தண்ணீர் குடிப்பதாலும் சருமம், கூந்தல் அழகைப் பராமரிக்கலாம்.. எப்படி தெரியுமா?

தண்ணீர் அருந்துங்கள் : மழைக்காலத்தில் உடல் வெப்பத்தை அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் உள்ள நிர் விரைவில் வற்றத்தொடங்கும். இதை சரிசெய்ய அடிக்கடி நீர் அருந்துங்கள். மழைக்காலத்தில் தாகம் இருக்காது என்றாலும் நீங்களாகவே தண்ணீர் அருந்த நினைவுபடுத்தி அருந்துங்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் சருமம் வறட்சியின்றி போதுமான நீரேற்றத்தைப் பெறுகிறது. இதனால் முகப்பருக்கள் உண்டாவதையும் தடுக்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆரோக்கியத்திற்காக தண்ணீர் குடிக்கச் சொல்வது அழகைப் பராமரிக்கவும் பயன்படும் என்பது தெரியுமா? அவை எந்த மாதிரியான அழகுப் பயன்களை அளிக்கிறது என தெரியுமா..?

முகப்பருக்கள் , சுருக்கங்கள் இல்லா அழகு : ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் சருமம் வறட்சியின்றி போதுமான நீரேற்றத்தைப் பெறுகிறது. இதனால் முகப்பருக்கள் உண்டாவதையும் தடுக்கலாம். முகப்பருக்கள் இருந்தாலும் அகற்றலாம்.

அதோடு சுருக்கங்கள் விழாமல் இளமையான சரும அழகைப் பெறலாம். இதனால் இளமையிலேயே முதிர்ந்த தோற்றம் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். தொடர்ந்து தண்ணீர் அருந்துவதைப் பின்பற்றினால் பளபளப்பான பொலிவான முக அழகு கிடைக்கும்.தலை முடி பொலிவு : தலையிலும் வறட்சி காரணமாகவே பொடுகுத் தொல்லை ஏற்படுகிறது. இதனால் கூந்தலும் சேதாரமடைகிறது. இதற்குக் காரணமும் போதுமான நீரின்மையே. இதை சரி செய்ய பெரிய அளவில் மெனக்கெடாமல் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தலே நல்லது. தலைமுடியும் மென்மையான பொலிவுடன் காட்சியளிக்கும்.

இவைத் தவிர தண்ணீர் நச்சு நீக்கியாகவும் செயல்படும் என்பதால் உடலை சுத்திகரிக்க நீரைத் தவிர சிறந்த குறிப்பு இருக்க முடியாது. அதேசமயம் அழகைப் பராமரிக்க நேரமில்லை. பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் கொண்டோருக்கும் சிறந்த வழி தண்ணீர் குடிப்பதுதான். இதனால் ஆரோக்கியமும் கிடைக்கும். அழகும் கிடைக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Sivaranjani E
First published: