Home /News /lifestyle /

Activated Charcoal-ஐ முகத்தில் பூசுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன..?

Activated Charcoal-ஐ முகத்தில் பூசுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன..?

ஆக்டிவேட்டட் சார்கோல்

ஆக்டிவேட்டட் சார்கோல்

ஆக்டிவேட்டட் சார்க்கோல் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவமாகும். இது உங்கள் சரும துளைகளில் படிந்துள்ள தூசு, மாசு, அழுக்கு ஆகியவற்றை அகற்ற பயன்படுகிறது.

நம் முன்னோர்கள் பல் துலக்க கரித்தூளை பயன்படுத்தினர், இன்றைய இளம் தலைமுறையினர் முகத்தை பளபளப்பாக்க கரித்தூளை பூசிக்கொள்கின்றனர். ’என்னது முகத்திற்கு கரித்தூளா?’ என நீங்கள் ஆச்சர்யமாக கேட்கலாம். புவி வெப்பமடைதல், அதிகரித்து வரும் மாசின் அளவுகள், வேலைப்பளு, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை நமக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கிறது. இது நாளாடைவில் நமது முகத்தில் பிரதிபலிக்க தொடங்குகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்கவும், மாசு, சூரிய வெப்பம் போன்ற பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் இயற்கையால் மட்டுமே இணையற்ற தீர்வை தர முடியும். அப்படி இயற்கையுடன் சேர்த்து நவீன தொழில்நுட்பமும் சேர்ந்து ‘ஆக்டிவேட்டட் சார்க்கோல்’ கிடைக்கிறது. இந்த சார்க்கோல் ஆனது சருமத்தை சருமதுளைகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்றி சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

ஆக்டிவேட்டட் சார்க்கோல் என்றால் என்ன?

ஆக்டிவேட்டட் சார்க்கோல் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவமாகும். இது உங்கள் சரும துளைகளில் படிந்துள்ள தூசு, மாசு, அழுக்கு ஆகியவற்றை அகற்ற பயன்படுகிறது. ஆக்டிவேட்டட் சார்க்கோல் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, சரும நிறத்தை சீராக்க உதவுகிறது. ஆக்டிவேட்டட் சார்க்கோல் பெரும்பாலும் ஃபேஸ் ஸ்க்ரப்கள், ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் வாஷ்கள் மற்றும் சோப்புகளாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

சரும துளைகள் என்றால் என்ன தெரியுமா?

ஓபன் போர்ஸ் என்பது திறந்திருக்கும் சருமத்தின் துளைகள் ஆகும். இதில் சிலருக்கு துளைகள் சிறியதாகவும், சிலருக்கு துளைகள் பெரியதாகவும் இருக்கும். சரும துளைகள் திறந்து இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு, தூசி மற்றும் அழுக்குகள் அதில் படிந்து உங்களுக்கு சிக்கலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.



ஆக்டிவேட்டட் சார்க்கோல் நன்மைகள்:

துளைகளை சுத்தப்படுத்துகிறது:

ஆக்டிவேட்டட் சார்கோல் சருமத்தில் ஏற்படும் சிறிய மற்றும் பெரிய அளவிலான துளைகள் மாசுக்கள், அழுக்கு, சுரப்பிகளால் அடைக்கப்படுகிறது. இது எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பரு போன்ற பிரச்சனைகளை கொண்டு வரும். எனவே ஆக்டிவேட்டட் சார்க்கோல் கொண்டு முகத்தை சுத்தப்படுத்துவது துளைகளில் இருக்கும் அழுக்குகளை சுத்தப்படுத்த உதவுகிறது. இது தொற்று மற்றும் முகப்பருவை குறைக்க உதவுகிறது.

சமந்தா டூ நயன்தாரா வரை... தென்னிந்திய நடிகைகளின் ஹேர் கலர் சீக்ரெட்!

முகப்பரு மற்றும் பிரேக்அவுட்களைக் குறைத்தல்:

ஆக்டிவேட்டட் சார்க்கோல் கொண்டு சருமத்தை அடிக்கடி சுத்தப்படுத்தினால், முகப்பரு மற்றும் பிரேக்அவுட்கள் உருவாகும் அபாயம் குறைவாக இருக்கும். அதிகப்படியான வியர்வை, அல்லது திறந்த துளைகளில் அழுக்கு கலப்பது அல்லது முகத்திற்கான மசாஜ் அல்லது மேக்கப்பிற்கு பயன்படுத்தும் டூல்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் தொற்று போன்ற காரணங்களால் இந்த பிரச்சனைகள் உருவாகலாம். எனவே ஆக்டிவேட்டட் சார்க்கோலுடன் கூடிய தயாரிப்புகள் சருமத்தை சுத்தப்படுத்த உதவும், இதனால் அடிக்கடி ஏற்படும் வெடிப்புகளை தவிர்க்கலாம்.



ஸ்கின் எக்ஸ்போலியேட்டிங்:

உங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்ததாக இருந்தாலும், ஆண்டின் எந்த பருவநிலையிலும் நீங்கள் ஸ்கின் எக்ஸ்போலியேட்டிங் எனப்படும் உரித்தல் செயல்முறையை மேற்கொள்ளலாம். ஸ்கின் எக்ஸ்போலியேட்டிங் செய்ய ஆக்டிவேட்டட் சார்க்கோல் கலந்த பொருட்களை பயன்படுத்துவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சீரான சரும நிறத்தையும் தருகிறது.

அடிக்கடி ஷாம்பூவை மாற்றுபவரா நீங்கள்..? இந்த 5 ஆயுர்வேத முறைகளை பயன்படுத்தி கூந்தலை வலுவாக்குங்கள்

எண்ணெய் தன்மை:

ஆக்டிவேட்டட் சார்க்கோல் சருமத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்க கூடியது. அதேபோல் வறண்ட சருமத்தை நீரேற்றம் செய்யவும் இது பயன்படுகிறது. உங்கள் சரும வகைகளுக்கு ஏற்ற ஆக்டிவேட்டட் சார்க்கோல் கொண்ட ஸ்கின் கேர் தயாரிப்புகள் கடைகளில் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நச்சு நீக்கம், சரும சீரமைப்பு: ஆக்டிவேட்டட் சார்க்கோல் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு சீரான பளபளப்பைக் கொடுக்கவும் உதவுகிறது. இந்த மூலப்பொருளின் வழக்கமான பயன்பாடு, தோல் அல்லது சீரற்ற சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Skincare

அடுத்த செய்தி