முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண்களே.. அக்குள் கருமையை போக்க சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்.!

ஆண்களே.. அக்குள் கருமையை போக்க சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்.!

remove underarms darkness

remove underarms darkness

மரபியல் மாற்றம், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக இரசாயனம் கலந்த டியோடரண்டுகளை பயன்படுத்துதல், ஷேவிங் செய்வதால் ஏற்படும் சிராய்ப்பு அல்லது சருமத்தில் இறந்த செல்கள் அதிகரித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் அக்குள் பகுதி கருமையாவதற்கு காரணம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கவலைப்படும் விஷயங்களில் ஒன்று கருமையான அக்குள். மரபியல் மாற்றம், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக இரசாயனம் கலந்த டியோடரண்டுகளை பயன்படுத்துதல், ஷேவிங் செய்வதால் ஏற்படும் சிராய்ப்பு அல்லது சருமத்தில் இறந்த செல்கள் அதிகரித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் அக்குள் பகுதி கருமையாவதற்கு காரணம். அக்குள் நிறமியை நீக்குவதற்கான சில உதவிக்குறிப்புகளை இங்கே கூறுகிறோம்.

1. உங்கள் உணவில் பழங்கள் மற்றும் கீரைகளைச் சேர்க்கவும்

உங்கள் உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதை உறுதி செய்யுங்கள். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரோட்டீன்கள் அக்குள் பகுதியில் நிறமிகள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

2. ஹாட்-வாக்சிங் செய்வதைத் தவிர்க்கவும்

சூடான மெழுகு, ஹேர் ரிமூவிங் கிரீம் மற்றும் அக்குளில் த்ரெடிங் செய்தல் போன்ற செயல்களை தவிர்க்கவும். அக்குளில் வாக்சிங் செய்யும் போது சூடான முழுக்கு தோலின் மெல்லிய அடுக்கை சேதப்படுத்தும். இதனால் தொற்று மற்றும் எரிச்சல் ஏற்படுவதுடன், தோல் அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து கருமையாக மாறும். அக்குள் முடியை அகற்ற ஷேவிங் அல்லது லேசர் முறையை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

3. கெமிக்கல் நிறைந்த வாசனை திரவியங்களை தவிர்க்கவும்

ஆண்களின் மற்றொரு கவலைகளில் அக்குள் துர்நாற்றமும் ஒன்று. அதற்காக நாம் பல்வேறு டியோடரண்டுகளை வாங்குகிறோம், இதில் உள்ள கெமிக்கல் நமது அக்குளில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். பாராபென்ஸ், ட்ரைக்ளோசன், அலுமினியம் போன்ற பல்வேறு எரிச்சலூட்டும் பொருட்கள் டியோடரண்டுகளில் காணப்படுகின்றன.

அவை தோல் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அக்குள் பகுதி இறுக்கமாகவும், கருமையாகவும் மாறும். எனவே, கெமிக்கல் இல்லாத இயற்கையான ஃபார்முலா ரோல்-ஆன்களை பயன்படுத்தலாம். இது அக்குளுக்கு ஊட்டமளித்து ஈரப்பதமூட்டுவதுடன் சருமத்தை மெருகூட்டும்.

4. கிளைகோலிக் அமிலத்துடன் சமநிலை

கிளைகோலிக் அமிலம் அக்குள் நிறமிக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. சிறந்த உரித்தல் மூலம், இது உங்கள் வியர்வையை உடைக்கும் பாக்டீரியாக்களை நீக்கி, துர்நாற்றத்தை நீக்குகிறது. உங்கள் அக்குள்களை சுத்தம் செய்த பிறகு, வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.

புதிய தயாரிப்பை முயற்சிப்பது எப்போதும் பேட்ச் சோதனையுடன் தொடங்க வேண்டும், சருமத்தின் சுத்தமான பகுதியில் சிறிது தயாரிப்பைப் பயன்படுத்துங்கள், மேலும் சிவத்தல், எரிச்சல், அரிப்பு அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

5. அக்குளை தொடர்ந்து சுத்தம் செய்யவும்

முகத்தைப் போலவே, அக்குள்களும் தோலின் உணர்திறன் மற்றும் எரிச்சலால் பாதிக்கப்படலாம். அக்குள் தோலின் மடிப்பு காரணமாக, காற்றோட்டம் இல்லாததால் ஈரப்பதமாக இருக்கும், இது பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைகிறது. இந்த மென்மையான பகுதியில் வறட்சியை நீக்க, வாரத்திற்கு இரண்டு முறை இறந்த செல்களை அகற்ற ஷாவ் செய்யவும்.

இது அதிக வியர்வையை கட்டுப்படுத்தி நீண்ட கால புத்துணர்ச்சியை அளிக்கும். கரடுமுரடான தன்மை மற்றும் நிறமாற்றத்தை நீக்க உதவும் டெய்சி ஃப்ளவர் மற்றும் மியூகோர் மிஹேயின் இயற்கை சாறுகளுடன் சுத்தமான அழகுப் பொருட்களை பயன்படுத்தலாம்.

First published:

Tags: Beauty Tips, Men's Beauty, Underarm Care