Home /News /lifestyle /

பளபளப்பான சருமத்துக்கு இயற்கையான 8-ஸ்டெப் ஃபிரெஞ்ச் ஃபேஷியல் வழக்கத்தை பின்பற்றுங்கள்!

பளபளப்பான சருமத்துக்கு இயற்கையான 8-ஸ்டெப் ஃபிரெஞ்ச் ஃபேஷியல் வழக்கத்தை பின்பற்றுங்கள்!

Skin care

Skin care

French Facial Routine | ஃபிரெஞ்ச் ஃபேஷியல் பல ஆண்டுகளாக மிகவும் மாற்றமடைந்து வருவதால், இந்த சரும பராமரிப்பு கலாச்சாரம் இந்திய பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இதிலிருந்து இந்திய பெண்கள் கற்று கொள்ள நிறைய இருக்கிறது என்று மேரி கோர் இந்தியாவின் நிறுவனர் வந்தினி குப்தா கூறி இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
அழகான மற்றும் குறைபாடற்ற சருமத்தை பெற மக்கள் நிறைய விஷயங்களை முயற்சி செய்கிறார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ள ஸ்கின் கேர் விருப்பங்களும் அடங்கும். கொரிய மற்றும் ஜப்பானிய தோல் பராமரிப்பு போன்ற பிரபலமான ஸ்கின் கேர் பராமரிப்பு முறைகள் இந்திய பண்களிடமிருந்து பெரும் பாராட்டை பெற்றுள்ளது. ஏனெனில் இவை அவர்களின் நல்ல முடிவுகளை தந்து சருமம் சார்ந்த கவலைகளை நிவர்த்தி செய்துள்ளது.

இந்த வரிசையில் சமீபத்தில் ஃபிரெஞ்ச் சரும பராமரிப்பு வழக்கம் (French skincare routine) மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் பலர் இந்த டிரெண்டை முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஃபிரெஞ்ச் ஃபேஷியல் பல ஆண்டுகளாக மிகவும் மாற்றமடைந்து வருவதால், இந்த சரும பராமரிப்பு கலாச்சாரம் இந்திய பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இதிலிருந்து இந்திய பெண்கள் கற்று கொள்ள நிறைய இருக்கிறது என்று மேரி கோர் இந்தியாவின் நிறுவனர் வந்தினி குப்தா கூறி இருக்கிறார். எனவே ஃபிரெஞ்ச் ஃபேஷியல் நடைமுறையை பயன்படுத்தி சருமம் நன்றாக பளபளக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கீழ்வரும் படிகளை பின்பற்றுங்கள்..

சரும வகை மற்றும் நோக்கத்தை கண்டறிதல்:

வெவ்வேறு தோல் வகைகளை கொண்டவர்களுக்கும் ஃபிரெஞ்ச் ஃபேஷியல் உகந்தது. எனவே சரியான தயாரிப்புகளைக் கண்டறிய மற்றும் உங்கள் சருமப் பிரச்சனைகளுக்கான தனித்துவ விருப்பத்தை கண்டறிய உங்கள் ஸ்கின் டைப்பை அறிந்து கொள்வது நல்லது.

சருமத்தை சுத்தப்படுத்தல்:

மற்றவற்றை போலவே ஃபிரெஞ்ச் ஃபேஷியலும் சருமத்தில் உள்ள மேக்கப் அல்லது அழுக்குகளை மெதுவாக சுத்தம் செய்வதன் மூலம் தொடங்குகிறது. சருமத்தை சுத்தப்படுத்துவது மற்றும் அழுக்கு அல்லது மேக்கப்பை அகற்றுவது இதில் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஆரோக்கியமான பொருட்களை உள்ளிழுக்க உங்கள் சருமம் சுத்தமாக இருக்க வேண்டும்.



சருமத்தை மிருதுவாக்க டோனர்:

ஃபிரெஞ்ச் ஃபேஷியல் ரொட்டீனின் அடுத்த படி, உங்கள் முகத்தில் லேசான டோனரை பயன்படுத்தி, சருமத்தை ஃபிரெஷ்ஷாக மாற்ற வேண்டும். இது ஃபேஷியல் செயல்முறையின் அனைத்து கூறுகளையும் செயல்படுத்த சருமத்தில் அடித்தளம் அமைக்கிறது.

Also Read : அரை மணி நேரத்தில் பளிச்சென்ற சருமம் வேண்டுமா? தேன் ஃபேஷியலை ஒருமுறை ட்ரை பண்ணுங்க! 

தெர்மல் எனர்ஜி:

ஃபிரெஞ்ச் ஃபேஷியல் ரொட்டினில் வெப்ப ஆற்றலின் (தெர்மல் எனர்ஜி) பயன்பாடு ஒரு முக்கிய படியாகும். இது முகத்தில் உள்ள நச்சுக்களை மென்மையான முறையில் வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்கிறது.

Also Read : வயதான தோற்றம் வராமல் இருக்க நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

டைனமிக் அயனைசேஷன்:

ஃபிரெஞ்ச் ஃபேஷியல் ரொட்டினில் மற்றொரு முக்கியமான ஒன்று dynamic ionisation மூலம் சரும செல்களுக்கு எனர்ஜி கொடுப்பது. இதற்காக டைனமிக் அயனைசேஷன் ராட் (dynamic ionisation rod) பயன்படுத்தப்படுகிறது. இதனால் சருமத்தின் மூலக்கூறு ஆற்றல் மேம்படும். இந்த செயல்பாடு மூலம் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ்கள் குறைவது உட்பட சிறந்த முடிவுகளை பெற உதவுகிறது.



மசாஜ் மூலம் சரும பராமரிப்பு:

நிதானமான மசாஜிற்கு ஆயில்களின் கலவையை பயன்படுத்தவும். இந்த ஆயில்கள் சருமத்தின் பொலிவை அதிகரித்து பளபளப்பாக்க உதவும்.

Also Read : முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க வேண்டுமா..?

ஆஃப்டர் கேர்:

மாய்ஸ்சரைசர்ஸ், அன்டர் ஐ கிரீம்ஸ் போன்ற மென்மையான ஆஃப்டர் கேர் பொருட்களைப் பயன்படுத்தி ஃபிரெஞ்ச் ஃபேஷியல் ரொட்டினை முடித்து கொள்ளலாம். இந்த பராமரிப்பு பொருட்கள் அனைத்து ஆக்டிவ் எலிமென்ட்ஸ்களையும் சருமத்தில் தக்க வைக்க உதவுகின்றன.

Also Read : சரும பராமரிப்புக்கு ஆன்டி-ஏஜிங் கிரீம்களால் பலன் கிடைக்குமா..?

வழக்கமான ஃபேஷியல்:

நல்ல சரும பராமரிப்பு என்பது தினசரி பழக்கம் மற்றும் வழக்கமான ஃபேஷியலை உள்ளடக்கியது. ஃபிரெஞ்ச் ஃபேஷியல் ரொட்டின் உங்கள் சருமத்தை இயற்கையாக மற்றும் லேசாக வைத்திருக்க ஊக்குவிக்கிறது. எனினும் வழக்கமான ஃபேஷியல் மற்றும் தினசரி ஒரு நல்ல தோல் பராமரிப்பு வழக்கமானது குறைபாடற்ற சருமத்தை அடைய உதவும்.
Published by:Selvi M
First published:

Tags: Beauty Tips, Facial, Skin Care

அடுத்த செய்தி