Home /News /lifestyle /

சாக்லெட் பாயாக நீங்க ஜொலிக்கணுமா? ஆண்களே உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ

சாக்லெட் பாயாக நீங்க ஜொலிக்கணுமா? ஆண்களே உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ

காட்சிப் படம்

காட்சிப் படம்

நாடு முழுவதும் சுமார் 40 விழுக்காடு ஆண்களுக்கு தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணம் உருவாகியுள்ளது.

அழகு, கவர்ச்சி ஆகியவை பெண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆண்கள் எதிர்பார்க்கும் அதே அழகை பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்கள். சூப்பரான ஹேர் ஸ்டைல், ஹேண்ட்சம் லுக், உடை அலங்காரம் என ஜொலிக்கும் ஆண்கள் பெண்களின் கவனத்தை எளிதாக பெற்றுவிடுவார்கள். மேலும், அழகு என்பது ஒருவருக்கு தன்னம்பிக்கையும், தைரியத்தையும் கொடுக்கும். தற்போது இருக்கும் இளம் தலைமுறையினரிடம், தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அண்மைக் காலமாக மேலோங்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த ஓராண்டில் அத்தகைய மனமாற்றம் ஆண்களிடத்தில் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் சுமார் 40 விழுக்காடு ஆண்களுக்கு தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணம் உருவாகியுள்ளது. உங்களை அழகுபடுத்திக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், நீங்கள் நினைப்பதுபோல் அவை ஒரே நாளில் நடந்து விடாது. அழகாக வைத்துக்கொள்ள, உங்களுக்கான சில அழகு குறிப்புகளை அந்தந்த காலத்தில் சரியாக பின்பற்றி வரவேண்டும்.

க்ளீன், பிரஷ்ஷான முகம்:

முகத்தில் இருக்கும் தோல் பராமரிப்பு மிக மிக முக்கியமான ஒன்று. பளபளப்பான முகம் வேண்டுமென்றால், உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்தின் தோல்களில் சேர்ந்துள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் அகற்றுவதுடன், தூசு உள்ளிட்ட மாசுபாடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். நல்ல பேஷியல் கிளீனரை வாங்கி, முகத்தை நன்கு மசாஜ் செய்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். அதன்பிறகு சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர் சில துளிகள் சேர்க்கவும். பின்னர் இறுதியாக ஒரு நல்ல சன்ஸ்கிரீனை அப்ளை செய்து கொள்ளுங்கள்.

நல்ல கிரீம் வேண்டும் என நினைப்பவர்கள், நிவியா சன் (NIVEA Sun – Moisturising Lotion SPF 50+), நியூட்ரோஜெனா ஹைட்ரோ பூஸ்ட் வாட்டர் ஜெல் (Neutrogena Hydro Boost Water Gel), மேக்கஃபைன் (MCaffeine Naked) ரா காஃபி பேஷ் சீரத்தை பயன்படுத்தலாம். முகத்தில் இருக்கும் தாடியை அகற்றுவதற்கு நல்ல டிரிம்மிங் மெஷினை பயன்படுத்துங்கள், குறிப்பாக, உங்களின் கைகளின் அசைவுக்கு ஏற்ப செல்லும் ரேஷரை வாங்கிக்கொள்வது நல்லது. சந்தையில் விற்பனை செய்யப்பட்டும் பியர்ட் ஆயில்ஸ், பியர்ட் வேக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

ஜில்லெட் பிளெக்ஸ் பால் புரோகிளைடு (Gillette Flexball ProGlide) காம்போ பேக், அதனுடன் பிளெக்ஸ் பால் பிளேடுகளையும் வாங்கி சுமார் 499 ரூபாய் வரை சேமித்துக்கொள்ளலாம். பிலிப்ஸ் மல்டிகுரூமிங் (Philips 8-in-1 Multigrooming) கிட், உஸ்டிரா பியர்டு குரவுத் ஆயில் (Ustraa Beard Growth Oil ), ட்ரூபிட் அன்ட் ஹில் பியர்ட் பால்ம் (Truefitt and Hill Beard Balm) உள்ளிட்ட பிராண்டுகளும் சந்தையில் கிடைக்கும் பிரபலமான பிராண்டுகள் ஆகும்

ஒட்டுமொத்தமாக நீங்கள் பிரஷ்ஷாக மற்றும் தைரியமாக உணர வேண்டுமானால், குளிப்பதற்கு நல்ல சோப் மற்றும் தலைக்கு ஷாம்பூக்களை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் எரிச்சல் மற்றும் நமைச்சல் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதுபோல் உணர்வீர்கள்.

1. பாத் அன்ட் பாடி வாஷ்

2. ரோஸ்மேரி அவகோடா ஆயில்

3. ஏக்ஸ் டார்க் சாக்லெட் பாடி வாஷ்

4. மாமேர்த் ஹேர் ஃபால் கன்ட்ரோலர் ஷாம்பூ

கடைசியாக, உங்கள் மீது நல்ல எண்ணம் ஏற்படுவதற்கு சூப்பரான வாசனைகளை உடைய பாடி ஸ்பிரே அல்லது பர்ஃயூம்மை பயன்படுத்தலாம். வெண்ணிலா, வுட், லாங் லாங் உள்ளிட்ட ஸ்பிரேக்களை உபயோகிக்கலாம்.

1. பி.வி.எல்.காரி மேன் இன் பிளாக் ஈ டி பர்ப்யூம் (BVLGARI Man In Black Eau De Parfum)

2. ஜார்ஜியோ அர்மானி அக்வா டி ஜியோ அப்சோலு ஈ டி பர்ஃபியூம் (Giorgio Armani Acqua Di Gio Absolu Eau De Parfum)

3. பெனட்டனின் யுனைடெட் கலர்ஸ் யுனைடெட் ட்ரீம்ஸ் (United Colors of Benetton United Dreams Be Strong Deodorant Spray For Men)

4. ஜாகுவார் கிளாசிக் பிளாக் (Jaguar Classic Black For Men Deodorant)

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Beauty Tips

அடுத்த செய்தி