Happy Holi : ஹோலிக்கு பின் சருமம் மற்றும் முடியில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவும் டிப்ஸ்..!

Happy Holi : ஹோலிக்கு பின் சருமம் மற்றும் முடியில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவும் டிப்ஸ்..!

மாதிரி படம்

சந்தைகளில் ரசாயனங்கள் கலக்கப்பட்ட வண்ண பொடிகள் விற்கப்பட்டாலும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட வண்ணங்களும் கிடைக்கின்றன.

  • Share this:
மார்ச் 28 மற்றும் 29ம் தேதிகளில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஹோலியின் போது மக்கள் ஒருவர் மீது பெறுவர் வண்ணம் பூசி மகிழ்வர். சந்தைகளில் ரசாயனங்கள் கலக்கப்பட்ட வண்ண பொடிகள் விற்கப்பட்டாலும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட வண்ணங்களும் கிடைக்கின்றன.

இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை என்பது உலகின் மிகவும் துடிப்பான மற்றும் வண்ணமயமான பண்டிகை. இதன்போது பிரகாசமான கலர்கள், கலர்கள் கலக்கப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்தல் மற்றும் சுவையான இனிப்புள் என வேடிக்கையான கொண்டாட்டமாக களை கட்டும். இந்த பண்டிகையில் இயற்கை கலர்களை வாங்கி பயன்படுத்தி உடலுக்கு நன்மை செய்து கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் ஹோலி உற்சாகத்தில் கலர்களை முகம், உடல், தலைமுடி என உடல் முழுவதும் பூசி மகிழ்வோம். இப்படி உடல் முழுக்க பூசப்படும் கலர்கள் இயற்கையானது என்றால் தீமை இல்லை. அதுவே செயற்கை ஹோலி கலர்கள் என்றால் அதனால் சருமம் மற்றும் முடியில் ஏற்படும் தேவையற்ற சேதத்தை தடுக்க சில குறிப்புகளும் உள்ளன.

நண்பர்கள், உறவினர்களுடன் ஹோலி ஆட்டம் போட்ட பிறகு ஒருவர் இறுதியாக மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும். அது தோல் மற்றும் தலைமுடியில் போகாமல் ஒட்டி கொள்ளும் ஹோலி கலர்கள். சில ஹோலி கலர்களில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளதால் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த கலர்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் தோல் மற்றும் கூந்தல் பிரச்சனைகள், தடிப்புகள்,முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஹோலிக் பின் தோல் பிரச்சனையும் வராமல் தடுக்கும் சில டிப்ஸ்களை பார்ப்போம்.



* உங்கள் முகம் அல்லது உடலில் ஒட்டி கொண்டிருக்கும் வண்ணங்களை அகற்ற உடனடியாக சோப்பு கொண்டு சருமத்தை தேய்த்து கழுவ வேண்டாம். ஏனென்றால் அப்படி செய்வது சருமத்தில் இருக்கும் உலர்ந்த கலர்களை அகற்றுவதை மேலும் கடினமாக்கிவிடும். அதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

கிளன்சிங் பால்(Cleansing Milk):

முகத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவும் கிளன்சிங் பால் பயன்படுத்துவது சருமத்தில் ஒட்டி கொண்டிருக்கும் ஹோலி கலர்களை அகற்ற எளிதான வழி. சருமத்தில் இருக்கும் அனைத்து கலர்கள் மாறும் லேயர்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இதை பயன்படுத்துவதால் உங்கள் சருமம் வறண்டு போகாமல் தடுக்கிறது.

Happy Holi : ஹோலியின் போது முகம், உடலில் படியும் கலர்களை அகற்ற ஈஸி டிப்ஸ்!

ஃபேஸ் டோனர்:

சில நீர் அடிப்படையிலான ஃபேஸ் டோனர் பயன்படுத்தலாம். இது அதிக நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்துடன் இருப்பது போல உணர உதவும்.

மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துங்கள்..

தீங்கு விளைவிக்கும் ரசாயன கலர்கள் உங்கள் சருமத்தை பாதிக்கும் என்பதால் அதை தவிர்க்க மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்தலாம். உங்கள் தோல் வகைக்கு ஏற்ப ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக அப்ளை செய்வது அந்த பகுதியில் ரசாயன கலர்களால் ஏற்பட்ட சரும வறட்சியை போக்கும்.



வீட்டு தயாரிப்பு:

வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தின் pH சமநிலையை சீராக்க உதவும். ஒரு பாத்திரத்தில், பிசைந்த பப்பாளி, தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, இவை அனைத்தையும் நன்றாக கலக்கவும். இந்த கலவையில் ஒரு சிட்டிகை மஞ்சள் அல்லது ஹால்டி சேர்க்கலாம். முகம் மற்றும் கழுத்து மீது பூசி 20 நிமிடங்களுக்கு பின் கழுவி விடலாம். ஹோலி கொண்டாடிய பிறகு இப்படி வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவது உங்கள் சருமத்தை மேலும் சாஃப்ட் மற்றும் ஸ்மூத்தாக உணர உதவும்.

தலைமுடியை பரமரிக்க..

ஹோலி வண்ணங்களால் மல்டி கலரில் இருக்கும் உங்கள் தலைமுடியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இந்த ஹேர் மாஸ்க் கலவை முடியில் ஒட்டியிருக்கும் அனைத்து கலர்களையும் போக்கி விடும்.தலைமுடியை மென்மையாக்கும். இந்த கலவையை 25 நிமிடங்கள் தலையில் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.



மேலும் சில டிப்ஸ்:

ஹோலிக்குப் பிறகு சில நாட்களுக்கு பேஷியல் செய்து கொள்வதை தவிர்க்கவும். ஹோலிக்கு பின் முடிந்தால் குறைந்த மேக்அப் பயன்படுத்த முயற்சிக்கவும், தேவையில்லை என்றால் சில நாட்களுக்கு மேக்அப் போடாமல் வெளியே செல்லுங்கள்.உங்கள் தலைக்கு முடிந்த வரை தேங்காய் எண்ணெய் வையுங்கள். லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் வகைகளை சிலநாட்களுக்கு பயன்படுத்துங்கள்.

Published by:Sivaranjani E
First published: