தற்போது பார்லர் சென்று உடல் அழகைப் பராமரித்தாலும் வீட்டில் சில அழகுக் குறிப்புகளை செய்து வந்தால்தான் ஷைனிங்காக இருக்கும். எனவே வாரம் ஒரு முறையேனும் உங்களுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி ரிலாக்ஸாக இந்த அழகுக் குறிப்புகளை செய்து வாருங்கள். இதை தொடர்ந்து செய்து வர பார்லர் கூட செல்லத் தேவையில்லை.
மகிழ்ச்சியான குளியல் : தினமும் அவசர அவசரமாக குளித்துவிட்டு வேலைக்காக ஓடுவதை தவிர்க்க இயலாது. ஆனால் விடுமுறை நாளில் ரிலாக்ஸாக மன அமைதியோடு உங்கள் குளியலை துவங்குங்கள். அதற்கு முன் பிடித்த இசையைக் கேளுங்கள். நீங்களாக உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் தசைகள் ரிலாக்ஸாகி இரத்த ஓட்டம் சீராகும். 10 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். இப்படி செய்ய உடல் , மனம் இரண்டுமே அமைதியான உலகத்திற்கு சென்றுவிடும்.
பெண்கள் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டால் எலும்புகள் பலவீனமாகுமா..?
தலை முடி பராமரிப்பு : வாரம் ஒருமுறையேனும் தலை முடியைப் பராமரிக்க நேரம் ஒதுக்குங்கள். அதற்கு தலைமுடி மாஸ்க் அப்ளை செய்து , மசாஜ் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
இதற்கு எளிய முறையில் 1 ஸ்பூன் தேன் , 1 முட்டை மற்றும் 1 ஸ்பூன் ஆப்பில் சிடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து தலையின் வேர்களில் அப்ளை செய்யுங்கள். அரை மணி நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் குளித்துவிடுங்கள்.
உடல் பராமரிப்பு : உடலில் சேர்ந்திருக்கும் இறந்த செல்களை வாரம் ஒரு முறையேனும் நேரம் ஒதுக்கி நீக்குவது அவசியம். எனவே பாடி ஸ்க்ரப் பயன்படுத்தி தேய்த்துக் குளியுங்கள். இதனால் புதிய செல்கள் உருவாக இளமையாக தோன்றுவீர்கள்.
ஒத்துவராத காதலிலிருந்து எப்படி விலகுவது? பிரச்னையே இல்லாமல் விலக இதோ டிப்ஸ்
மெனிகியூர் பெடிகியூர் : கைக் கால்களில் உள்ள நகங்கள் , விரல்களுக்கு இடையில் அழுக்குகள், பாக்டீரியாக்கள் ஒலிந்திருக்கும். அவற்றை அழிக்க மெடிகியூர், மெனிகியூர் செய்வது அவசியம். இதை நீங்கள் வீட்டிலேயே ரிலாக்சாக செய்யலாம்.
சுடு தண்ணீரில் உப்பு கலந்து கை , கால்களை ஊற வைத்து தேய்க்க அழுக்குகள் வந்துவிடும். பின் மாய்ஸ்சரைஸர் தடவி நெயில் பாலிஷ் வையுங்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.