முடி பராமரிப்பு என்பது எப்போதுமே சற்று ட்ரிக்கியான விஷயமாக உள்ளது. முடி வளர்ச்சிக்கு உதவும் பல வேறுபட்ட அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன. உச்சந்தலை மற்றும் கூந்தலில் அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்துவது முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
முடி வளர உதவுவதில் இருந்து முடிக்கு வலிமை மற்றும் பிரகாசம் சேர்ப்பது வரை அத்தியாவசிய எண்ணெய்கள் பல விதங்களில் உதவி செய்கின்றன. கூந்தலுக்கு நன்மை பயக்கும் அத்தியாவசிய எண்ணெய்களில் குறிப்பிடத்தக்கது பெப்பர்மின்ட் ஆயில் (மிளகுக்கீரை எண்ணெய்). மூலிகையான புதினாவின் வகைகளில் ஒன்று தான் இந்த பெப்பர்மின்ட்.
பெப்பர்மின்ட் மிகவும் தனித்துவமாக மற்றும் சிறப்பு வாய்ந்ததாக இருக்க காரணம், இதன் menthol எனப்படும் கலவை. இது பெப்பர்மின்ட்டிற்கு தனித்துவசுவை, வாசனை மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது. உணவு மற்றும் பானங்களில் சுவையூட்ட பெப்பர்மின்ட்டை பயன்படுத்தினாலும், இந்த மூலிகையை எண்ணெய் வடிவில் பயன்படுத்தும்போது அதிக நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. பெப்பர்மின்ட் ஆயிலில் இரும்பு, மக்னீசியம், தாதுக்கள், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் அரிப்புகளை தணிக்க உதவுகிறது.
கூந்தலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மிளகுக்கீரை எண்ணெயை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை கீழே பார்க்கலாம்.
பாதாம் எண்ணெயுடன் மசாஜ்:
அதிக அளவு வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் ஸ்வீட் பாதாம் எண்ணெய் உச்சந்தலையில் பயன்படுத்த ஒரு சிறந்த எண்ணெயாகும். இதோடு பெப்பர்மின்ட் ஆயிலையும் கலந்து பயன்படுத்துவது முடிக்கு அற்புத நன்மைகளை தருகிறது. ஒரு சிறிய கடாயில்2 டேபிள் ஸ்பூன் ஸ்வீட் பாதம் ஆயிலை எடுத்து கொண்டு, அதில் 3 துளிகள் பெப்பர்மின்ட் ஆயிலை நன்கு கலக்கி லேசாக கொதிக்க வைக்கவும். பின் இந்த ஆயில் மிக்ஸிங்கை உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை கொண்டு தலைக்கு குளிக்கலாம்.
Also Read : சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் : எப்படி பயன்படுத்த வேண்டும்..?
பெப்பர் மின்ட் ஆயில் மின்ட் மாஸ்க்:
இந்த ஹேர் மாஸ்க்கை ரெடி செய்ய நீங்கள் ¼ கப் சோர் க்ரீம் (புளிப்பு க்ரீம்), 1 டேபிள்ஸ்பூன் தேன், 4 - 6 துளிகள் பெப்பர்மின்ட் ஆயில் எடுத்து கொள்ள வேண்டும். இவற்றை நன்கு மிக்ஸ் செய்து ஹேர் மாஸ்க் தயார் செய்து கொள்ளுங்கள். பின் தலை முழுவதும் இந்த ஹேர்மாஸ்க்-ஐ தடவி 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின் உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரால் வாஷ் செய்யவும்.
தேங்காய் எண்ணெயுடன் மசாஜ்:
அத்தியாவசிய எண்ணெயாக குறிப்பிடப்படும் பெப்பர்மின்ட் ஆயிலை தலையில் தடவுவதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், சோர்வை போக்கும் மற்றும் அரிப்பை தணிக்கும். 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் பெப்பர்மின்ட் ஆயிலை சேர்த்து உச்சந்தலையில் ஊற்றி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு தலைக்கு குளிக்கவும்.
Also Read : நெய் பயன்படுத்தி குளிர் காலங்களில் ஏற்படும் சரும வறட்சியை போக்குவது எப்படி?
ரோஸ்மேரி ஆயிலுடன்..
ரோஸ்மேரி ஆயில் முடியை பலப்படுத்தி, அதன் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதன் நன்மைகளை பெப்பர்மின்ட் ஆயிலுடன் சேர்த்து பெற கீழே குறிப்பிடுவதை போல் செய்து பாருங்கள். 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2 துளிகள் பெப்பர்மின்ட் ஆயில் மற்றும் ஒரேஒரு துளி ரோஸ்மேரி ஆயில் சேர்த்து கொள்ளுங்கள். இந்த 3 ஆயில்களின் கலவையை லேசாக சுட வைத்து தலைக்கு தடவி சுமார் 15 மிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு தலைமுடியை வழக்கம் போல அலசி கொள்ளுங்கள்.
ஷாம்பு அல்லது கண்டிஷ்னருடன்..
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டிஷ்னருடன் பெப்பர்மின்ட் ஆயிலை சேர்த்து பயன்படுத்துவது ஆரோக்கியமான கூந்தலை பெற மற்றொரு சிறந்த வழி. ஷாம்பு அல்லது கண்டிஷ்னருடன் அதிகபட்சம் சுமார் 6 துளிகள் வரை பெப்பர்மின்ட் ஆயில் சேர்க்கலாம், அதற்கு மேல் சேர்க்க வேண்டாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair growth, Hair oil