வீட்டில் இருந்தபடியே சலூன் ஸ்டைலில் முடியை பராமரிக்க வேண்டுமா? இந்த பிராண்டை டிரை பண்ணி பாருங்க..!

தலைமுடி பிரச்னை

#KerastaseAtHome என்ற ஒரு இயங்குதளம் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 30 நகரங்களில் 350 க்கும் மேற்பட்ட சலூன்களில் முடி பராமரிப்பு விஷயங்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு தயாரிப்புகளை இந்த பிராண்ட் வழங்குகிறது.

  • Share this:
இணையதளம் என்பது ஒவ்வொரு மக்களின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் இணைய சேவையின் பங்கு மிக அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் ஊரடங்கு சமயத்தில் வணிகங்களுக்கான வளர்ச்சி இப்போது ஆன்லைனில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு இ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க சமூக வலைத்தளங்களில் அதிக முயற்சிகளை செய்து வருகின்றன. அந்த பட்டியலில் இப்பொது முடி பராமரிப்பு நிறுவனம் ஒன்றும் களமிறங்கியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பலர் சலூன்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தபடியே முடியை பராமரிக்கும் வழிமுறையை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாத்தியமான மற்றும் ஏற்கனவே இருக்கும் நுகர்வோருக்கு ஒரு நிபுணரைக் கண்டுபிடித்து, பரிசீலனை வழங்கவும், கலந்தாலோசிக்கவும், இறுதியாக முடி பராமரிப்பு பொருட்களை வாங்கவும் வாய்ப்பளிக்கிறது. இவை அனைத்தும் ஆன்லைனில் ஒரு சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்தி நடக்கிறது என்றால் நம்பமுடிகிறதா..?

#KerastaseAtHome என்ற ஒரு இயங்குதளம் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சலூன் ஹேர் ஸ்டைல் முதல் முடி நிபுணர் உரையாடலின் தனிப்பயனாக்கம் வரை சலூன்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் நுகர்வோருக்கு ஆன்லைன் வசதி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வர்த்தகம், பல பிராண்டுகளை உலகளவில் உள்ள தங்களது இறுதி நுகர்வோரை அடைய வேகமாக வளர்ந்து வரும் ஒரு வழியாகும். அந்தவகையில் சலூன் வசதிகளை இந்தியாவில் லக்ஸ் சேலன் தொழிலுக்கு கொண்டு வந்த முதல் நிறுவனம் கெராஸ்டேஸ் என்று தான் சொல்ல வேண்டும்.



கெராஸ்டேஸ் என்ற ஆடம்பர தொழில்முறை ஹேர்கேர் பிராண்ட் இந்தியாவில் உள்ள தனது நுகர்வோருக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான முடி பராமரிப்பு அனுபவத்தை நாடு முழுவதும் மிக ஆடம்பரமான சலூன்களோடு மட்டுமே இணைத்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மும்பை, என்.சி.ஆர், பெங்களூர், கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், புனே, ஹைதராபாத், சண்டிகர், லக்னோ உள்ளிட்ட 30 நகரங்களில் 350 க்கும் மேற்பட்ட சலூன்களில் முடி பராமரிப்பு விஷயங்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு தயாரிப்புகளை இந்த பிராண்ட் வழங்குகிறது.

இது குறித்து கெராஸ்டேஸ் இந்தியாவின் ஜி.எம்., ரச்சித் மாத்தூர் கூறியதாவது, “நுகர்வோர் இருக்கும் இடத்தில் இருப்பது, எந்தவொரு பிராண்டிற்கும் முக்கியமானது மற்றும் இன்றைய சூழ்நிலையில் மிக அவசியம்! எங்கள் வணிக கூட்டாளர் தங்களது சிறந்த சேவையை வழங்கவும், தயாரிப்புகளை ஆன்லைனில் வாங்குவதற்கான தளத்தை வழங்குவது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதாக இருக்கிறது.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் மசூர் பருப்பு ஃபேஸ் பேக்..! பயன்படுத்தும் முறைகள் இதோ...

டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் ஹைப்பர்-லோக்கல் மீடியா விளம்பரம் மூலம் எங்கள் சலூன் கூட்டாளர்கள் தங்கள் நுகர்வோர் தளத்தை வளர்க்க ஏதுவாக 2020 ஆம் ஆண்டில் ஒரு சமூக வர்த்தக தளத்தை நாங்கள் தொடங்கினோம். இந்த ஆண்டு நாங்கள் சமூக வர்த்தகத்தை மேம்படுத்திய அம்சங்கள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட பேக்-எண்ட் மேலாண்மை அமைப்புகளுடன் சமூக நிலையங்களை வலுப்படுத்துகிறோம், இதனால் சலூன் நிலையங்கள் தங்கள் வணிகத்தை விரைவுபடுத்த முடியும் ” என்று கூறியுள்ளார்.

கருமையான, நீளமான கூந்தலைப் பெற இந்த எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்..

2020 ஆம் ஆண்டில் உலகளாவிய தொற்றுநோயால் ஏற்பட்ட சவாலான சூழ்நிலையின் வெளிச்சத்தில், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள நுகர்வோரைச் சென்றடைவதற்கும், அவர்களின் ஆடம்பர முடி பராமரிப்புக்கான வசதியை வழங்குவதற்கும் ஒரு முன்னோடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் கெரஸ்டேஸ் அதன் சலூன் கூட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாகியுள்ளது.

நுகர்வோர் விரும்பிய சேவையை அவர்களின் வீட்டு வாசலில் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் நிறுவனம் சோகாம் இயங்குதளத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு ஆர்டரிலும் இரண்டு காம்ப்ளிமெண்டரி கெராஸ்டேஸ் மாதிரி சாச்செட்களை வழங்குவதன் மூலம் அவர்கள் தயாரிப்புகளின் மாதிரியை இணைத்து அனுப்புகிறது. இந்த வழியில் ஒருவர் கெரடேஸின் வரம்பு சலுகையை அதிகம் அனுபவிக்கலாம் என முடி பராமரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வீட்டிலேயே பெற, https://www.prosalonlocator.com/kerastase/socom என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

 
Published by:Sivaranjani E
First published: