பல லேயர்களை கொண்ட உடைகளை அணியும் பழக்கம் குளிர் காலத்தில் சரியானதாக இருக்கும். ஆனால், தற்போது வாட்டி வதைக்கும் வெயில் காலங்களில் அத்தகைய ஆடைகள் சரியான தேர்வாக இருக்க முடியாது. குறிப்பாக வியர்வை என்ற கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் வெயில் காலத்திற்கு ஏற்ற காற்றோட்டமான உடைகளை தான் நாம் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அதிலும் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் நல்ல தேர்வாக அமையும்.
ஆனால், கைகளின் அக்குள் பகுதியில் இருக்கும் கருமை அல்லது புள்ளிகள் போன்ற காரணங்களால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய தயக்கமாக இருக்கிறதா? அப்படியானால் இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்.
கை அக்குள்களில் கருவளையம் மற்றும் இதர அடர்த்தியான நிறமிகள் ஏற்படுவதற்கு மரபு ரீதியான விஷயங்கள் உள்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நாம் ஷேவிங் செய்ய பயன்படுத்தும் க்ரீம் அல்லது பாடி ஸ்பிரே போன்றவற்றில் இருக்கும் அலுமினியம் மற்றும் இதர ரசாயனங்கள் காரணமாகவும் இந்த நிறமிகள் தென்படலாம்.
அக்குள் பகுதிகளில் அதிகமாக சேரும் இறந்த செல்களின் காரணமாகவும் அங்கு கருமை போல தென்படும். இவற்றை எப்படி சரி செய்வது என்பதை பார்க்கலாம்.
பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும் :
நமது உணவில் நல்ல தரமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இடம்பெற வேண்டும். அதற்கு நாம் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளோடு முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
Activated Charcoal-ஐ முகத்தில் பூசுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன..?
சூடான வேக்சிங் தவிர்க்கவும்
ஹாட் வேக்சிங், முடிகளை அகற்றுவதற்கான க்ரீம் மற்றும் திரெட்டிங் போன்றவற்றை அக்குள் பகுதியில் தவிர்க்கவும். வேக்சிங் செய்யும்போது நம் சருமத்தின் மெல்லிய பகுதி உரிந்து விடும். இதனால், எரிச்சல் மற்றும் தொற்று ஆகியவை ஏற்படலாம். நீண்டகாலமாக வேக்சிங் செய்பவர்களுக்கு அக்குள் பகுதி கருமை நிறமாக மாறும். அதற்குப் பதிலாக ஷேவிங் செய்யலாம் அல்லது லேசர் முறையில் முடிகளை நீக்கம் செய்யலாம்.
ரசாயன பொருட்களை தவிர்க்கவும்
அக்குள் பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தை சமாளிப்பதற்காக நாம் டியோடோரண்ட்களை பயன்படுத்துகிறோம். அது நமக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதில் உள்ள அலுமினியம் மற்றும் இதர ரசாயனம் என்பது கருமையை உண்டாக்குகிறது.
சருமத்திற்கான அத்தனை பிரச்சனைகளுக்கும் சமையலறையிலேயே பலன் இருக்கு... அவை என்னென்ன தெரியுமா..?
கிளைகோலிக் ஆசிட் பயன்பாடு
அக்குள் பகுதியில் உள்ள கருமை நிறமியை நீக்குவதற்கு கிளைகோலிக் அமிலம் பயன்படுத்தலாம். இதை வாரத்தில் ஒருமுறை பயன்படுத்துவது போதுமானது. இதனால் வியர்வை மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றில் இருந்து தீர்வு கிடைக்கும்.
தொடர்ந்து சுத்தம் செய்தல்
நம் முகத்தை போலவே அக்குள் பகுதியும் சென்சிட்டிவிட்டி மற்றும் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கக் கூடியது ஆகும். குறிப்பாக, கைகள் மடங்கி, அக்குள் என்பது உள்புறமாக இருப்பதால் காற்றோட்டம் இன்றி காணப்படுகிறது. இதனால் அங்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தினசரி இதனை சுத்தம் செய்வது அவசியம். வாரத்தில் இருமுறையாவது இறந்த செல்களை நீக்கம் செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.