Home /News /lifestyle /

முகம் பளபளக்க எந்த வகை ஃபேஷியல் சிறந்தது..? உங்களுக்கான டிப்ஸ்..!

முகம் பளபளக்க எந்த வகை ஃபேஷியல் சிறந்தது..? உங்களுக்கான டிப்ஸ்..!

 ஃபேஷியல்

ஃபேஷியல்

பெண்கள் பொதுவாக தங்களுடைய முகத்தை எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்க முயல்வார்கள். இதற்காகவே பியூட்டி பார்லர்கள் சென்று ஃபேஷியல் செய்கின்றனர்.

தங்களது முகத்தை எப்போதும்பளபளப்பாகவும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பில் உள்ளவர்கள் கீழ்வரும் தனித்துவமான ஃபேஷியல்களை கொஞ்சம் ட்ரை பண்ணலாம்..

பெண்கள் பொதுவாக தங்களுடைய முகத்தை எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்க முயல்வார்கள். இதற்காகவே பியூட்டி பார்லர்கள் சென்று ஃபேஷியல் செய்கின்றனர். இவ்வாறு தங்களது சருமத்திற்கு ஏற்ப ஃபேஷியல்கள் செய்யும் போது இறந்த செல்களை வெளியேற்றி முகத்தை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. அரோமோதெரபி ஃபேஷியல், நறுமண எண்ணெய் கொண்டிருக்கும் ஃபேஷியல்கள், முகப்பருக்களைக் குறைக்கும் ஃபேஷியல்கள், சுருக்கத்தைத் தடுக்கும் ஃபேஷியல்கள் என்று பலவகைகள் உள்ளநிலையில், சில தனித்துவமான ஃபேஷியல்களும் உங்களது சருமத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவுகிறது. அப்படிப்பட்ட சில ஃபேஷியல்கள் குறித்துத்தான் இப்போது நாம் இங்கே தெரிந்துக்கொள்ளப்போகிறோம்.நானோ ஃபேஷியல் (Nano Facial) :

இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி செய்யப்படும் ஃபேஷியல் முறைகளில் ஒன்று தான் நானோ ஃபேஷியல். இதனை அழகுச்சாதன நிபுணர்கள், நானே உட்செலுத்துதல் பேனாவைப்பயன்படுத்தி மேல்தோலில் நுண்ணிய பாதைகளை உருவாக்கி, சருமத்தின் கீழ் உள்ள அடுக்குகளில் வேலை அதிக ஊட்டச்சத்துக்களை ஊடுருவ அனுமதிக்கிறது. இதோடு சில கிரீம்களைப்பயன்படுத்தியும், நானோ தொழில்நுட்பத்தின் உதவியோடும் இந்த ஃபேஷியல் செய்யப்படும் போது மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், தழும்புகள், எண்ணெய் சருமம், வறண்ட சருமமம் அல்லது கரும்புள்ளிகளை எளிமையாக நீக்க உதவுகிறது. எவ்வித வலியும் இல்லாமல் செய்யப்படும் இந்த முறை ஃபேஷியல், சரும அடுக்குகளில் சிறப்பாக வேலை செய்கிறது.

மழையில் நனைவது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்குமா..? 

ஃபயர் மற்றும் ஐஸ் ஃபேஷியல் ( Fire and ice facial):

ஃபயர் மற்றும் ஐஸ் ஃபேஷியல் என்ற பெயர் அனைவரும் வித்தியாசமாகத் தெரியும். அதற்கேற்றால் போல் தான் இந்த ஃபேசியலும். சூடான மற்றும் குளிர் சிகிச்சைகள் இரண்டின் கலவையாகவும் தாவரவியல் அமிலங்கள், ரெட்டினோல், ஆக்ஸினேற்றிகள் மற்றும் நியாசினமைடு ஆகியவற்றைப்பயன்படுத்தும் போது முகம் பளபளப்பாகத் தோற்றமளிக்க உதவுகிறது.மேலும் அனைத்து வகை சருமங்களுக்கும் ஏற்றவகையிலான இந்த ஃபேஷியல் சருமத்தின் வேர் வரை சென்று நல்ல பலன் அளிக்கிறது. மேற்கண்ட முறைகளை செய்த பிறகு, தொடர்ந்து கற்றாழை, ரோஸ்மேரி சாறு, கிரீன் டீ சாறு மற்றும் ஹைலூரேனிக் அமிலம் கலந்த மாஸ்க் பயன்படுத்துவதால் இது முகத்தில் உள்ள மெல்லிய கோடுகளை அகற்றி உங்களது சருமத்தை மென்மையாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

காஸ்மெடிக் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்... மலைக்க வைக்கும் வளர்ச்சி...

கிரையோதெரபி ஃபேஷியல் ( Cryotherapy)

மேற்கூறிய ஃபேஷியல்கள் போன்று இல்லாமல் முற்றிலும் வினோதமான மற்றும் பயனுள்ள முக சிகிச்சை முறைகளில் ஒன்று தான் கிரையோதெரபி ஃபேஷியல். இச்சிகிச்சையில் பனிக்கட்டி நீராவிகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு குளிர்ச்சியாக செய்யப்படும் ஃபேஷியல்களால் உங்களது சருமம் இறுக்கமாக இருக்கவும், வீக்கத்தைக்குறைக்கவும் உதவியாக உள்ளது. இன்றைக்கு பெரும்பாலானோர் கிரையோதெரபி ஃபேஷியல் மட்டுமில்லாது கிரையோதெரபி சிகிச்சைகளையும் உடல் நலப்பாதுகாப்பிற்காக எடுத்துக்கொள்கின்றனர்.இதோடு மட்டுமின்றி 108 டிகிரி செல்சியசில் உடலைக்குளிரவைத்து செய்யப்படும் இந்த புதிய கிரையோதெரபி சிகிச்சையால், மருந்து, மாத்திரை, ஊசி இல்லாமல் மூட்டுவலி, தலைவலி, உடல்வலி போன்றவற்றைக் குணப்படுத்தும் சிகிச்சை முறை என்றும் கூறப்படுகிறது.

மேற்கண்ட தனித்துவமான ஃபேஷியல்களை இனி நீங்களும் கொஞ்சம் டிரை பண்ணிப்பாருங்கள். ஆனால் அதற்கு முன்னதாக உங்களது சருமம் மற்றும் உடல்நலத்திற்கு ஒத்துக்கொள்ளுமா? என்பதை முழுவதுமாக அறிந்துக்கொண்டு பயன்படுத்தத்தொடங்குங்கள்…

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Facial

அடுத்த செய்தி