• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்களுக்கு ஆயில் ஸ்கின்னா..? எண்ணெய் பிசுபிசுப்பை போக்க உதவும் ஸ்கிரப்

உங்களுக்கு ஆயில் ஸ்கின்னா..? எண்ணெய் பிசுபிசுப்பை போக்க உதவும் ஸ்கிரப்

ஆயில் ஸ்கின்

ஆயில் ஸ்கின்

எண்ணைய் பசையான சருமத்தை பராமரிப்பது கொஞ்சம் சவாலானது தான். எண்ணெய் வழியும் சருமம் இருந்தால், பல நேரங்களில் தோற்றம் பொலிவாக இருக்காது.

  • Share this:
சரும பாதுகாப்பு என்பது மிகவும் நுணுக்கமானது. உங்கள் சருமத்துக்கு ஏற்ற பொருட்களை, சரும பராமரிப்பு தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இதில் எண்ணைய் பசையான சருமத்தை பராமரிப்பது கொஞ்சம் சவாலானது தான். எண்ணெய் வழியும் சருமம் இருந்தால், பல நேரங்களில் தோற்றம் பொலிவாக இருக்காது. மேக்கப் எளிதில் கலைந்து போகும் சாத்தியம் உள்ளது. முகப்பரு தோன்றும். நீங்களும் எண்ணைய் பசை சருமத்தால் அவதிப்பட்டால், எளிமையான DIY ஸ்கரப்கள் இங்கே.

எண்ணைய் பசை சருமத்துக்கு ஸ்க்ரப் எப்படி உதவும்?

இயற்கையான பொருட்களால் முகத்தை ஸ்க்ரப் செய்தால், உங்கள் சருமம் பொலிவாக, பளபளப்பாக, புத்துணர்ச்சியாகக் காட்சியளிக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், சருமத்துளைகளை கிளென்ஸ் செய்யவும் உதவுகிறது. உங்கள் சருமத்தின் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, அதே நேரத்தில் பளபளப்பான மென்மையான தோற்றம் அளிக்கும்.
தயார் செய்ய எடுத்து கொள்ளுங்கள்.

கிரீன் டீ மற்றும் தக்காளி ஸ்க்ரப் :

சருமத்துக்கு தேவைப்படும் இன்றிமையாத ஊட்டச்சதுகளில் ஒன்று, ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். இது உங்கள் உடலில் ஃப்ரீ ரேடிகல்சை எதிர்த்து, உங்களை இளமையாக வைத்திருக்கிறது. தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. ​​தக்காளியின் அஸ்ட்ரிஜென்ட் உங்கள் சருமத்தை பொலிவாக்கி, துளைகளை சுத்தப்படுத்தி, அதிக எண்ணையை நீக்குகிறது. உங்கள் முகம் பிரகாசிக்க உதவுகிறது. சருமத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதோடு, ஈரப்பதத்தையும் தக்கவைக்க உதவுகிறது.



தக்காளி போலவே, கிரீன் டீயில் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. அது மட்டுமின்றி, இதில் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory), மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் (anticarcinogenic )ஆகிய பண்புகள் உள்ளன. இவை சரும துளைகளை கிளென்ஸ் செய்து, முகப்பருவை நீக்க உதவி செய்கிறது. மேலும், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஸ்க்ரப் தயார் செய்வது குறித்து இங்கே காண்போம்.,

தேவையான பொருட்கள்:

கிரீன் டீ பேக் (bag) - 1
தக்காளி - 1
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்

இரவு தூங்கும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் கிடைக்கும் மேஜிக் பற்றி தெரியுமா..?

செய்முறை:

தக்காளியின் தோலை நீக்கி, நன்றாக கூழாக்கிக் கொள்ளவும். தக்காளிக் கூழில், ஆலிவ் எண்ணெய், மற்றும் கிரீன் டீயை சேர்த்து நன்றாகக் கலக்கவும். உங்கள் முகப்பொலிவுக்கான ஸ்க்ரப் தயார். இதனை உங்கள் முகம், கழுத்து மற்றும் பின்கழுத்துப் பகுதிகளில் மென்மையாகப் பூசி ஸ்க்ரப் செய்யவும். இந்த கலவையை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருக்கவும்.



பின்னர் முகம் மற்றும் கழுத்தை வெதுவெதுப்பான நீரில் நன்றாகக் கழுவவும். முதல் முறை ஸ்க்ரப் செய்யும் போதே, முகப்பொலிவை நீங்கள் தெளிவாக உணரக்கூடும். வாரத்துக்கு குறைந்தப்பட்சம் ஒரு முறை இதை செய்து வந்தால், உங்களால் விரைவிலேயே உங்கள் எண்ணைப்பசை சருமம் மென்மையான, பொலிவான சருமமாக மாறிவிடும். இதை நீங்கள் உங்கள் தினசரி சரும பராமரிப்பு வரிசையில் சேர்த்து கொள்ளலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: