ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பாதங்களை பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்...!

பாதங்களை பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்...!

முதலில் அகலமான வட்டமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் லிக்விட் சோப் 1 ஸ்பூன் என மூன்றையும் கலந்துவிடுங்கள். பின் கால்களை சுத்தம் செய்துவிட்டு அந்த தண்ணீருக்குள் பாதங்களை மூழ்க வைத்து 10 -15 நிமிடங்கள் கூற வையுங்கள்.

பெடிக்கியூர் செய்வது கால்களை அழகாக வைத்துக்கொள்வது மட்டுமன்றி உடலுக்கு ரிலாக்ஸும் கிடைக்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா ஊரடங்கு காரணமாக பார்லர்கள் மூடப்பட்டுள்ளதால் பெடிகியூர் செய்ய முடியாமல் பலரும் கவலையில் உள்ளனர். பெடிக்கியூர் செய்வது கால்களை அழகாக வைத்துக்கொள்வது மட்டுமன்றி உடலுக்கு ரிலாக்ஸும் கிடைக்கும். கவலையே வேண்டாம்;பார்லர் இல்லையென்றாலும் வீட்டிலேயே பெடிகியூர் செய்யலாம். எப்படி, என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்

  பேஸ்ட் - நெல்லிக்காய் அளவு

  காஃபி தூள் - சிறியது ஒரு பாக்கெட்

  கற்றாழை ஜெல் - ஒரு ஸ்பூன்

  முகத்திற்கு போடும் பவுடர் - 1 ஸ்பூன்

  செய்முறை :

  பேஸ்ட், காஃபி தூள் இரண்டையும் நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.

  அடுத்ததாக கற்றாழை ஜெல் மற்றும் பவுடர் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளுங்கள்.

  தற்போது அந்த கலவையை கால்களில் முழுவதும் தேய்த்து 15 நிமிடங்கள் காய வையுங்கள்.

  உள்ளாடைகளால் ஏற்படும் கருப்புக் கோடுகள் மறைய என்ன செய்யலாம்..?

  பின் காய்ந்துள்ள பாதங்களில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து பல் துலக்கும் பிரஷ் வைத்து மசாஜ் செய்வதுபோல் தேயுங்கள்.

  பின் வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவிடுங்கள். முன்பை விட கால் பாதங்கள் பளபளவென மின்னும்.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: