ஸ்கின் கேர் தயாரிப்புகளை பொறுத்த வரை பல பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த ஆக்டிவ் பொருட்கள் உள்ளன. எனினும் சாலிசிலிக் ஆசிட் மற்றும் ரெட்டினோல் உள்ளிட்டவை அடங்கிய தயாரிப்புகள் தற்போது ஸ்கின் கேர் மார்க்கெட்டில் பிரபலமாக உள்ளன.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஸ்கின் கேர் ப்ராடக்ட்ஸ்களை தயாரிக்கும் பல பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளில் இந்த 2 காம்போனென்ட்ஸ்களும் இருப்பதாக விளம்பரப்படுத்தி வருகின்றன. நன்கு அறியப்பட்ட பிராண்ட் சாலிசிலிக் ஆசிட் மற்றும் ரெட்டினோல் கொண்ட அதன் புதிய தயாரிப்பை விளம்பரப்படுத்தினால் அது உங்களுக்கு சரியாக இருக்கும் என்று அர்த்தமல்ல. ஏனென்றால் மிக சிலரே சாலிசிலிக் ஆசிட் மற்றும் ரெட்டினோலின் நன்மைகள் மற்றும் பயன்பாட்டை புரிந்து வைத்துள்ளார்கள்.
அந்த வகையில் நீங்கள் சாலிசிலிக் ஆசிட் மற்றும் ரெட்டினோலின் நன்மைகளை பெற விரும்பினால் அவை சருமத்தில் எப்படி வேலை செய்யும் மற்றும் அதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.
சாலிசிலிக் ஆசிட்-ன் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள்:
அறிவியல் ரீதியாக ஸ்கின் கேர் பொருட்கள் பீட்டா ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ் (BHA) அல்லது ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ்களால் (AHA) ஆனவை. இந்த பெயர்கள் சற்று சிக்கலானவை என்றாலும் இவற்றின் ஷாட் ஃபார்ம் பலருக்குத் தெரியும். இந்த 2 ஆசிட்ஸ்களும் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய உதவுகின்றன. நாம் இப்போது பேசும் Salicylic acid என்பது ஒரு பீட்டா-ஹைட்ராக்ஸி ஆசிட் ஆகும். சாலிசிலிக் ஆசிட் நம் சருமத்தில் ஆழமாக ஊடுருவி செல்லும் திறனை கொண்டுள்ளது. மேலும் சருமத்தின் டாப் லேயரில் இருந்து இறந்த செல்களை அகற்றுவதன் மூலமும், கூடுதல் எண்ணெயை அகற்றுவதன் மூலமும், க்ளாக்டு போர்ஸை (clogged pores) கிளியர் செய்வதன் மூலமும் , ரெட்னஸ்ஸை குறைப்பதன் மூலமும் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.
Also Read : வேக்சிங் செய்ய போறீங்களா? முன்னும் பின்னும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்!
தவிர சாலிசிலிக் ஆசிட் சாதகமற்ற தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் பிற தோல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. மார்க்கெட்டில் பல கான்சென்ட்ரேஷன்ஸ் சாலிசிலிக் ஆசிட் சீரம் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 0.5% முதல் 2% வரையிலான சிறந்த கான்சென்ட்ரேஷனை கொண்டுள்ளன.
ரெட்டினோலின் (Retinol) பயன்பாடுகள் மற்றும் நன்மைகள்:
ரெட்டினோல் என்னும் இந்த காம்போனென்ட் வைட்டமின் ஏ-விலிருந்து பெறப்படுகிறது மற்றும் இது ரெட்டினாய்டு குடும்பத்தின் ஒரு பகுதியாகும். ரெட்டினோல் பொதுவாக ஆன்டி-ஏஜிங் காம்போனென்ட் என்று தான் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. இது சருமத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதை குறைக்க உதவும் கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. தோல் செல் உற்பத்தியை ரெட்டினோல் அதிகரிக்கிறது. இது சரும அமைப்பு, தொனி மற்றும் நுட்பமான கோடுகளை கூட சரி செய்து சருமத்தை மேம்படுத்துகிறது. எனவே வயதாகும் போது ஏற்படும் பிக்மென்டேஷன்ஸ், சுருக்கங்கள் மற்றும் சீரற்ற சரும அமைப்பு உள்ளிட்ட சரும பிரச்சனைக்ளுக்கு ரெட்டினோல் நன்மை பயக்கிறது. இது தவிர ரெட்டினோல் முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது.
நீங்கள் ஒரு சிறந்த ரெட்டினோல் ஸ்கின் ப்ராடக்ட்டை வாங்க விரும்பினால் opaque packaging இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஹீட் மற்றும் லைட்டுடன் ஆக்ஸிஜன் ரெட்டினோலின் எதிரியாக இருக்கிறது. ஒளியில் வெளிப்பட்டால் ரெட்டினோலின் நன்மை பயக்கும் தன்மைகளில் பாதிப்பு ஏற்படும். எனவே ரெட்டினோல் தயாரிப்புகள் எப்போதும் ஏர்டைட் கன்டெயினர்களில் அடைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Skin Care, Skin Treatments