Home /News /lifestyle /

இந்த வைட்டமின்கள் குறைந்தால் உங்கள் சரும அழகு பாதிக்கப்படும்!

இந்த வைட்டமின்கள் குறைந்தால் உங்கள் சரும அழகு பாதிக்கப்படும்!

வைட்டமின் குறைபாடு

வைட்டமின் குறைபாடு

மருத்துவரை அணுகி செலவு செய்வதைக் காட்டிலு சில வைட்டமின்களைத் தவறாது உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

  • News18
  • Last Updated :
    பலர், திடீரென சருமத்தில் அரிப்பு, சரும வறட்சி, சுருக்கம் போன்றவை ஏற்படுவதைக் கண்டு பயந்து மருத்துவரை அணுகுவார்கள். அதற்கு சில வைட்டமின்கள் குறைபாட்டே காரணம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனால், பதட்டமடைந்து மருத்துவரை அணுகி செலவு செய்வதைக் காட்டிலும் சில வைட்டமின்களைத் தவறாது உணவுகளில் சேர்த்துக் கொண்டாலே போதும். 



    வறண்ட சருமம் - வைட்டமின் A

    சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதும் அதேசமயம் பற்களின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் A மிக முக்கியம். போதுமான வைட்டமின் A எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வறண்ட சருமம் , வறண்ட உதடுகள் உண்டாகும்.

    குறிப்பு : வைட்டமின் A, முட்டை, பால், சீஸ், மீன் எண்ணெய், ஆட்டு மண்ணீரல், ஈரல், கேரட், சர்க்கரை வல்லிக்கிழங்கு, பூசணிக்காய் போன்ற உணவுகளில் அதிகமாக இருக்கிறது.

    சரும வெடிப்பு - வைட்டமின் B2

    சரும வெடிப்பு, உதட்டின் ஓரம் புண், நாக்கில் அச்சிரம், புண், நாக்கு எரிவது போன்றவை ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் B2 சத்துக் குறைபாடே. வைட்டமின் பி2, சருமத்திற்கான இரத்த ஓட்டத்தைச் செலுத்தி ஆரோக்கியத்தை அளிக்கிறது.

    குறிப்பு : பால், கீரை வகைகள், முட்டை வெள்ளைப் பகுதி, இறைச்சி, தயிர், பருப்பு வகைகள் போன்றவற்றில் வைட்டமின் B2 நிறைந்துள்ளது.



    சருமச் சிதைவு - வைட்டமின் B3, வைட்டமின் B6

    வைட்டமின் பி3 உடம்பில் உள்ள கொழுப்பைக் கரைத்து அதை புரோட்டினாக மாற்றக் கூடியது. கார்போ ஹைட்ரேட்டை ஆற்றலாக அளிக்கக் கூடியது. இதனால் சருமத்தை பாதுகாப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது. வைட்டமின் B3 , B6 குறைந்தால், வயிற்றுப் போக்கி, டைமென்ஷியா போன்ற நோய் அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தும். அதைத் தொடர்ந்து அரிப்பு, வற்றட்டுத் தோல், சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற சருமப் பிரச்னைகள் ஏற்படும்.

    குறிப்பு : மீன், இறைச்சி. முட்டை, பால், மஷ்ரூம், நட்ஸ் வகைகளில் வைட்டமின் B3 , B6 நிறைந்துள்ளன.

    தோல் உறிதல் , சுறுங்கிய தோல் - வைட்டமின் B7

    பையோடின் எனப்படும் வைட்டமின் B7 மெட்டாபாலிசத்தைத் தூண்டி உடல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. அமினோ ஆசிடை சுரக்கத் தூண்டுகிறது. இதன் தேவை உடலில் குறையும் போது தோல் உறிதல், தோல் சுறுக்கம், பொலிவிழந்த சருமம் போன்றவை ஏற்படுகிறது.

    குறிப்பு : ஆட்டு ஈரல், முட்டை, சிக்கன், மஷ்ரூம் போன்ற உணவுகளில் வைட்டமின் B7 அதிகமாக உள்ளது.



    மஞ்சள் சருமம் மற்றும் வெண்குஷ்டம் - வைட்டமின் B12

    வைட்டமின் B12 குறைந்தால் உடல் பருமன், மூச்சு விடுதலில் சிரமம், கண்களின் வெள்ளை மஞ்சளாக தோற்றமளித்தல், பார்வைக் குறைபாடு போன்றவை ஏற்படுவது மட்டுமன்றி சருமத்தில் வெண்குஷ்டம் ஏற்படுதல், சருமம் மஞ்சள் நிறத்தில் மாறுதல் போன்றவை ஏற்படும். இது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதன் குறைப்பாட்டால் சருமம் வைட்டமின் B12 சத்தை பெற முடியாமல் அதை இதுபோன்ற நோய்களால் வெளிபடுத்தும்.

    குறிப்பு : இறைச்சி, லிவர், பால், முட்டை, மஷ்ரூம், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவறை அதிகமாக உட்கொள்வதால் இந்த பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

    வறட்டுத் தோல் : வைட்டமின் C

    வைட்டமின் சி சருமத்திற்கு ஆண்டி ஆக்ஸிடண்ட் போன்றது. சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் கொலாஜின்களை உற்பத்தி செய்யக் கூடியது. வைட்டமின் C சத்துக் குறைந்தால் சருமச் சிதைவு, வறண்ட சருமம், மென்மைத் தன்மை இல்லா சருமம், தோல் சுருக்கம் போன்றவை ஏற்படும்.

    குறிப்பு : வைட்டமின் C நிறைந்த திராட்சை, ஆரஞ்சு, மாம்பழம், பப்பாளு, காலிஃப்ளவர், தக்காளி, கோஸ், போன்ற காய்கறிகளை அதிகம் உண்டால் இந்த பிரச்னைகளைத் தவிக்கலாம்.



    சொரியாசிஸ் : வைட்டமின் D

    வைட்டமின் D குறைந்தால் எலும்பின் உறுதித் தன்மை பாதிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனால் சொரியாசிஸ் வரும் என்பது தெரியுமா ? வைட்டமின் டி சத்தானது சருமத்திற்கு ஏற்படும் எந்தப் பிரச்னைகளையும் சரிசெய்யும் மருத்துவர் போன்றது. அதுவே உடலில் குறைந்தால் ! அதனால்தான் வைட்டமின் D சத்து உடலுக்கு அவசியம் என்கின்றனர்.

    குறிப்பு : வைட்டமின் D இயற்கையாகவே சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைக்கக்கூடியது. அதேசமயம் அதிகமான சூரியக் கதிர்கள் சருமப் புற்றுநோய் ஏற்படும். உணவு வகைகளில் முட்டை மஞ்சள் கரு, பால், இறைச்சி , போன்ற உணவுகளை உண்ணுங்கள்.

    இளமையில் முதுமை : வைட்டமின் E

    வைட்டமின் E சருமத்திற்கு மிக முக்கிய ஆண்டி ஆக்ஸிடண்ட். காற்று மாசுபாடு, சூரிய ஒளி போன்றவற்றால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுத்து ஆரோகியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது வைட்டமின் E. இதனால் நீங்கள் என்றும் இளமையோடும் பொலிவுடனும் இருப்பீர்கள். இதற்கு வைட்டமின் C எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அதற்குச் சமமாக வைட்டமின் E யும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    குறிப்பு : சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Beauty Tips, Health tips, Vitamins

    அடுத்த செய்தி