ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டிரை ஷாம்புகளை தலைமுடிக்கு உபயோகிப்பது நல்லதா..? கெட்டதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

டிரை ஷாம்புகளை தலைமுடிக்கு உபயோகிப்பது நல்லதா..? கெட்டதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

டிரை ஷாம்பு

டிரை ஷாம்பு

மற்ற திரவ ஷாம்புகளை விட உலர் ஷாம்புகளை நாம் பயன்படுத்தும் போது தலையில் தண்ணீர் ஊற்றி அலச தேவையில்லை. இதன் மூலம் நம்முடைய நேரம் மிச்சமாகிறது. இது அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே ஷாம்புகள் குறித்த செய்திகள் தான் ஹாட் டாப்பிக்காகப் பேசப்படுகிறது. ஷாம்புகளைப் பயன்படுத்தினால் கேன்சர் வரும் தகவலையடுத்து இதுவரை ஷாம்பு உபயோகித்த அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்த அச்சம் தேவையில்லை.

பொதுவாக நாம் தற்போது பயன்படுத்துவது திரவ ஷாம்புகள் தான். தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுவது டிரை ஷாம்பு எனப்படும் உலர் ஷாம்புகள் தான். இது என்ன டிரை ஷாம்புகள் என்ற கேள்வி அனைவருக்கும். எனவே முதலில் சாதாரண ஷாம்பகளுக்கும் உலர் ஷாம்புகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்பது பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

தற்போது மக்களிடம் புழக்கத்தில் உள்ள பாதி திரவ வடிவிலான ஷாம்புகள் தான் சாதாரண ஷாம்புகள் எனப்படுகிறது. தலையில் தண்ணீர் ஊற்றி நனைத்துவிட்டு ஷாம்பு போடுவோம். ஆனால் தலையில் தண்ணீர் ஊற்றி நனைக்காமல் முடிக்கு புத்துணர்ச்சியளிப்பதற்காகபவுடர் அல்லது ஸ்பேர வடிவில் உலர் ஷாம்புகளைப் பயன்படுத்துவார்கள். மக்களிடம் சமீப காலங்களாக இந்த ஷாம்புகள் தான் டிரெண்டாகியுள்ளது. இதை பயன்படுத்தினால் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் அதிகளவில் மக்களிடம் எழுந்துள்ளது.

உலர் ஷாம்புகளால் ஏற்படும் நன்மைகள் :

மற்ற திரவ ஷாம்புகளை விட உலர் ஷாம்புகளை நாம் பயன்படுத்தும் போது தலையில் தண்ணீர் ஊற்றி அலச தேவையில்லை. இதன் மூலம் நம்முடைய நேரம் மிச்சமாகிறது. இது அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும்.

எண்ணெய் பிசுபிசுப்பு உங்களது தலைமுடியை மிகவும் கடினமாக்குகிறது. ஆனால் உலர் ஷாம்புகளை நீங்கள் பயன்படுத்தும் போது வேர்கள் வரை சென்று புத்துணர்ச்சியாக்குகிறது.

குறிப்பாக உலர் ஷாம்புகளை அனைத்துத் தலைமுடிகளுக்கும் அப்படியே பயன்படுத்த முடியாது. சுருட்டை முடி உள்ளவர்கள் தலைமுடியை சீராக்க இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சுருட்டை முடியை உலர்த்திய பின், டிரை ஷாம்புகளைக் கொண்டு ட்ரீட் செய்த பிறகு முடியை பளபளப்புடன் சீராக்க முடியும்.

Also Read : பார்லரில் ஃபேஷியல் செய்த பின் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க...

உலர் ஷாம்புகளினால் பாதிப்பு ஏற்படுமா?

இன்றைக்கு உள்ள இயந்திர உலகத்தில் சீக்கிரம் பணிக்கோ அல்லது கல்லூரிக்கோ? செல்லும் போது உலர் ஷாம்புகளைப் பயன்படுத்துகிறார்கள் இன்றைய இளைஞர்கள். தற்போது உள்ள சூழலில் இதுப்போன்ற ஷாம்புகள் தேவை என்றாலும், அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது உடல் நலப்பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தும். குறிப்பாக பவுடர் அல்லது ஸ்பேர வடிவில் இந்த ஷாம்புகளை நாம் பயன்படுத்தும் போது தலையில் சில நேரங்களில் தேங்கியிருக்கும். இதனால் தலையில் எரிச்சல், வலி மற்றும் பொடுகு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

டிரை ஷாம்புகளில் சாதகம் மற்றும் பாதகம் என இரண்டு கலந்திருக்கும் என்பதால் இனி யோசித்து உபயோகியுங்கள். இல்லையென்றால் நம்முடைய முன்னோர்களைப் போல உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வெந்தயம், சீயக்காய் போன்றவற்றைத் தலைமுடிக்குப் பயன்படுத்துங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Dry scalp, Dry Shampoo, Hair care