திருமண நாளில் பளபளப்பான சரும பொலிவை பெற மணமகளுக்கான உப்டான் அழகு குறிப்பு!

உப்டான் அழகுக்குறிப்பு

உப்டான் எனப்படுவது சுமார் 6,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுர்வேத முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் சருமத்தை சரி செய்யும் சிகிச்சை முறையாக இந்த உப்டான் சொல்லப்படுகிறது.

  • Share this:
இயற்கையான சரும பொலிவை அளிப்பதில் "உப்டான்" (ubtan) என்றழைக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்கள் அடங்கிய பவுடர் கலவை முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் புதிய சருமத்தை நமக்கு அளிக்கின்றன.

உப்டான் எனப்படுவது சுமார் 6,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுர்வேத முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் சருமத்தை சரி செய்யும் சிகிச்சை முறையாக இந்த உப்டான் சொல்லப்படுகிறது. ஆயுர்வேத முறைப்படி செய்யும் ஸ்கின் கேர் தயாரிப்புகளில் உப்டானுக்கே முதலிடம். உப்டான்கள் நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற வாழ்வின் மிக முக்கிய நாட்களில் முகம் மற்றும் சரும பொலிவோடு ஒளிர சிறந்த வழியாக உள்ளது.



திருமணத்தின் போது பெண்ணின் உடலை அழகுபடுத்தும் பதினாறு வழிகளில் சோலா ஷ்ரிங்கரின் சடங்கின் முக்கிய படிகளில் ஒன்று உப்டானுடன் ஆயுர்வேத மசாஜ் (உப்வர்த்தன் என்றும் அழைக்கப்படுகிறது). உடல் சருமத்தை உப்டான் மூலம் பொலிவுபடுத்துவது (தோலில் இருந்து இறந்த செல்களை அகற்றுவதன் மூலம்) மணமகனும், மணமகளும் பழைய வாழ்க்கையிலிருந்து பிரித்து புதிய வாழ்க்கைக்கு தயாராவதாக நம்பப்படுகிறது. அத்தியாவசிய மூலிகைகள் மற்றும் தாதுக்கள் கலந்து ஆயுர்வேத உடல் சுத்தப்படுத்தியாக விளங்குகிறது உப்டான். இயற்கையான பளபளப்பை வெளிப்படுத்த சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த ஒன்றிணைந்து செயல்படும் மூலிகைகள் அடங்கிய உப்டான்கள் பல்வேறு கலவைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதெற்கென ஏராளமான ரெசிபிக்கள் உள்ளன.

உங்கள் சருமத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு உப்டான் கலவைகள் செய்யப்படலாம் என்றாலும், உப்டானுக்கான பாரம்பரிய ஆயுர்வேத செய்முறை பேஸ்ட்டை உருவாக்க பெரும்பாலும் பின்வரும் பொருட்கள் பயன்படுத்துகிறது. மஞ்சள், பாதாம், வேம்பு, சந்தன தூள், பெருஞ்சீரகம், பச்சை கிராம் மாவு, ஓட்ஸ்,மசூர் பருப்பு (சிவப்பு பயறு), ரோஸ் வாட்டர் , கடலை மாவு, பால் கிரீம், எலுமிச்சை சாறு, முந்திரி, பிஸ்தா, ஆளிவிதை, குங்குமப்பூ, இனிப்பு பாதாம் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை பயன்படுத்தி பல்வேறு கலவைகளால் உப்டான் பவுடர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் எப்போதும் பிரகாசிக்கும் அழகுடன் இருக்க வேண்டுமா..? இந்த ஜூஸை தினமும் குடிங்க

பொதுவாக உப்டான்கள் சருமத்தின் இயற்கை பிரகாசத்தை வெளிப்படுத்துகிறது, சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது, பார்ப்பதற்கு இளமையாக தெரிய வைக்கிறது மற்றும் உடல் மற்றும் முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற உதவுகிறது. திருமண விழாக்களில் ஹல்தி என்ற நிகழ்வில் உப்டானை மணமக்களுக்கு பூசி அழகு பார்ப்பார்கள். இதனால் இவர்களின் “சருமத்தின் நிறம் கூடி, பிரகாசம் அடைந்து திருமணத்தில் பளிச்சிடுவர். திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் ஒளிரும் சருமத்தை இயற்கையாக பெற சிறந்த உப்டான் ரெசிபி கீழே..



தேவையான பொருட்கள்:

* 1 டேபிள் ஸ்பூன் அளவு கோதுமை மாவு

* 1 டேபிள் ஸ்பூன் அளவு பெசன் மாவு

* 1 டேபிள் ஸ்பூன் அளவு சந்தன பவுடர்

* 1 டேபிள் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள்

* 2 டீஸ்பூன் அளவு யோகர்ட்

* 1 டீஸ்பூன் அளவு ரோஸ் வாட்டர்

மேற்காணும் அனைத்து பொருட்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் எடுத்து கொண்டு கலந்து பேஸ்ட் தயாரித்து கொள்ள வேண்டும். இப்போது இந்த பேஸ்ட்டை சருமத்தில் பூசி சுமார் 1 மணி நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
Published by:Sivaranjani E
First published: