ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்களது தலைமுடி முன்கூட்டியே நரைக்காமல் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

உங்களது தலைமுடி முன்கூட்டியே நரைக்காமல் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

காட்சி படம்

காட்சி படம்

முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூட ஒன்றிரண்டு முடி தான் நரைத்திருக்கும். ஆனால் இப்பொது பலருக்கும் 40 வயதிற்குள்ளாகவே தலைமுடி, மீசை மற்றும் தாடி என அனைத்தும் நரைத்து காணப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வயதுக்கு ஏற்ப முடி நிறத்தில் மாற்றம் ஏற்படுவது பொதுவானது. ஆனால் தற்போது பள்ளி & கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்ட நடுத்தர வயதினர் வரை அனைவருக்கும் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது இளநரை.

முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூட ஒன்றிரண்டு முடி தான் நரைத்திருக்கும். ஆனால் இப்பொது பலருக்கும் 40 வயதிற்குள்ளாகவே தலைமுடி, மீசை மற்றும் தாடி என அனைத்தும் நரைத்து காணப்படுகிறது. இப்படி முன்கூட்டியே முடி நரைப்பது பல காரணிகளைப் பொறுத்தது. ஏஜிங், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ், மரபியல், உணவு மற்றும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், வைட்டமின் பி-12 குறைபாடு உள்ளிட்டவை முன்கூட்டியே முடி நரைப்பதற்கான காரணிகளாக இருக்கின்றன என்று ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி குறிப்பிட்டு உள்ளார்.

also read : சரும அழகிற்கு தேனில் மறைந்திருக்கும் ரகசியங்கள்.!

தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் நரை முடி பொதுவாக வயதானவுடன் தொடர்புடையது என்றாலும் முன்கூட்டியே சிலருக்கு ஏற்படும் நரை ஒருவருக்கு அவர் மீதே குறைந்த சுயமரியாதை ஏற்பட முக்கிய காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்கள் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க மற்றும் நரையை தாமதப்படுத்த பின்பற்ற வேண்டிய டிப்ஸ்களையும் அஞ்சலி முகர்ஜி ஷேர் செய்து கொண்டுள்ளார்.

இயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழச்சாறுகள் மூலமும், சப்ளிமென்ட்ஸ் மூலமும் போதுமான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை எடுத்து கொள்ள வேண்டும்.
புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகம் உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தலைமுடி இயற்கையான பிரகாசத்தையும், இயற்கையான நிறத்தையும் பெறும்.
உங்கள் டயட்டில் எப்போதும் அடர் பச்சை காய்கறிகள், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பழங்களை சேர்த்து கொள்வது அவசியம்.
எப்போதுமே கெமிக்கல்கள் கலக்கப்பட்ட கமர்ஷியல் ப்ராசஸ்டு ஹேர் டையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஹேர் டை பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
முடி தயாரிப்புகளை வாங்குவதற்கு முன் அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும்பொருட்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும். அவற்றில் சோடியம் லாரில் சல்பேட் போன்ற கடுமையான டிட்டர்ஜென்ட்ஸ் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றை தவிர்த்து, மென்மையான தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்
உச்சந்தலையில் நல்ல ரத்த ஓட்டம் காணப்பட்டால் அது பல கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும். எனவே உங்கள் விரல் நுனியால் உங்கள் உச்சந்தலை மற்றும் தலைமுடியின் வேர்களை அவ்வப்போது நன்கு மசாஜ் செய்யவும்.
அதே போல தினசரி அரை மணி நேரமாவது தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மட்டுமல்ல மயிர் கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் செல்வதையும் உறுதிப்படுத்துகிறது.
காப்பர், செலினியம், இரும்பு, கால்சியம், பி 12 மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
செயற்கை வண்ணமூட்டப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட கூடாது. முடிந்தவரை இவற்றை தவிர்க்க வேண்டும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Hair, Hair care