Home /News /lifestyle /

அடிக்கடி ஷாம்பூவை மாற்றுபவரா நீங்கள்..? இந்த 5 ஆயுர்வேத முறைகளை பயன்படுத்தி கூந்தலை வலுவாக்குங்கள்

அடிக்கடி ஷாம்பூவை மாற்றுபவரா நீங்கள்..? இந்த 5 ஆயுர்வேத முறைகளை பயன்படுத்தி கூந்தலை வலுவாக்குங்கள்

முடி பராமரிப்பு

முடி பராமரிப்பு

தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் உடலில் இருக்கக்கூடிய பல்வேறு காரணிகளால் ஏற்படுவதாக தெரிவித்தார். எனவே, தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் போது, பல்வேறு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் முக்கிய பிரச்சினை ஆக இருப்பது முடி உதிர்தல். இதற்காக பலரும் பல பலவிதமான சிகிச்சை முறைகளை கையாண்டு, அதில் பலன் ஏதும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆண்களை பொறுத்தவரை அதிகப்படியாக முடி உதிர்வது, முடி வலுவாக இல்லாமல் இருப்பது, முடி மிகவும் மெல்லிசாக இருப்பது போன்றவை மிகப்பெரும் பிரச்சனைகளாக உள்ளன. இது போன்ற பிரச்சனைகள் தான் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு முன்பாகவே தலையில் வழுக்கை தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றன.

சொல்லப்போனால் இங்கு திருமணத்தை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக தலைமுடியும் உள்ளது. முடி உதிரும் பிரச்சனை குறிப்பாக கோடை காலங்களிலும் மழை காலங்களிலும் சற்று அதிகமாகவே இருக்கிறது. இத்தகைய காலங்களில் நாம் சூட்டை தணிப்பதற்காகவும் குளிர்ச்சியான சீதோசன நிலையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் ஷாம்பூக்களை பயன்படுத்துகிறோம். ஆனால் ஷாம்பூக்களில் சல்ஃபேட் எனப்படும் கெமிக்கல் அதிகமாக இருக்கிறது. எனவே இதற்கு மாற்றாக பல்வேறு ஆயுர்வேத மூலிகைகள் இருப்பதாக பரிந்துரைக்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். இத்தகைய மூலிகைகள் முடி வளர்வதை அதிகப்படுத்துவதோடு தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அண்மையில் இதுகுறித்து ஊடகத்தினரிடம் பேசிய மருத்துவர் அபிஷேக் மிஸ்ரா, தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் உடலில் இருக்கக்கூடிய பல்வேறு காரணிகளால் ஏற்படுவதாக தெரிவித்தார். எனவே, தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் போது, பல்வேறு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

நிறைய ஆயுர்வேத மூலிகைகள் தலைமுடிக்கு உகுந்த சீதோசன நிலையை தருகிறது. அப்படி நம் தலைமுடிக்கு உதவும் 5 இந்திய மூலிகைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.கரிசலாங்கண்ணி

பிருங்கிராஜ் என்னும் கரிசலாங்கண்ணி முடிக்கு கருமை நிறத்தை அளிப்பதுடன், கூந்தலை குளிர்ச்சியாக வைக்க உதவும். அதனால் தான் கண் மைகளிலும், கூந்தல் தைலங்களிலும் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கீரையில் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளதால், இதை கூந்தல் பராமரிப்பிலும் பயன்படுத்தலாம். இது நரையை தடுக்கும் தன்மை கொண்டது. செலவில்லாதது. எளிமையாக கிடைக்கக் கூடியது. இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் மயிர்க்கால்கள் வரை பரவி தலை முடியை வேகமாக வளரச் செய்யும்.

முகம் பளபளக்க எந்த வகை ஃபேஷியல் சிறந்தது..? உங்களுக்கான டிப்ஸ்..!

வல்லாரை கீரை

வல்லாரை கீரை பலவீனமான கூந்தலை வலுப்படுத்துவதோடு இளநரை பிரச்சனையை தடுக்கும். மேலும், மன அழுத்தத்தை தவிர்த்து கூந்தலுக்கு உயிரூட்டுகிறது. சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் இதற்கு தனி இடம் உண்டு. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையுமே நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறோம். இவை முடி வறட்சி, பொடுகு தொல்லை, முடி உதிர்வு, முடி பிளவு போன்றவற்றின் தீவிரத்தை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். வல்லாரை கீரையை காய வைத்து அதை பொடியாக்கி தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்வெந்தயம்

முடியில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு மூலிகைதான் வெந்தயம். வெந்தய இலைகள் மற்றும் விதைகள் உச்சந்தலையில் உள்ள வறட்சியை நீக்கவும், பொடுகை குணப்படுத்தவும், முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்தலை தடுக்கவும் உதவுகிறது. இந்த இயற்கை மூலிகையில் வழுக்கை, நரை முடி போன்றவற்றை குறைக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வேகவைத்த வெந்தய விதைகளை விழுதாக நசுக்கி, பேஸ்ட்டை முடியின் மீது நன்றாக தடவி ஒரு மணி நேரம் மசாஜ் செய்வதன் மூலம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மழையில் நனைவது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்குமா..? 

நெல்லிக்காய்

பல முடி பிரச்சினைகளுக்கு நெல்லிக்காய் எப்போதுமே ஒரு தீர்வாக இருந்து வருகிறது. இது முடி நரைப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காயை நீங்கள் சாப்பிட்டு வந்தால் கூந்தல் வளர்ச்சி மட்டுமல்லாது உடல் ஆரோக்கியமும் மேம்படும். நெல்லிக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.இது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நெல்லிக்காய் எண்ணெயை தலைமுடிக்கு தடவலாம். தினமும் இதனை தடவி வந்தால் ஒரு மாதத்தில் மிக அடர்த்தியாக முடி வளரும்.

நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இளநரையைத் தடுக்கிறது. நெல்லிக்காய் உச்சந்தலையில் ஏற்படும் அழற்சிகள் மற்றும் பொடுகு போன்றவற்றையும் சமாளிக்கிறது. நான்காவது தலைமுறையாக ஆயுர்வேத மருத்துவத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர் ரேகா, நெல்லிக்காயை தினசரி வாழ்வில் சேர்த்துக் கொள்வது தலைமுடிக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்கிறார்.கற்றாழை

கற்றாழையில் உள்ள வைட்டமின் A,C மற்றும் E உள்ளிட்ட 3 வைட்டமின்களும் செல் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. ஆரோக்கியமான செல் வளர்ச்சி பளபளப்பான முடியை ஊக்குவிக்கிறது. தவிர கற்றாழை சாறில் உள்ள வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் இவை இரண்டும் முடி உதிர்வை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கற்றாழையை உச்சந்தலையில் தடவுவதால் உங்கள் தலைக்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனால், முடி வளர்ச்சி அதிகரிக்கும். கற்றாழை சாறை நேரடியாக உச்சந்தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசினால் போதும். இது உங்கள் கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பது மட்டுமின்றி கூந்தலை மிருதுவாகவும் மாற்றுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Shampoo

அடுத்த செய்தி