தலைமுடியை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்று கேட்டால் அல்லது தேடி பார்த்தால் பலவிதமான ஆலோசனைகள் மற்றும் டிப்ஸ்களை நம்மால் பெற முடியும். நம்முடைய சிறிய வயது முதலே தலைமுடியின் ஆரோக்கியத்தை பேண தலைக்கு எண்ணெய் தடவி வருகிறோம். உறுதியான தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது தான் முதன்மையான வழியாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில் சில ஹேர் ஆயில்கள் நம் உச்சந்தலையில் உள்ள துளைகளை (pores) தடுக்கின்றன. போர்ஸ்கள் தொடர்ந்து அடைக்கப்படுவது இறுதியில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட வழிவகுக்கிறது.
இது மட்டுமின்றி குளிர்காலம் முடியின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். இது உங்கள் முடியின் அனைத்து ஈரப்பதத்தையும் உறிஞ்சி, முடி அதிகளவில் உதிர்கிறது. இதனால் குளிர் சீசனில் பலரது தலைமுடி பிரஷ் போல தோன்றும். இத்தகைய சூழலில் ஹேர் ஆயில்ஸ் மட்டுமே தீர்வாக இருக்கும். ஆனால் பொதுவாக குளிர்காலத்தில் தோன்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தீவிர முடி பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன தான் தீர்வு.? ஹேர் ஆயில்கள் இவர்களுக்கு தீர்வு தராது. ஹேர் ஆயிலை பயன்படுத்தாமல் ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிக்க நீங்கள் நினைத்தால் உங்களுக்கான சில பரிந்துரைகளை இங்கே பார்க்கலாம்.
ஹேர் ஆயில்களை பயன்படுத்தாமல் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் வழிகளின் பட்டியல்..
தலைமுடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வீட்டு வைத்தியம்:
ஹேர் ஆயில்களுக்கு மாற்றாக தலைமுடிக்கு பயன்படுத்த கூடிய சில பொருட்கள் நமது கிச்சனிலேயே இருக்கின்றன. முட்டை, தேன், தயிர், வாழைப்பழம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போன்ற பொருட்களை சரியாகவும், வழக்கமாகவும் பயன்படுத்தினால் உங்கள் தலைமுடிக்கு அவை அதிசயங்களைச் செய்யும். இவை முடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குவதோடு, ஏற்கனேவே இருக்கும் பல முடி பிரச்சினைகளையும் சரி செய்கின்றன.
கெமிக்கல் தயாரிப்புகளுக்கு நோ சொல்லுங்கள்:
உங்கள் தலைமுடிக்கு சரியான தயாரிப்பை தேடி தேடி பயன்படுத்தினாலும் சில நேரங்களில் கடுமையான கெமிக்கல்கள் நிறைந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்துவீர்கள். இது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை படிப்படியாக செயலிழக்க செய்கிறது. ஆல்கஹால், பாராபென், சிலிக்கான் மற்றும் சல்ஃபர் இல்லாத ஷாம்பு அல்லது கண்டிஷனரையே எப்போதும் தேர்வு செய்யவும். அதே போல எந்த ஒரு புதிய ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் பேட்ச் டெஸ்ட் (patch test) செய்து பாருங்கள்.
Weight Loss : இந்த 5 மாற்றங்களை செய்யாத வரை உடல் எடையை அவ்வளவு எளிதில் குறைக்க முடியாது..!
ஹீட் ப்ரொடக்ஷனை பயன்படுத்துங்கள்:
ஸ்டைலிங் டூல்ஸ்களை பயன்படுத்துவது உங்களை ட்ரெண்டிற்கு ஏற்றவாறும், உங்களை மிகவும் ஸ்டைலாக தோற்றமளிக்கவும் வைக்க உதவும் அதே நேரத்தில் அவை முடி உதிர்வதற்கும் முக்கிய காரணமாக இருக்கின்றன. எனவே ஸ்ட்ரெய்ட்னர், ட்ரையர் மற்றும் கர்லர் போன்ற ஹீட் டூல்ஸ்களை பயன்படுத்துவதற்கு முன் ப்போதும் உங்கள் தலைமுடியில் ஹீட் ப்ரொடக்டிவ் ஸ்ப்ரேவை (heat-protective spray) பயன்படுத்த மறக்காதீர்கள்.
ஆரோக்கியமான டயட்டில் கவனம்:
உங்கள் தலைமுடியை உள்ளே இருந்து வலுப்படுத்த ஆரோக்கியமான உணவுகள் பெரிதும் உதவுகின்றன. தலைமுடி ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான ஊட்டச்சத்து இரும்பு மற்றும் புரதம் ஆகியவை. எனவே உங்கள் டயட்டில் பச்சை இலை காய்கறிகள், மீன், பூசணி விதைகள், பீன்ஸ், கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் தானியங்களை சேர்த்து கொள்ளுங்கள். புரதத்திற்காக, சீஸ், பால், சோயா, பருப்பு, பட்டாணி, குயினோவா மற்றும் தயிர் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
தலையணை மற்றும் அகல பல் சீப்பு:
காட்டன் தலையணை கவர்கள் அவற்றின் கடினமான அமைப்பு காரணமாக உங்கள் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே முடி பராமரிப்புக்கு உதவும் சில்க் அல்லது சாடின் தலையணை கவரை எப்போதும் பயன்படுத்தவும். அதே போல நல்ல அகன்ற பல் கொண்ட சீப்பை பயன்படுத்துவது முடி உதிர்வை குறைக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.