Home /News /lifestyle /

ஒயிட்ஹெட்ஸ் என்றால் என்ன? இதனை எப்படி தடுக்கலாம்..

ஒயிட்ஹெட்ஸ் என்றால் என்ன? இதனை எப்படி தடுக்கலாம்..

காட்சி படம்

காட்சி படம்

Whiteheads Remedies: ஒயிட்ஹெட்ஸ் வராமல் தடுக்க பல வழிகள் உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் பலர் எதிர்கொள்ளும் சரும பிரச்சனைகளில் ஒன்று ஒயிட்ஹெட்ஸ் (Whiteheads). இதுபற்றி கூறும் நிபுணர்கள் வொயிட்ஹெட்ஸ் மிகவும் பொதுவானது மற்றும் இது காமெடோனல் (comedonal) அல்லது குறைந்த தர முகப்பரு வல்கேரிஸின் ஒரு வடிவமாக கருதப்படுகிறது என்கிறார்கள். முகப்பருவை 2 வகைகளாகப் பிரிக்கலாம் ஒன்று அழற்சியற்றது மற்றும் மற்றொன்று அழற்சி ஏற்படுத்த கூடியது. இதில் மேலே நாம் பார்த்த காமெடோனல் அழற்சியற்ற முகப்பருவாகும். இதில் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் ஆகியவையும் அடங்கும்.

காமெடோனல் முகப்பரு காமெடோ (comedo) என்ற வார்த்தையிலிருந்து அதன் பெயரை பெற்றது. அதாவது துளைகள் (pores). pores என்பது தோலில் உள்ள சிறிய திறப்புகள், இவை எண்ணெய் மற்றும் வியர்வையை வெளியிடுகின்றன. மேலும் இது எந்த வகையான முகப்பருவுக்கும் pores தான் மூலம் என்கிறார் மும்பையை சேர்ந்த பிரபல தோல் மருத்துவர் டாக்டர் அசீம் ஷர்மா.

ஒயிட்ஹெட்ஸ் ஏன் ஏற்படுகிறது.?

இறந்த சரும செல்கள், செபம் (sebum-இயற்கை எண்ணெய்) மற்றும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் உங்கள் சரும துளைகளை அடைக்கும் போது இந்த வகை முகப்பரு அதாவது ஒயிட்ஹெட்ஸ் ஏற்படுகிறது. சிறிய வெள்ளை புள்ளிகள் துளைக்குள் மூடப்பட்டு சிறு சிறு கொப்பளம் போல ஒயிட்ஹெட்ஸ் காட்சியளிக்கும். தோள்பட்டை, முகம், மார்பு, கழுத்து மற்றும் முதுகில் ஒயிட்ஹெட்ஸ் ஏற்படுவது பொதுவானது. ஒயிட்ஹெட்ஸ்களின் அளவு மாறுபடலாம் மற்றும் சில சமயங்களில் இவை மிகவும் சிறியதாக இருக்கும், இவை கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாதவை என்றும் குறிப்பிடுகிறார் டாக்டர் அசீம் ஷர்மா.

also read : சைவ உணவு பழக்கம் கொண்டவரா? எடை குறைக்க உதவும் புரோட்டின் நிறைந்த உணவுகள் இதோ

ஒயிட்ஹெட்ஸை சரி செய்ய உதவும் வழிகள்..

ஒயிட்ஹெட்ஸ்களுக்கு சிகிச்சையளிக்க அல்லது வராமல் தடுக்க பல வழிகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..

ஸ்டீம் (Steam)

நீராவியில் சருமத்தை படும்படி செய்வதால் சருமத்தில் உள்ள துளைகள் தற்காலிகமாக திறக்கின்றன. எனவே ஒயிட்ஹெட்ஸ் உள்ளவர்கள், ஒயிட்ஹெட் உள்ள தங்களின் உடல் பகுதியை தொடர்ந்து அல்லது ஒயிட்ஹெட்ஸ் போகும் வரை நீராவி படும்படி செய்வது நல்லது.

also read : கொழுப்பு நீக்கப்படாத பால் இவ்வளவு ஆரோக்கியமானதா? நிபுணர்கள் விளக்கம்

தேயிலை எண்ணெய் (Tea tree oil):

நுண்ணுயிர் எதிர்ப்பு (anti microbial) மற்றும் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்புகள் என இரண்டையும் கொண்டுள்ளது தேயிலை மர எண்ணெய். எனவே பெரும்பாலான ஃபேஸ் வாஷ் மற்றும் கிளீனர்ஸ் மற்றும் டோனர்ஸ் டீ ட்ரீ ஆயிலை ஒரு மூலப்பொருளாகக் கொண்டுள்ளன. தேயிலை மர எண்ணெய் அடங்கிய தயாரிப்புகளை ஒரு காட்டன் பேட் உதவியுடன் ஒயிட்ஹெட்ஸில் நேரடியாக பயன்படுத்தலாம்.

நொறுக்கு தீனிகளை தவிர்க்கவும்..

ஜங்க் ஃபுட் அல்லது நன்றாக வறுத்த உணவுகள் எண்ணெய் சருமம் ஏற்பட வழிவகுக்கும். ஆயில் ஸ்கின் ஒயிட் அல்லது ப்ளாக்ஹெட்ஸ்களை ஏற்படுத்தும். எனவே, எண்ணெய் உணவுகளை தவிர்த்து மற்றும் ஃபிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது எப்போதும் நல்லது.

க்ளீன்சிங் (Cleansing):

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 முறையாவது உங்கள் ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற க்ளென்சர் அல்லது ஃபேஸ் வாஷ் மூலம் சருமத்தை கழுவுவது நல்ல பலனை தரும்.

also read : டோஃபு பன்னீர் உடலுக்கு நல்லதா? கட்டுக்கதைகளும்..உண்மைகளும்..

சரும பராமரிப்பு வழக்கம்..

தவறாமல் சீரான இடைவெளியில் செய்து கொள்ளப்படும் சரும பராமரிப்பு முகப்பருவை மட்டுமின்றி, துளைகள், முகப்பரு அடையாளங்கள் உட்பட ஒட்டுமொத்த சிக்கல்களை தீர்த்து நீண்ட காலம் தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

தண்ணீர்..

தினமும் போதுமான அளவு அல்லது தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஒட்டுமொத்த சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு நல்ல தோல் பராமரிப்பு முறையை தவறாமல் கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று கூறி இருக்கிறார் டாக்டர் அசீம் ஷர்மா.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Skin Care

அடுத்த செய்தி