முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கெமிக்கல் பீல்ஸ் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 நன்மைகள்...

கெமிக்கல் பீல்ஸ் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 நன்மைகள்...

கெமிக்கல் பீல்ஸ்

கெமிக்கல் பீல்ஸ்

கெமிக்கல் கலவை நிறைந்த ஸ்கின் கேர் தயாரிப்புகளில், தோல் சார்ந்த ஏராளமான பிரச்சனைகள் வருவதாக கருதுகின்றனர். குறிப்பாக முகத்திற்கு பயன்படுத்த கூடிய க்ரீம்கள் முதல் பீல்கள் வரை முகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும்.

  • Last Updated :

நமது சருமத்தைப் பராமரிக்க எண்ணற்ற விஷயங்களை முயற்சி செய்வோம். அவற்றில் சில நமது தோலின் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய விதமாகவும் இருக்கும். நமது தோல் பராமரிப்பு முறைகளில் சிறந்த தயாரிப்புகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்க பல புராடக்ட்கள் உள்ளன. ஆனால், அந்த புராடக்ட்கள் அனைத்துமே இயற்கை பொருட்களாக ரயாசனம் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

கெமிக்கல் கலவை நிறைந்த ஸ்கின் கேர் தயாரிப்புகளில், தோல் சார்ந்த ஏராளமான பிரச்சனைகள் வருவதாக கருதுகின்றனர். குறிப்பாக முகத்திற்கு பயன்படுத்த கூடிய க்ரீம்கள் முதல் பீல்கள் வரை முகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். ஆனால், கெமிக்கல் பீலில் இதில் ஒரு சில நன்மைகள் தர கூடிய கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவது குறித்து பலரும் அறிந்திருப்பது இல்லை.

இந்த பீல்கள் முக மேல் தோலின் மேல் அடுக்கில் உள்ள அசுத்தங்கள் மற்றும் அழுக்குகளை அகற்றும். மேலும், இதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் சருமத்தை நல்ல முறையில் மேம்படுத்த உதவுகிறது. தோல் மருத்துவர்களும் இது குறித்த பல நன்மைகளை கூறியுள்ளனர். தோலின் சருமத்தை பாதுகாக்க இது போன்ற பீல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது சருமத்தின் மேற்பரப்பை மேம்படுத்தப் பயன்படும் செயல்முறை என்றும் தெரிவித்துள்ளனர்.

தோலின் இருக்கும் பிக்மெண்ட்டைக் குறைக்க கைகள் மற்றும் கால்கள் போன்ற மற்ற உடல் பாகங்களுக்கும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். கருவளையங்கள் மற்றும் சருமத்தில் டார்க் பிக்மெண்ட்டேஷனின் தோற்றத்தைக் குறைக்க கண்களுக்குக் கீழேவும், வாயைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இதன் மூலம் பல நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.

மெலஸ்மாவை கட்டுப்படுத்துகிறது

தோலில் சாம்பல்-பழுப்பு நிறத் திட்டுகளை ஏற்படுத்தக்கூடிய பொதுவான தோல் பாதிப்பு தான் மெலஸ்மா. இதற்கு சிகிச்சையளிப்பதில் கெமிக்கல் பீல்கள் மிகவும் உதவியாக இருக்கும். மெலஸ்மாவின் சிக்கலைத் தீர்க்க, கிளைகோலிக் பீல் பயன்படுத்தப்படுகிறது, இது மிகவும் பொதுவான கெமிக்கல் பீல் ஆகும்.

கோடைக்காலத்தில் தலைமுடி சேதத்தை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

சன் பர்ன் - சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு

இந்த வகை கெமிக்கல் பீல்கள் சூரியனால் ஏற்படும் பாதிப்புகள்,மற்றும் பிற நிறமி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் பெரிய அளவில் தோலிற்கு பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால் மெல்லிய கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. எனவே, இதை சரிசெய்ய லைட் கெமிக்கல் பீல்களை பயன்படுத்தி, இந்த அறிகுறிகளை எளிதில் குறைக்கலாம்.

ரோசாசியா

top videos

    ரோசாசியா என்பது ஒரு சரும அழற்சி பாதிப்பாகும். தோல் சிவத்தல், வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தில் புடைபுகளை ஏற்படுத்தும் நிலையாகும். சில நேரங்களில், இந்த அறிகுறிகளைப் போக்க கெமிக்கல் பீல்கள் மிகவும் உதவியாக இருக்கும். பொதுவாக லேசான அல்லது மிதமான ரோசாசியா பாதிப்பு இருந்தால் இந்த பீல்களை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

    First published:

    Tags: Beauty Tips, Skincare