முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பப்பாளியை வைத்தே முடியின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடலாமா..? பயன்படுத்த டிப்ஸ்

பப்பாளியை வைத்தே முடியின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடலாமா..? பயன்படுத்த டிப்ஸ்

 பப்பாளி

பப்பாளி

Papaya Hair Masks : பப்பாளியில் பப்பைன் என்ற சத்து நிறைந்துள்ளது. இது புரதங்களை கரைக்கும் என்சைம்களை கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உங்களுக்கு மென்மையான பளபளப்பான மற்றும் நீண்ட முடி இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறதா? ஆனால், அதற்கு நேர்மாறாக உங்கள் முடியானது சுருட்டை உடையதாகவும், பளபளப்பு இன்றியும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்களுக்கான டிப்ஸ் இந்த கட்டுரையில் இருக்கிறது.

முடி பராமரிப்புக்கு சின்ன வெங்காயம், முட்டையின் வெள்ளை கரு, மருதாணி, செம்பருத்தி போன்ற எண்ணற்ற பொருள்களை நீங்கள் பயன்படுத்தி வருபவராக இருக்கலாம். அதேசமயம், இனிப்பு சுவை மிகுந்த பழம் ஒன்றிலும், முடி பராமரிப்புக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அடங்கியிருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் பப்பாளி.

பப்பாளியில் பப்பைன் என்ற சத்து நிறைந்துள்ளது. இது புரதங்களை கரைக்கும் என்சைம்களை கொண்டுள்ளது. இதன் ஆற்றல் என்னவென்று கூறினால் உங்களுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும். உங்கள் தலையில் உள்ள முடி வளர்வதற்கான செல்கள் இறந்த நிலையில் இருந்தாலும், அதை உடைத்து உயிர்ப்பிக்கும் சக்தி இந்த என்சைம்களுக்கு உள்ளது.

இதையும் படிங்க ...   கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இந்த உடல்நல கோளாறுகளும் காரணமாக இருக்கலாம்!

பப்பாளியை தலை பராமரிப்புக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்னதாக, பப்பாளி பயன்படுத்துவதால் முடி பராமரிப்புக்கு என்னென்ன வகைகளில் உதவிகரமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

* பப்பாளி உங்கள் முடி வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும்.

* பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துகள் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து புத்துயிர் அளிக்கும்.

* முடி மெலிதாக மாறுவதை இது தடுக்கும்.

* பப்பாளியில் இயற்கையாகவே விட்டமின் ஏ சத்து நிறைந்து உள்ளது என்பதால் முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் இதன் பங்கு மிக முக்கியமானது.

* பொடுகு தொல்லைக்கு சிறந்த தீர்வு இதில் கிடைக்கும்.

* இளநரையை தடுக்க முடியும்.

* முடி உடைவதை கட்டுப்படுத்துகிறது.

* தலை முடியுடன் இருக்கும் ரசாயன கூறுகளை நீக்கி, உங்கள் முடியை பளபளப்பாகவும் மாற்றுகிறது.

பப்பாளி மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவது எப்படி

ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிரம்பியுள்ள பப்பாளி மூலம் உங்கள் முடி வியத்தகு மாற்றங்களை பெறும். பப்பாளியை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் உணர முடியும். அதற்கு கீழ்காணும் வகையில் நீங்கள் மாஸ்க் தயாரிக்க வேண்டும்.

இதையும் படிங்க ...  வாழைப்பழத்தால் பக்கவிளைவுகள் உண்டாகுமா..? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது..? தெரிந்துகொள்ளுங்கள்

* பப்பாளியை மசித்து கூலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அதனுடன் வாழைப்பழக் கூழ் சிறிது சேர்க்கவும்.

* எண்ணெய் மற்றும் தேன் தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

* பிறகு எல்லா கலவையையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து, அதை உங்கள் தலையின் மீது தடவிக் கொள்ளவும்.

* பப்பாளி மாஸ்க் காயாமல் இருக்க மேலே துண்டு கட்டிக் கொள்ளலாம்.

* 20 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி கழுவிக் கொள்ளலாம்.

மாதம் இரண்டு முறை இதுபோன்று மசாஜ் செய்தால் வெகு விரைவாக உங்கள் முடியில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்.

First published:

Tags: Hair care, Papaya, Skin Care