றும் முகப்பருவை எதிர்த்துப் போராடும் நன்மைகள் உள்ளிட்ட பண்புகள் உள்ளன. பொதுவாக ரெட்டினோல் வைட்டமின் ஏ 1 என்றும் குறிப்பிடப்படுகிறது. அம்மை நோயாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க இது சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. ரெட்டினோல் சிறிய அளவு டோஸ் எடுக்கும் போது பெரிதாக பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.

அதுவே டோஸேஜ் அதிகமானால் வறண்ட சருமம், வயிற்றில் இருக்கும் கருவுக்கு தீங்கு உள்ளிட்ட பல ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்று பல அழகு சாதனங்களில் அதிக அளவு மூலப்பொருளாக ரெட்டினோல் சேர்க்கப்பட்டு வருகிறது. அழகு சாதன தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ரெட்டினோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் முதுமை தோற்றத்தை குறைக்க உதவும் செயற்கை வைட்டமின் ஏ வடிவமாகும். பொதுவாக ரெட்டினோல் சருருமத்தை மென்மையாக்கி, கொலாஜன் இழைகளை புதுப்பிக்கிறது.

சரியான முறையில் பயன்படுத்தும் போது சரும சுருக்கங்ளை தடுக்கும், முகப்பருக்களை எதிர்த்து போராட உதவும், மந்தமான ஸ்கின் டோனை ஒளிர செய்யும், கரும்புள்ளிகளை போக்கும். எனவே ரெட்டினோல் சேர்க்கப்பட்ட பல தயாரிப்புகள் அழகு சந்தையில் உலா வருகின்றன. எனினும் பல சரும நன்மைகளை கொண்டிருக்கும் ரெட்டினோல் சில நேரங்களில் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளில் வறண்ட சருமம், சிவத்தல், அரிப்பு, சன் சென்சிட்டிவிட்டி மற்றும் இன்னும் சில கோளாறுகள் அடங்கும்.

also read : கூந்தல் மற்றும் சரும அழகை பராமரிக்க வாழைப்பழத்தில் இருக்கும் மகத்தான நன்மைகளை பற்றி தெரியுமா..?

சில சந்தர்பங்களில் முதல் முறை ரெட்டினோல் அடங்கிய தயாரிப்புகளை பயன்படுத்திய சிலர் மேற்காணும் பக்கவிளைவுகளுடன் எரிச்சல் உணர்வும் ஏற்பட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள். ரெட்டினோலை அளவுக்கு அதிகமாகவோ அல்லது அடிக்கடி பயன்படுத்தினால் அரிப்பு மற்றும் செதிலான திட்டுகள் ஏற்படலாம் என்பது நிபுணர்களின் கருத்து. சரும பராமரிப்பில் ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொள்ளும் போது bakuchiol, ரெட்டினோலுக்கு சமமான பயனுள்ள தாவர அடிப்படையிலான வைட்டமின் ஏ மாற்றாகும். ரெட்டினோலுக்கு ஒரு சிறந்த மாற்றாக கூறப்படும், பாகுச்சியோலின் பூர்விகம் நம் இந்தியாவே.

பாகுச்சியோல் ஆயுர்வேத மருந்துகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மூலிகை ஆகும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக பல சரும நோய்களை குணப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது. தவிர இது சீன இயற்கை மருத்துவத்திலும் முக்கியமான மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாப்சி செடியின் இலைகள் மற்றும் விதைகளிலிருந்து எடுக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை சாறு தான் பாகுச்சியோல். இது ஒரு அற்புதமான கொலாஜன் பூஸ்டராக இருப்பதால் பெரும்பாலான சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. சென்ஸிட்டிவான தோல் வகைகள் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் இது பாதுகாப்பானது என்பதால், சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் ரெட்டினோலை விட இது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: