ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வயதாலும் பிரகாசிக்கும் அழகை பெற வேண்டுமா..? உங்களுக்கான சூப்பர் சீக்ரெட் இதோ...

வயதாலும் பிரகாசிக்கும் அழகை பெற வேண்டுமா..? உங்களுக்கான சூப்பர் சீக்ரெட் இதோ...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நம்முடைய விழித்திருக்கும் நேரத்தை சிறப்பாக்குவதில் தூக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இது நமது செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி சுறுசுறுப்பாக மற்றும் ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பலரும் வயதாகி விட்டால் சருமம் பொலிவிழந்து, முடி நரைத்து, சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்பட்டு முதுமை தோற்றத்தை பெறுகிறார்கள். இது பொதுவானது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வாழ்நாள் முழுவதும் நம்மால் அழகான தோற்றத்துடன் இருக்க முடியுமா..!

நமது பதிலே வாய்ப்பில்லை என்பதாக தான் இருக்கும். ஆனால் பிரபல ஹெல்த் கோச் மற்றும் நியூட்டிரிஷியனான வோன் டோலெகோவ்ஸ்கியின் (Won Dolegowski) கூற்றுப்படி, வாழ்நாள் முழுவதும் அழகுடன் இருப்பது சாத்தியம். இது தொடர்பான தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில், ஒருவருக்குஉணர்வு ரீதியாக முதுமை அறிகுறிகள் ஏற்படுவதற்கு வயது மட்டுமே காரணியல்ல மாறாக அவரது பழக்கவழக்கங்கள், நடத்தைகள், கடைபிடிக்கும் வாழ்க்கை முறைகள் உள்ளிட்டவைகள் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன என கூறுகிறார்.


ஒருவர் தனது 40 வயதை கடந்த பிறகும் கூட எப்படி சிறப்பாக, அழகாக இருப்பது & தோற்றமளிப்பது என்பதற்கான சில முக்கிய டிப்ஸ்களையும் டோலெகோவ்ஸ்கி ஷேர் செய்து இருக்கிறார். நீங்கள் 20-30 வயதுடையவர் என்றாலும் இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் எதிர்கால பிரைட் லுக்கை உறுதி செய்து கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

40 வயதிலும் அதற்குப் பிறகும் அழகாக உணர உதவும் சில அற்புதமான வழிகள் இங்கே:

வெயிட் லிஃப்டிங் : வாரத்திற்கு 3 - 4 முறை வெயிட் லிஃப்டிங்கில் ஈடுபடுவது உடலை வலுவாக வைக்க உதவுவது மட்டுமல்ல வயது ஏறினாலும் ஃபிட்டாக இருக்க உதவி உங்கள் தோற்றத்தை அழகாக காட்டுகிறது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவும் வெயிட் லிஃப்டிங் உன்மையில் இளமையின் ஊற்று என்று குறிப்பிட்டுள்ளார் டோலெகோவ்ஸ்கி.
நன்றியுணர்வு : 40 வயதை கடந்தாலும் உங்கள் கட்டுப்பாடில் இல்லாத விஷயங்களுக்காக கவலைப்படுவதை அல்லது மனஅழுத்தம் கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏராளமான நல்ல விஷயங்களை பார்த்திருப்பீர்கள் மற்றும் பெற்றிருப்பீர்கள். அதை நினைத்து உங்களது வாழ்க்கையை உற்சாகமாக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்துள்ள நேர்மறை விஷயங்களுக்காக நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணருங்கள், நன்றியுணர்வை வளர்த்து கொள்ளுங்கள்.
வயதாகிவிட்டது என்ற ஃபீலை நிறுத்துங்கள் : உங்கள் கவலை கொள்ள செய்யும் முக்கியமான ஒன்று வயதாகி கொண்டே செல்கிறதே என்ற உங்களது கவலை. இந்த கவலை அதிகரிப்பது உங்கள் சருமம் இன்னும் முதுமையடைய வழிவகுக்கும். வயதை பற்றி சிறிதும் சிந்திக்காமல் எப்போதும் போல கவலையின்றி, ஜாலியாக உங்கள் பொழுதை கழிப்பது, உங்களுக்கு பிடித்த விஷயங்களை தயக்கமின்றி செய்வது உங்களை இளமையானவராக காட்டும்.
தூக்கம் : நம்முடைய விழித்திருக்கும் நேரத்தை சிறப்பாக்குவதில் தூக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இது நமது செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி சுறுசுறுப்பாக மற்றும் ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே தினசரி 7 - 8 மணிநேர நிம்மதியான, இடையூறற்ற தூக்கம் ஆரோக்கியத்தை மட்டுமின்றி தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.
வாக்கிங் : தினசரி அரைமணி நேரம் தவறாமல் விறுவிறுப்பாக வாக்கிங் செல்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. நாம் நடக்கும் போது இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது சருமத்திற்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் அழகிய தோற்றத்திற்கு உதவுகிறது. கூடவே நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த டயட் : உங்களது உணவு பழக்கம் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல சரும பராமரிப்பிலும் பெரும் பங்கு வகிக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளே சென்றால் தான் வெளியே இருக்கும் சருமமும் ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகள் பளபளப்பான, ஹைட்ரேட் சருமத்தை தருகின்றன. 1000 கலோரிகளுக்கு 14 கிராம் ஃபைபர் சத்து உடலில் சேர்வதை போல் உங்கள் டயட் இருக்க வேண்டும்.
மதுவுக்கு நோ : நமது தூக்கம், செயல்திறன், மனநிலை, அறிவாற்றல் செயல்பாடு, குடல் ஆரோக்கியம், ஹார்மோன்கள், ரத்த சர்க்கரை உள்ளிட்ட ஆரோக்கிய உடலுக்கு அடிப்படையான பலவற்றில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது மது பழக்கம். கூடுதலாக தோற்றத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. எனவே நீங்கள் மது பிரியர் என்றால் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை கைவிட்டு விடுங்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Beauty parlour, Beauty Tips, Fashion Tips