கோடையிலும் உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் கோதுமை மாவு ஃபேஸ் பேக்!

கோதுமை மாவு ஃபேஸ் பேக்!

கொளுத்தும் வெயில் நேரங்களில் கூட முகத்தை அழகாக பராமரிக்க ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவுகின்றன.

  • Share this:
கோடை வெயில் வாட்டி எடுக்கும் இந்த நேரத்தில் பலருக்கும் தங்களது சருமத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடும் வெயிலில் சருமத்தை பளபளப்பாகவும், மிருதுவாகவும் பராமரிப்பது சற்று கடினம் தான். ஆனால் இந்த நேரத்தில் தான் சரும பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொளுத்தும் வெயில் நேரங்களில் கூட முகத்தை அழகாக பராமரிக்க ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவுகின்றன.

இதற்காக பியூட்டி பார்லர்களுக்கு சென்று தான் ஃபேஸ் பேக்குகளை பெற வேண்டும் என்பதோ, காஸ்டலியான ஃபேஸ் பேக் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதோ இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே செய்யப்படும் ஃபேஸ் பேக்குகள் அற்புதமான பலன்களை தர கூடியவை. அந்த வகையில் ஆட்டா மாவு கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் பேக்கை தயார் செய்யலாம். கோதுமை அரைக்கப்பட்டு மாவாக இருப்பது பொதுவாக கோதுமை மாவு / ஆட்டா என்று சொல்லப்படுகிறது.

ஆரோக்கியமான முறையில் உடல் எடையைப் பராமரிக்க உதவும் கோதுமை முகப்பொலிவிற்கும் பயன்படுகிறது. ஆட்டாவில் ஏராளமான ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் இருப்பதால் மக்கள் இதை தவறாமல் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். ஆட்டா மாவை கொண்டு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம், பருக்கள், சரும வறட்சி உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும். ஆட்டா மாவு உடலுக்கு மட்டும்மல்ல சருமத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்தை பொலிவாக ஜொலிக்க வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது

தெளிவான மற்றும் ஒளிரும் சருமத்திற்கு உதவும் எளிய மற்றும் ஆச்சரியமான ஆட்டா ஃபேஸ் பேக்கிற்கு தேவையான பொருட்கள் பின்வருமாறு..



*கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்

* தேன் - 1 டீஸ்பூன்

* தயிர் - 1 டீஸ்பூன்

* ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

* ஓட்ஸ் - 1 டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - சில துளிகள்

முட்டையில் இவ்வளவு அழகுக்குறிப்புகள் இருக்கா..?

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு நன்கு கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுலாம். இந்த ஃபேஸ் பேக் கலவை முகத்தில் உலர தொடங்கும் போது அதை நன்கு தேய்க்க விடும். அதன் பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவி விட வேண்டும். எல்லா சரும வகைக்கும் ஏற்ற இந்த ஃபேஸ் பேக்கை தவறாமல் வாரம் ஒரு முறை செய்து வந்தால் கோடை காலத்திலும் உங்கள் முகத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்து கொள்ள முடியும்.

தேன் உங்கள் தோல் நிறமியை ஒளிரச் செய்யும், ரோஸ் வாட்டர் இயற்கை எதிர்ப்பு பாக்டீரியா பண்புகள் கொண்டுள்ளது மற்றும் சருமத்தில் இருக்கும் இறந்த தோல் செல்களை (dead skin cells) அகற்ற தேங்காய் எண்ணெய் உதவுகிறது. எனவே இவற்றை தவறாமல் செய்து வாருங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: