திருமண வயதில் உள்ள பலருக்கு அனேகமாக ஜனவரி மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். புத்தாண்டின் புதுமண ஜோடிகளில் ஒன்றாக மாறப் போகும் நீங்கள் மிக அழகாக காட்சியளிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பீர்கள். அதே சமயம், மேக்கப்பின்போது நம் கண்கள் பாதிக்கப்பட கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
கண்களை பாதுகாக்கும் வகையில், மேக்கப் செய்வது எப்படி என்பது குறித்து மருத்துவர் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணரான நீரஜ் சந்துஜா கூறியுள்ள ஆலோசனைகள் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
ஹைப்போ அலர்ஜெனிக் பொருட்கள்
ஹைப்போ அலர்ஜெனிக் தன்மை கொண்ட மேக்கப் பொருட்களை தான் எப்போதும் பயன்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக உங்கள் சருமத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்ய வாய்ப்பு இல்லாத சூழ்நிலையிலும் மேக்கப் பொருள்கள் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துமா என்பதை கண்டறிய சிறிய வழிமுறை இருக்கிறது.
மேக்கப் பொருள்களை முதலில் உங்கள் கைகளில் அப்ளை செய்து பார்க்கலாம். அதில் அலர்ஜி எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானால் பின்னர் முகத்திற்கும் பயன்படுத்தலாம்.
மேக்கப் பொருட்களை ஷேரிங் செய்வது தவறு
கண்களை சுற்றியிலும் மேக்கப் செய்ய பயன்படுத்தப்படும் பிரெஷ் உள்ளிட்ட பொருட்களில் நுண்ணுயிர்கள் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உண்டு. வேறு வழியின்றி பார்லரில் பயன்படுத்துவதாக இருந்தால், அவை முறையாக சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும்.
Also Read : ஆசையாக வளர்க்கும் நகம் அடிக்கடி உடையுதா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!
கவனமாக கலைக்கவும்
ஐ-லைனர், கோல்ஸ், மஸ்காராஸ் போன்ற மேக்கப் பொருட்கள் நம் கண்களுக்குள் ஊடுருவ வாய்ப்புகள் அதிகம். ஆகவே, எப்போதும் தூங்கச் செல்லும் முன்பாக மேக் அப் அனைத்தையும் களைத்து விடுங்கள். கண்களை சுற்றியுள்ள மேக் அப் அகற்றுவதற்கு அல்கஹால் இல்லாத ரிமூவரை பயன்படுத்துங்கள்.
ஐ-லைனரை தவிர்க்கலாம்
மேக் அப் செய்து கொள்ளும் இந்திய பெண்கள் பலர் கோல் ஐ-லைனர் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய லெட் என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆபத்தான இந்தப் பொருளை தவிர்ப்பது நல்லது.
காலாவதி தேதி
உண்ணும் உணவுப் பொருள்கள், மருந்து பொருள்களுக்கு மட்டுமல்ல, மேக் அப் பொருள்களுக்கும் காலாவதி தேதி உண்டு. மேக் அப் செய்கின்ற அவசரத்திலும், ஆர்வத்திலும் காலாவதி தேதி குறித்து சரிபார்க்க மறந்து விடாதீர்கள். ஏனெனில் காலாவதியான பொருட்களில் பாக்டீரியா வளர்ந்திருக்கும்.
Also Read : தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!
காண்டாக்ட் லென்ஸ்
உங்களிடம் காண்டாக்ட் லென்ஸ் இருக்கிறது என்றால், மேக் அப் செய்வதற்கு முன்பாக அதனை அணிந்து கொள்ளலாம். இது கண்களுக்கு கூடுதலான பாதுகாப்பை உறுதி செய்யும். மேக் அப் செய்த பிறகு கண்கள் சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது, தடிப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eye care, Eye makeup, Makeup