ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் : எப்படி பயன்படுத்த வேண்டும்..?

சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் : எப்படி பயன்படுத்த வேண்டும்..?

கிளிசரின்

கிளிசரின்

கிளிசரின் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர் ஆகும். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது மென்மையான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். ஏனெனில் கிளிசரின் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதால், சருமம் புத்துணர்ச்சி பெற்று பளபளப்பாக மாறுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நிறமற்ற, மணமற்ற, இனிப்பு சுவை கொண்ட கிளிசரின் ஆனது பல்லாண்டு காலமாக சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்க்கரை, ஆல்கஹால் மற்றும் விலங்குகளின் மூலங்களில் இருந்து தயாரிக்கப்படும் பிசுபிசுப்பான இந்த திரவம் சோப்பு உள்ளிட்ட அழகு சாதன தயாரிப்பிலும், மருத்துவத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

கிளிசரின் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர் ஆகும். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது மென்மையான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். ஏனெனில் கிளிசரின் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதால், சருமம் புத்துணர்ச்சி பெற்று பளபளப்பாக மாறுகிறது.

வறட்சியை போக்கி, பொலிவான சருமத்தை தர உதவும் கிளிசரினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதில் உள்ள நன்மைகள் என்னென்ன என பார்க்கலாம்...

கிளிசரின் சருமத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது?

கிளிசரின் சருமத்திற்கான ஈரப்பதத்தை அதிகரிக்கவும், தக்கவைக்கும் உதவுகிறது. இதனால் வறட்சி குறைந்து சருமத்தின் மென்மை அதிகமாகிறது. முகத்தில் ஏற்படக்கூடிய தடிப்பு, உலர்ந்த திட்டுக்கள், தோல் அழற்சி ஆகியவற்றை சரி செய்ய கிளிசரின் பயன்படுகிறது.

கிளிசரின் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆபத்தான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. கிளிசரின் காயங்களை புத்துயிர் பெறவும், சரிசெய்யவும் மற்றும் விரைவாக குணப்படுத்தவும் உதவுகிறது.

சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

1. ஈரப்பதம்:

கோடை மற்றும் குளிர்காலத்தில் சருமம் சந்திக்கும் வறட்சியை போக்க கிளிசரின் பயன்படுகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை காக்க உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்பாக இருக்கும். ஹைலூரோனிக் அமிலம் மற்றும் சர்பிடால் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது கிளிசரின் சருமத்திற்கு அதிக ஈரப்பதம் கொடுக்கக்கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Also Read :  பீரியட்ஸ் நாட்களில் நாப்கின் சுகாதாரம் மட்டும் போதாது... இவற்றையும் தெரிந்துகொள்வது அவசியம்..!

2. வயதான அறிகுறிகளை குறைக்கும்:

கிளிசரின் பயன்பாடு, சருமத்தை காலப்போக்கில் முகத்தில் எழக்கூடிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.

3. முகப்பருவை குறைக்கும்:

கிளிசரின் சருமத்தை எரிச்சலில் இருந்து பாதுகாக்கும் மற்றும் முகப்பருவை தடுக்க உதவுகிறது. இதனால் தான் முகப்பரு சிகிச்சையிலும், அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

Also Read : சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா..? விளக்கும் ஆய்வு

4. காயங்களை குணப்படுத்தும்:

கிளிசரின் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. கிளிசரினில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காயங்களைச் சுற்றியுள்ள தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

5. சருமத்தை பளபளப்பாக்கும்:

கிளிசரின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுவது சருமத்தை பளபளப்பாக்கவும், மென்மையாக மாற்றவும் வைக்கிறது.

முகத்தில் கிளிசரின் பயன்படுத்தும் முறை:

- முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும்.

- பின்னர் காட்டன் டவல் கொண்டு முகத்தை மென்மையாக துடைத்தெடுக்க வேண்டும்.

- அதன் பின்னர் காட்டன் பஞ்சை கிளிசரினில் நனைத்து முகத்தின் மீது தடவவும்.

- கிளிசரின் சருமத்திற்குள் ஊடுருவ சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.

- இறுதியாக குளிர்ச்சியான தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்தவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Skincare