முகப்பருக்களுக்கு முல்தானி மிட்டி..! இந்த 3 வழிகளை முயற்சித்துப் பாருங்கள்..!

முல்தானி மெட்டியில் மெக்னீசியம் க்ளோரைட் உள்ளதால் சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை உறிஞ்சு பருக்கள் இல்லாமல் பாதுகாக்க உதவும்.

முகப்பருக்களுக்கு முல்தானி மிட்டி..! இந்த 3 வழிகளை முயற்சித்துப் பாருங்கள்..!
முல்தானி மெட்டி
  • Share this:
முல்தானி மிட்டியில் மெக்னீசியம் க்ளோரைட் உள்ளதால் சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை உறிஞ்சு பருக்கள் இல்லாமல் பாதுகாக்க உதவும். அதேபோல் எரிச்சலுக்கும் சருமத்தை கூலாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

ஃபேஸ் பேக் : முல்தானி மிட்டி, தேன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்குக் கலந்துகொள்ளுங்கள். அதை முகம் முழுவதும் சீராக அப்ளை செய்து காய்ந்ததும் கழுவிவிடுங்கள். இதை வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள். பலன் தெரியும்.

பவர் பேக் : முல்தானி மிட்டியுடன் வேப்பிலை அரைத்து இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். இதை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் பருக்கள் மறைவதைக் காணலாம்.
ஸ்கிரப் பேக் : ஆரஞ்சு பீல் பவுடருடன் முல்தானி மிட்டி, எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து வட்டப்பாதையில் முகத்தில் ஸ்கிரப் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கும்.

குறிப்பு : மேலே குறிப்பிட்ட குறிப்புகளை ஏதாவதொன்று ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என பின்பற்றி வாருங்கள். ஃபேஸ் பேக்கை கழுவ குளிர்ந்த நீர் பயன்படுத்துங்கள்.பார்க்க :

 

 
First published: April 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading