டிரெண்டாகும் சால்ட் ஃபேஷியல்.. என்ன சிறப்பு..? எவ்வாறு செய்வது..?

இறந்த செல்களை நீக்குகிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து பளபளக்கச் செய்கிறது.

Web Desk | news18
Updated: August 13, 2019, 4:04 PM IST
டிரெண்டாகும் சால்ட் ஃபேஷியல்.. என்ன சிறப்பு..? எவ்வாறு செய்வது..?
சால்ட் ஃபேஷியல்
Web Desk | news18
Updated: August 13, 2019, 4:04 PM IST
பியூட்டி உலகின் ஃபேஷியலுக்கு எப்போதும் மவுசு குறையாது. அது மாதத்திற்கு ஒரு ஃபேஷியல் என புதுசு புதுசாக சந்தைக்கு அறிமுகமாகிக் கொண்டே இருந்தாலும் மக்கள் சலிப்படைய மாட்டார்கள். அந்த வகையில் தற்போது சால்ட் ஃபேஷியல் டிரெண்டில் உள்ளது.

உப்பு கரடுமுரடாக இருந்தாலும் சருமத்தில் தேய்க்கும்போது மென்மையடைகிறது. இறந்த செல்களை நீக்குகிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து பளபளக்கச் செய்கிறது. அதேசமயம் முகச் சுருக்கங்களை நீக்கி, வயதான தோற்றத்தை நீக்க கொலாஜின் அடுக்கில் மாற்றம் கிடைக்கும்.முகப்பருக்களை உருவாக்கும் கிருமிகள் , தேவையற்ற எண்ணெய் வடிதலையும் நீக்குகிறது.சருமத்திற்கு ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. LED விளக்குகளால் ஏற்படும் சரும பாதிப்பு மற்றும் முகச் சதைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு பளபளப்பை கூட்டுகிறது.

இத்தனை சிறப்புகளை இந்த உப்பு ஃபேஷியல் கொண்டிருப்பதாலேயே மக்கள் இதை விரும்புகின்றனர்.

வீட்டிலேயே சிம்பிலாக எவ்வாறு செய்யலாம்.?

இரண்டு ஸ்பூன் தேனில் , ஒரு ஸ்பூன் இந்து உப்புவை பேஸ்ட் பதத்திற்கு கலக்க வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின் முகம் முழுவதும் சீராக அப்ளை செய்து 10 - 15 நிமிடங்கள் காய வைத்து வெது வெதுப்பான நீரால் கழுவி விடவும். முகத்தை காட்டன் துணி கொண்டு துடைப்பதால் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...