• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தர்பூசணியில் அழகுப் பராமரிப்பு : இப்படியெல்லாம் செஞ்சா இந்த பலன்கள் கிடைக்கும்..!

தர்பூசணியில் அழகுப் பராமரிப்பு : இப்படியெல்லாம் செஞ்சா இந்த பலன்கள் கிடைக்கும்..!

தர்பூசணி

தர்பூசணி

கெட்டித் தயிருடன், தர்பூசணி சாறு கலந்து அதை முகத்தில் , கை, கால்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவுங்கள்.

  • Share this:
    தர்பூசணி வெயில் காலத்தில் கிடைக்கக் கூடிய பழம் என்பதால் எளிமையாக இந்த வீட்டுக் குறிப்புகளை செய்யலாம். அதோடு இதில் உள்ள நீர்ச்சத்து வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. இதை வைத்து எப்படியெல்லாம் அழகுப் பராமரிப்பு செய்யலாம் என்று பார்க்கலாம்.

    கருமை நீங்கும் : தர்பூசணி ஜூஸ் குடிக்க சுவையாக இருக்கும் என்றாலும் அதனை முகத்திற்கு அப்ளை செய்தால் வெயில் கருமை நீங்கும். 2 ஸ்பூன் தர்பூசணி சாறில் 2 ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் போல் கலக்குங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். வாரம் இரு முறை செய்துவர கருமை நீங்கும்.



    பளிச் முகம் : கெட்டித் தயிருடன், தர்பூசணி சாறு கலந்து அதை முகத்தில் , கை, கால்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவுங்கள். இவ்வாறு செய்ய பொலிவு நீங்கி பளிச்சென்ற முகம் கிடைக்கும்.

    ஈரப்பதம் : தர்பூசணி சாறுடன், எலுமிச்சையும் கலந்து முகத்தி தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்தால் எண்ணெய் பிசுக்கு நீங்கி ஈரப்பதம் கிடைக்கும். முகச் சருமம் காண ஆரோக்கியமாக இருக்கும். வறண்ட சருமத்தினர் இதை செய்யலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: