• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சீரியல் நடிகைகளை அழகாக்கும் அரிசி தண்ணீர்.. புது புது அர்த்தங்கள் பார்வதி உண்மையை உடைச்சுட்டாங்க!

சீரியல் நடிகைகளை அழகாக்கும் அரிசி தண்ணீர்.. புது புது அர்த்தங்கள் பார்வதி உண்மையை உடைச்சுட்டாங்க!

 புது புது அர்த்தங்கள் பார்வதி

புது புது அர்த்தங்கள் பார்வதி

முகம் கழுவிய பிறகு ஸ்ப்ரே செய்து வந்தால் நிச்சயம் முகப்பரு உள்ளிட்ட பல சரும பிரச்சனைகள் விலகும்

  • Share this:
    சின்னத்திரை கதாநாயகிகள் லிஸ்டில் டாப்பில் இருக்கும் ஜீ தமிழ் சீரியல் புது புது அர்த்தங்கள் பார்வதியின் பியூட்டி சீக்ரெட்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புது புது அர்த்தங்கள் சீரியலில் பவித்ராவாக நடித்து வருபவர் பார்வதி . விஜே, மாடல், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்ட இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர். கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் செய்து வந்தவர் சின்னத்திரையில் ஆங்கராக நுழைந்தார். சன்டிவியில் விஜேவாக இருந்தார். வணக்கம் தமிழா, பல்வேறு ஆடியோ லான்ச் தொகுத்து வழங்கியுள்ளார். 2019ல் சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் சொந்தமாக்கினார். தற்போது புது புது அர்த்தங்கள் சீரியலில் தேவையானியின் மருமகளாக நடிக்கும் பார்வதிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோவர்ஸ்.

    இவரின் பியூட்டி சீக்ரெட்ஸ் பற்ரி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். சீரியலில் நடிக்க வந்த பிறகு பார்வதி சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். அதற்கு மிக முக்கியமான காரணம், தினமும் மேக்கப் போடுவது, கேமரா முன்பு நிற்பது. தனது சருமத்தை பாதுகாக்க பார்வதி என்னென்ன செய்கிறார் தெரியுமா?

    அரிசி கழுவிய தண்ணீர். அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் சேமித்து காலையில் முகம் கழுவிய பிறகு ஸ்ப்ரே செய்து வந்தால் நிச்சயம் முகப்பரு உள்ளிட்ட பல சரும பிரச்சனைகள் விலகும் . கொரியன் பியூட்டி டிப்ஸான இந்த அரிசி தண்ணீரை , பல சீரியல் நடிகைகள் பயன்படுத்துக்கிறார்களாம். நல்ல ரிசல்ட் கொடுக்குதாம்.



    அதேபோல, கடலை மாவு, தயிர், பாலாடை, தேன், தக்காளி, ஐஸ் கட்டி ஆகியவற்றை கொண்டு சருமத்தை எப்போதுமே பளீச் சென்று வைத்து கொள்கிறாராம். பீட்ருட், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை உட்கொள்வது மிக மிக நல்லது என்கிறார். நீங்களும் இதையெல்லாம் முடிந்த வரை ஃபாலோ செய்தால் நல்ல ரிசல்டை பார்க்கலாம் என்கிறார் பார்வதி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: