முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் மசூர் பருப்பு ஃபேஸ் பேக்..! பயன்படுத்தும் முறைகள் இதோ...

மசூர் பருப்பு ஃபேஸ் பேக்

முடிகளை அகற்ற பலர் ரேசர் முறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் அது முடி வளர்ச்சியை வேகமாக்கும். அதோடு அதிகரிக்கவும் செய்யும். ரேசர் முறையில் எரிச்சல், அரிப்பும் உண்டாகும்.

 • Share this:
  முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்ந்தாலே அது பொதுவெளியில் சங்கடத்தை ஏற்படுத்தும். அதை உடனே நீக்கிவிட்டால்தான் மனம் நிம்மதியடையும். இதற்காக பலர் ரேசர் முறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் அது முடி வளர்ச்சியை வேகமாக்கும். அதோடு அதிகரிக்கவும் செய்யும். ரேசர் முறையில் எரிச்சல், அரிப்பும் உண்டாகும். எனவே இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க இயற்கை முறையிலான சிகிச்சையே சிறந்தது. இதற்கு மசூர் பருப்பு பயன்படுத்தினால் உடனே அகற்றிவிடலாம். எனவே மசூர் பருப்பில் ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்..

  தேவையான பொருட்கள் :

  மசூர் பருப்பு - 100 கிராம்
  சந்தப்பொடி - 20 கிராம்
  ஆரஞ்சு தோல் - 1 முழு பழத்தின் தோல்
  பால் - 1 கப்  செய்முறை :

  மசூர் பருப்பு, ஆரஞ்சு தோல் மற்றும் சந்தனப்பொடி ஆகியவற்றை பாலில் அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

  பின் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். நன்கு கெட்டியான பேஸ்ட் பதத்தில் இருக்க வேண்டும்.

  தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தா இத்தனை நன்மைகளா..? இரவு தூங்கும் முன் செய்யலாம்..!

  அவ்வளவுதான் மைசூர் பருப்பு ஃபேஸ் பேக் தயார். அதை ஒரு டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். 3 நாட்கள் வரை தாங்கும்.

  இதை தினமும் இரவு தூங்கும் முன் அல்லது காலை குளிக்கும் முன் முகத்தில் தடவி வர முடிகள் தானாக உதிர்ந்துவிடும்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: