ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டீன் ஏஜ் வயதினர் மத்தியில் விஸ்வரூபமெடுக்கும் முடி உதிர்வு பிரச்சனை : என்ன காரணம்..?

டீன் ஏஜ் வயதினர் மத்தியில் விஸ்வரூபமெடுக்கும் முடி உதிர்வு பிரச்சனை : என்ன காரணம்..?

முடி உதிர்வு பிரச்சனை

முடி உதிர்வு பிரச்சனை

டீன் ஏஜ் வயதினருக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு தவறு நடக்கிறது என்றே அர்த்தம். பதின்ம வயதினருக்கு முடி உதிர பல காரணங்களால் உள்ளது. அதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சில காரணங்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பொதுவாக வயதாக ஆகத்தான் தலை முடி உதிரும். நம்மில் பலரும் நம் வாழ்நாளின் பிற்பகுதியில் தான் முடி உதிர்வை எதிர்கொள்வோம் / எதிர்கொள்கிறோம். ஆனால் சிலர் பதின்ம வயதிலேயே அதாவது தத்தம் டீன் ஏஜ் வயதிலேயே முடி உதிர்வை சந்திக்கின்றனர். அதாவது முடி உதிர்வு மற்றும் வழுக்கை சார்ந்த அச்சம் வயதானவர்கள் அல்லது பெரியவர்களுக்கு மட்டுமல்ல டீன் ஏஜில் உள்ளவர்களுக்கும் ஏற்பட தொடங்கி உள்ளது. இது கிட்டதட்ட அனைவருமே கவலைப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாக உருமாறி உள்ளது.

டீன் ஏஜ் வயதினருக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு தவறு நடக்கிறது என்றே அர்த்தம். பதின்ம வயதினருக்கு முடி உதிர பல காரணங்களால் உள்ளது. அதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சில காரணங்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.

ஒருவேளை நீங்கள் ஒரு டீன் ஏஜர் என்றால், நீங்கள் முடி உதிர்வு சிக்கலை எதிர்கொள்கிறீர்கள் என்றால், பின் வரும் காரணங்களை அறிந்து வைத்து கொள்வது நல்லது. தவிர பொதுவான முடி உதிர்வை சந்திக்கும் அனைவருமே கூட கீழ்வரும் காரணங்களின் மீது அதிக கவனம் செலுத்தலாம்.

டீன் ஏஜ் வயதினருக்கு முடி உதிர்வு ஏற்பட வழிவகுக்கும் காரணங்கள்:

1. ஹார்மோனல் மாற்றங்கள் (Hormonal changes)

2. போதிய ஊட்டச்சத்து இல்லாமை

3. அதிகப்படியான மன அழுத்தம்

4. உட்கொள்ளும் மருந்துகள்

5. ஓவர் ஸ்டைலிங் (Over-styling)

6. ட்ராக்ஷன் அலோபீசியா (Traction alopecia) - அதாவது உங்கள் தலைமுடியை மீண்டும் மீண்டும் இழுப்பதன் விளைவாக ஏற்படும் முடி உதிர்தல்.

7. அலோபீசியா அரேட்டா (Alopecia areata) - இது ஒரு ஆட்டோஇம்யூன் கோளாறு ஆகும், இது பொதுவாக கணிக்க முடியாத, திட்டு திட்டான முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.

8. டிரிகோட்டிலோமேனியா (Trichotillomania) - ஒருவர் தன் முடியை பிடித்து இழுக்க வேண்டும் என்கிற கட்டுப்படுத்த முடியாத தூண்டுதலை எதிர்கொள்ளும் ஒரு நிலை ஆகும்.

9.ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா (Androgenic alopecia)

10. சில மெடிக்கல் கண்டிஷன்ஸ்

11. கோவிட் தொற்றுநோய்

தொப்பையில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்க உதவும் 6 Plank Workouts..!

ஆம்! கோவிட் தொற்றுநோய்க்கும் முடி உதிர்வதில் பங்கு உள்ளது. டெலோஜென் (telogen) அல்லது ஷெட்டிங் (shedding) கட்டத்தில் முடி சுழற்சி முடுக்கிவிடப்படுவதால், குறிப்பாக கோவிட்க்கு பிறகு, டீன் ஏஜ் வயதினருக்கு மத்தியில் முடி உதிர்தல் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே முடி உதிர்வதைப் பற்றிய கவலையை எதிர்கொள்ளாமல் இருக்க டீன் ஏஜ் வயதினர் தத்தம் கல்லூரி காலங்களில் கல்வி கற்பது, மற்றவர்களுடன் சகஜமாக பழகுவது மற்றும் வயதுவந்த வாழ்க்கையைத் தொடங்குவது போன்ற அனுபவங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை டீன் ஏஜ் வயதில் மற்றும் 20-களின் முற்பகுதியில் நீங்கள் முடி உதிர்தலுக்கு ஆளானால், (பெரும்பாலும்) நாம் மேற்கண்ட 11 காரணங்களில் ஏதாவது ஒன்றின் விளைவாகவே அது ஏற்படலாம். ஆக முடிந்த வேகத்தில் ஒரு தலை முடி நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி உங்களின் தலை முடி பிரச்சனையை சரி செய்து கொள்ளவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Hair fall