தலைமுடி மட்டும் சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை தரும் பீட்ரூட்.. முக்கியமான சருமப் பராமரிப்பு டிப்ஸ்களை இங்கே பாருங்கள்..

தலைமுடி மட்டும் சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை தரும் பீட்ரூட்.. முக்கியமான சருமப் பராமரிப்பு டிப்ஸ்களை இங்கே பாருங்கள்..

பீட்ரூட்

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும், கூந்தலுக்கும் பல நன்மைகளை செய்யக்கூடியது இந்த பீட்ரூட்.

  • Share this:
பீட்ரூட் என்பது நிலத்திற்குள் விளையக்கூடிய ஒரு கிழங்கு. பெரும்பாலும், நிலத்திற்கு அடியில் முளைக்கும் கிழங்குகளினால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் இல்லை என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பீட்ரூட் அதற்கு விதிவிலக்காக பல நன்மைகளைத் தரக்கூடியது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும், கூந்தலுக்கும் பல நன்மைகளை செய்யக்கூடியது இந்த பீட்ரூட். சரி வாருங்கள் பீட்ரூட்டின் நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.

பிங்க் சருமம்:

பலருக்கும் பிங்க் கலர் சருமம் பிடிக்கும். உங்கள் சருமம் வறண்டு இருந்தாலோ, பிங்க் கலராக மாற நீங்கள் விரும்பினாலோ, பீட்ரூட் துண்டுகளை, தயிர் சேர்த்து அரைத்து ஒரு பேஸ்ட்போல செய்து கொள்ளுங்கள். அதோடு, தேவைப்பட்டால் பாதாம் எண்ணெய் சிறிது கலந்து முகத்திலும், உடலிலும் தடவி 30 நிமிடங்கள் ஊற விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து பாருங்கள். அழகான சருமம் கிடைக்கும். இதை வாரத்திற்கு 3 முறை ட்ரை செய்யுங்கள்.

கரு வளையங்களுக்கான தீர்வு:

சிறியளவு பீட்ரூட் சாறுடன், தக்காளி சாறை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் அழுத்தமான கரு வளையங்கள், முகப்பரு, ப்ளாக் ஹெட்ஸ், வைட் ஹெட்ஸ் ஆகியவை நீங்கும். மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த் தொற்றையும் குணப்படுத்தும். முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை பசையை பீட்ரூட் நீக்கும். மேலும், பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் C ஆனது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். கரு வளையத்தை போக்க இன்றே மேற்சொன்ன டிப்ஸை ட்ரை செய்திடுங்கள்.



உதட்டில் உள்ள கருமையைப் போக்கும் பீட்ரூட்:

தேனில் சர்க்கரை கலந்து உதட்டில் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் உதட்டில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உதட்டிற்கு எண்ணெய் பதமும் கிடைக்கும். இதனால் உதடு நிறம் மாறி மென்மையாகவும் இருக்கும். பீட்ரூட் சாறை தேனில் நன்கு கலக்க கிரீம் பதத்தில் வரும். அதை உதட்டில் தினமும் தடவிக்கொள்ள நிறம் மாறும்.

முடி உதிர்வை குறைக்கும் பீட்ரூட்:

பீட்ரூட் இலைகளை எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க விட்டு, பின் நீரை வடிகட்டி விட்டு, இலைகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ஹென்னா சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் 3 முறை செய்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

சரும சுருக்கத்தை குணமாக்கும் பீட்ரூட்:

பலருக்கும் இளம் வயதிலேயே சரும சிக்கல்கள் வந்துவிடுகின்றன. சருமம் உலர்ந்து விடுதல், சரும சுருக்கம், போன்ற சிக்கல்கள் நம்மை வயதானவர் போல தோற்றமளிக்கும். இதற்கு ஒரு சூப்பரான ஐடியா உள்ளது. பீட்ரூட்டை பால் மற்றும் தேனுடன் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து சுருக்கம் உள்ள இடத்தில் வாரத்திற்கு 3 முறை தடவி வரவும். சில மாதங்களுக்கு பிறகு சுருக்கம் இருந்ததற்கான அடையாளமே காணாமல் போய்விடும்.



பொடுகை நீக்கும் பீட்ரூட்:

பீட்ரூட்டில் உள்ள சிலிக்கா தலையில் உள்ள பங்கஸ்ஸை எதிர்த்து போராடும். வறண்ட தலையையும், தொற்றுக்களையும், பொடுகு ஏற்படுத்தும் பாக்டீரியாவையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது இந்த பீட்ரூட். வேப்பிலை சாறுடன், பீட்ரூட் சாறையும் கலந்து தலையில் தேய்த்துவர தலையில் ஏற்படும் அரிப்பை சரி செய்யும். மேலும், கூந்தல் மென்மையாகத் தோன்றும். இதோடு கேரட் சாறையும் சேர்த்து கூந்தலுக்கு தேய்த்துக்கொண்டால், கூந்தல் ப்ளீச் செய்தது போல அழகான நிறம் கிடைக்கும்.

இப்படி ஒரு அட்டகாசமான மேஜிக் பலன்களை கொண்டிருக்கும் பீட்ரூட்டின் மகத்துவத்தை பற்றி இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பீட்ரூட் உதடுகளுக்கு மட்டும் நிறத்தை தராது, கூந்தல், சருமம், என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு இந்த பீட்ரூட் அள்ளித் தருகின்றது.

 
Published by:Sivaranjani E
First published: