Home /News /lifestyle /

Retinol Serum : சருமத்தில் சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி..? எப்போது பயன்படுத்த வேண்டும்..?

Retinol Serum : சருமத்தில் சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி..? எப்போது பயன்படுத்த வேண்டும்..?

ரெட்டினோல் சீரம்

ரெட்டினோல் சீரம்

ரெட்டினோல், வயதான முக தோற்றத்திற்கான அறிகுறிகளை சற்றே தாமதப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். ஆனால் இதை எப்போது முதல், அதாவது எந்த வயதில் இருந்து பயன்படுத்த தொடங்க வேண்டும்?

ரெட்டினோல் (Retinol) ஒரு வைட்டமின் ஏ வழித்தோன்றலாகும். இதை சரியான வயதில், சரியான முறையில் பயன்படுத்த தொடங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். இது ஆன்டி-ஏஜிங் எஃபெக்ட்ஸ், ப்ரைட்னிங் எஃபெக்ட்ஸ் மற்றும் கொலாஜன் பூஸ்ட்டிங் எஃபெக்ட்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கியது மற்றும் இது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கும் உதவுகிறது.

ஆகமொத்தம் ரெட்டினோல், வயதான முக தோற்றத்திற்கான அறிகுறிகளை சற்றே தாமதப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். ஆனால் இதை எப்போது முதல், அதாவது எந்த வயதில் இருந்து பயன்படுத்த தொடங்க வேண்டும்? - 20 முதல் 30 வயதிற்குள் தொடங்குவது நல்லது. ரெட்டினோல் சீரமை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்தினால் நல்ல முடிவுகளை பெறலாம்? எப்படியெல்லாம் பயன்படுத்தவே கூடாது? என்கிற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

ரெட்டினோல்-ஐ உங்கள் சருமத்திற்கு மெல்ல மெல்ல 'அறிமுகம்' செய்யுங்கள்!

உங்கள் சருமத்திற்கு ஒரு ரெட்டினோல் சீரமை அறிமுகப்படுத்தப்படுவதில் அதிக ஆர்வத்துடன் இருக்காதீர்கள். கொஞ்சம் மெதுவாக செயல்படுங்கள், ஏனெனில் உங்கள் சருமம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பயன்படுத்தத் தொடங்குங்கள், பின்னர் உங்கள் சருமம் அதை ஏற்றுக்கொண்டால் படிப்படியாக ஒவ்வொரு இரவும் அதை பயன்படுத்த தொடங்குங்கள்.



எப்பொழுதும் படுக்கை நேரத்தில் மட்டுமே பயன்படுத்தவும்!

பகலில் ரெட்டினோல் சீரம் பயன்படுத்துவது மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்றாகும். இதுவொரு லைட் சென்சிடிவ் மூலக்கூறு என்பதால் எரிச்சலான உணர்வு மற்றும் புற ஊதா கதிர்வீச்சு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மட்டுமே இதை பயன்படுத்தப்பட வேண்டும்.

உப்டான் பயன்படுத்துவதால் முகத்திற்கு ஏற்படும் அசத்தலான 5 நன்மைகள் என்னென்ன..?

ரெட்டினோல் உடன் வேறு எதையும் கலக்க வேண்டாம்!

இணையத்தில், ரெட்டினோல் பற்றி பல தவறான தகவல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் - ரெட்டினோல்-ஐ பயன்படுத்தும் போது ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க ஏஎச்ஏ-ஸ் (AHAs) அல்லது பிஎச்ஏ-ஸ் (BHAs) உடன் கலக்க வேண்டாம். இதை செய்வது அவ்வளவு நல்லதல்ல.



கோடை காலத்தில் கூடுதல் கவனம் தேவை!

வெயிலுக்குள் செல்லும் முன்னர் நீங்கள் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து விட்டீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளவும். இல்லை என்றால் கடுமையான சூரிய ஒளியைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் விடுமுறைக்குச் செல்லத் தயாராகி கொண்டு இருந்தால், ஒரு வாரத்திற்கு முன்பே ரெட்டினோல் சீரம் பயன்பாட்டை நிறுத்துவது அல்லது குறைப்பது நல்லது.

மேலும் இதை கெமிக்கல் பீல்ஸ் அல்லது எம்என்ஆர்எஃப் (MNRF) அல்லது ஃப்ராக்ஷனால் சிஓ2 (Fractional CO2) போன்ற குறைந்தபட்ச இன்வேசிவ் அல்லது அப்ரசிவ் டெர்மடோலஜி (invasive or abrasive Dermatology) நடைமுறைகளுடன் இணைக்க வேண்டாம்.

0.01 போன்ற குறைந்தபட்ச செறிவுடன் (minimal concentration) தொடங்கி, படிப்படியாக 0.3% சீரம் வரை செல்லவும். ஒட்டுமொத்தமாக, இது ஒரு அழகான பயனுள்ள மூலக்கூறாகும், இது சரியாகப் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தில் அதிசயங்களை செய்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Skincare

அடுத்த செய்தி