HOME»NEWS»LIFESTYLE»beauty tips how to check purity of rose water esr ghta

நீங்கள் பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் ஒரிஜினலா அல்லது போலியா..? கண்டறிய அருமையான டிப்ஸ் இதோ....

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும், ஆனால் சில நிறுவனங்கள் நறுமணத்திற்காக சில நிறமிகளை சேர்க்கின்றன.

நீங்கள் பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் ஒரிஜினலா அல்லது போலியா..? கண்டறிய அருமையான டிப்ஸ் இதோ....
ரோஸ் வாட்டர்
  • Share this:

ரோஸ்வாட்டர் தோல் பராமரிப்பில் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. எண்ணற்ற ரோஸ் வாட்டர் ப்ராண்ட்கள் குறைந்த விலையில் ரோஸ் வாட்டரை வழங்குகின்றன. ஆனால் அவை தூய்மையானது தானா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் நறுமண ரோஸ் வாட்டரை நாம் பயன்படுகிறோம். இது நமது சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. ஆனால் ரோஸ் வாட்டர் ஒரிஜினலா என்பதை அறிந்து பயன்படுத்துவது நல்லது.

ஒரிஜினல் ரோஸ் வாட்டரை அடையாளம் காண்பது எப்படி?

* ரோஸ் வாட்டர் ரோஜாப்பூவின் இதழ்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ரோஜா பூவின் இதழ்களை பிரித்து அதனை தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அந்த தண்ணீரை சூடு செய்து அதிலிருந்து தூய ரோஸ் வட்டரானது தயாரிக்கப்படுகிறது. இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும், ஆனால் சில நிறுவனங்கள் நறுமணத்திற்காக சில நிறமிகளை சேர்க்கின்றன. இதனால் சருமம் பாதிப்படையும் என்பதால், நீங்கள் ரோஸ் வாட்டர் வாங்கும் முன்னர் சரியானதை தேர்வு செய்வது அவசியம்,



* ரோஸ் வாட்டர் இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதில் செயற்கை பொருட்கள் கலந்திருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.



* ரோஸ் வாட்டர் வாங்க நினைத்தால் அதன் கவரில் இருக்கும் மூலப்பொருட்கள் அட்டவணையை முதலில் சரி பாருங்கள், அதில் ரோஸ் வாட்டர் இயற்கையானது மற்றும் வேறு எந்த வேதிப்பொருளிலும் இல்லாதது என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதனை வைத்து நீங்கள் வாங்கலாம்.

* உங்கள் ரோஸ் வாட்டர் மிகவும் மலிவானதாக இருந்தால் அதனை வாங்க வேண்டாம். 1 கிலோ ரோஸ் வாட்டர் கிட்டத்தட்ட 5 டன் ரோஜா இதழ்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, எனவே விலை மிகக் குறைவாக இருந்தால் அது போலியானது என தெரிந்துகொள்ளுங்கள்.

ரோஸ் வாட்டரின் நன்மைகள் :

சுத்தப்படுத்தி :

ரோஸ்வாட்டர் ஒரு நல்ல இயற்கை சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. தேவையான அளவு ரோஸ் வாட்டரை எடுத்து அதை ஒரு பருத்தி துண்டு அல்லது பஞ்சில் எடுத்து முகம் முழுவதும் துடைக்கப்படலாம். இது உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்துகிறது. பொதுவாக வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன் இந்த முறையில் நீங்கள் உங்கள் சருமத்தை தூய்மையாக்கலாம்.

Lemon : எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கி தண்ணீர் ஊற வைத்து தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா..?

டோனர் :

உங்கள் சருமத்தின் பி.எச் அளவை சமப்படுத்த முகம் கழுவினால் முகத்தை கழுவிய பின் டோனரை பயன்படுத்துவது நல்லது. தற்போது எண்ணற்ற ரோஸ் வாட்டர் டோனர்கள் சந்தையில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி நீங்கள் எளிதாக பயன்படுத்தலாம். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் ஸ்பிரே செய்யவும். இது உங்கள் சரும துளைகளை இறுக்கி வறட்சியை நீக்குகிறது. நீங்கள் விரும்பினால், கிளிசரின் சொட்டுகளையும் இதில் சேர்க்கலாம். இது வறண்ட சருமத்தில் நன்றாக வேலை செய்கிறது.



புத்துணர்ச்சி :

கோடை வெப்பத்தில் சில நேரங்களில் சருமம் பொலிவிழந்து காணப்படும். நீங்கள் அப்போது உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும் என நினைப்பீர்கள், ஆனால் தண்ணீருக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். இது உங்களுக்கு ஒரு குளிரூட்டும் உணர்வை தரும்.

கண்களுக்கு நல்லது :

உங்களுக்கு ஒற்றைத் தலைவலி அல்லது உங்கள் கண்களில் வீக்கம் அல்லது சோர்வு இருந்தால் ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். கணிணி திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு கண்கள் வறட்சியடையும், இவர்கள் ரோஸ் வாட்டரை பருத்தி துண்டில் எடுத்து இரு கண்களிலும் சுமார் 15 நிமிடங்கள் இருக்குமாறு வைக்கலாம். இது உங்கள் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை குறைத்து புத்துணர்ச்சியாக்குகிறது.

பொலிவான சருமத்திற்கு :

உங்களுக்கு சருமம் வறட்சியாகவோ அல்லது முகப்பரு இருந்தாலும் ரோஸ் வாட்டரை தினமும் இரவில் அப்ளை செய்துவிட்டு காலை எழுந்ததும் கழுவலாம். அதேபோல உடனடி பளபளப்பை விரும்பினாலும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்குகளில் நன்றாக வேலை செய்கிறது. ரோஸ் வாட்டரை முல்தானி மிட்டியுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்து உணர்ந்தவுடன் கழுவலாம், வறண்ட சருமம் இருப்பவர்கள் தேன் சேர்த்து கொள்ளலாம்.



பிற நன்மைகள் :

* சருமத்தின் எண்ணெய் பசையை எதிர்த்துப் போராடுவதற்கும், பி.எச் அளவை சரிசெய்யவும் ரோஸ் வாட்டர் சிறந்தது.
* சருமத்தை ஈரப்பதமாக வைத்துகொள்ள உதவுகிறது.
* சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்தலாம்.
* இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்கிறது.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: