• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • வயசை மறைக்க இதையெல்லாம் செய்தேன்.வனிதா விஜயகுமார் பியூட்டி சீக்ரெட்ஸ்!

வயசை மறைக்க இதையெல்லாம் செய்தேன்.வனிதா விஜயகுமார் பியூட்டி சீக்ரெட்ஸ்!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

சிறுவயதில் இருந்தே இதுபோன்ற ஹோம் ரெமீடிகளை வனிதா வீட்டிலேயே செய்யும் பழக்கம், கொண்டவராம்.

 • Share this:
  20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் தனது முக அழகுக்காக பின்பற்றும் பியூட்டி சீக்ரெட்ஸ்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.
  மிகப் பெரிய சினிமா பின்னணி கொண்டவர் என்றாலும் வனிதா மீத ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கிறது.குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆகியது. அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவரை பார்க்க முடிந்தது. வனிதா குறித்த பேச்சு பீக்கில் இருந்த போதே இதனை பயன்படுத்திக் கொண்டவர் யூடியூபில் சமையல் நிகழ்ச்சியை தொடங்கினார். கூடவே வனிதா சினிமா விமர்சகராகவும் அவதாரமெடுத்தார்.

  இதற்கிடையில் பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து அந்த திருமணமும் கைக்கொடுக்காததால் தற்போது 2 மகள்களுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார். சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அவரின் சமையல், மேக் டிப்ஸ் அனைத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.அந்த வயதில் 41 வயதாகும் வனிதா இப்போதும் முக அழகில் ஜொலிக்கிறார். இதற்காக அவர் சில பியூட்டி டிப்ஸ்களையும் ஃபாலோ செய்கிறார். அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  பியூட்டி பாலர் போக மாட்டேன்.. முடி சூப்பரா இருக்க இது தான் காரணம்- தமிழும் சரஸ்வதியும் கோதை அம்மா

  இவரின் அழகு குறிப்பில் முதலில் இருப்பது பாதாம் எண்ணெய் தான். முகத்திற்கு பாதாம் எண்ணெய் அவ்வளவு நல்லதாம். வாரத்திற்கு ஒரு முரை முகத்தில் பாதாம் எண்ணெய்யை 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால் போதுமாம். முகம் பளீச்சென்று மாறிவிடுமாம். அடுத்தது, ஓட்ஸ். முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்க நினைப்பவர்கள், முகம் கருமை அதிகமாக தெரிகிறது என நினைப்பவர்கள் கட்டாயம் இந்த ஓட்ஸ் மாஸ்கை பயன்படுத்தலாம். அதாவது ஓட்ஸில் சில துளி எலுமிச்சை சாறு, தேன், தயிர் அல்லது பால் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளீச்சென்று மாறிவிடுமாம்.  சிறுவயதில் இருந்தே இதுபோன்ற ஹோம் ரெமீடிகளை வனிதா வீட்டிலேயே செய்து வருகிறாராம். தொடர்ந்து மேக்கப் போட்டாலும் இவரின் முகம் இப்படி ஜொலிக்க காரணம் இதுபோன்ற பியூட்டி டிப்ஸ்கள் தானாம். வயது என்பது வெறும் நம்பர் மட்டும் தான் உங்கள் அழகை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நேரம் எடுத்து பராமரிக்கலாம் என்கிறார் வனிதா.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: