உங்கள் தலைமுடிக்கு எந்த மாதியான ஷாம்பூ, கண்டிஷ்னர் வகை ஏற்றது என தெரிந்துகொள்ளுங்கள்..!

உங்கள் தலைமுடிக்கு எந்த மாதியான ஷாம்பூ, கண்டிஷ்னர் வகை ஏற்றது என தெரிந்துகொள்ளுங்கள்..!

மாதிரி படம்

அதிக கெமிக்கல் உள்ள தலைமுடி தயாரிப்புகளை நாம் பயன்படுத்தினால் தலைமுடி கொட்டும்.

  • Share this:
அதிக கெமிக்கல் உள்ள தலைமுடி தயாரிப்புகளை நாம் பயன்படுத்தினால் தலைமுடி கொட்டும். நம் தலைமுடிக்கேற்ற சரியான ஷாம்பூ அல்லது பிற தயாரிப்புகளை தேர்வு செய்யாதது, அதிக கெமிக்கல் மிகுந்த ஷாம்புக்களை வாங்குவது, விலை குறைந்த தரமற்ற பொருட்களை தலைக்கு பயன்படுத்துவது, முடி உதிர்வு, முடி அடர்த்தி குறைவு பிரச்சனை சந்திக்கும் போதெல்லாம் ஷாம்புக்களை மாற்றுவது, நறுணத்துக்காக ஷாம்புக்களை வாங்குவது போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படுவது நம் கூந்தல் தான்.

ஆரோக்கியம் காக்க ஆர்கானிக் உணவு பொருள்கள் போன்று கூந்தல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆர்கானிக் ஷாம்பூக்களை மக்கள் இப்போது நாடி வருகிறார்கள். சரியான முடி பராமரிப்பு தயாரிப்புகளை கண்டுபிடிக்க நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

சரியான ஷாம்பு பிராண்டுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

இப்போதுள்ள காலகட்டத்தில் மார்க்கெட்டுகளில் பலவிதமான முடி பராமரிப்பு தயாரிப்புகள் பல பிராண்டுகளில் கிடைப்பதால் நிச்சயம் நமக்கு அவை குழப்பத்தை ஏற்படுத்தும். நம்மைப்போல் பலரும் சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுப்பதில் அதிக சிரத்தை அனுபவிப்பார்கள். அந்த வகையில் சரியானதை நீங்கள் தேர்வு செய்ய உங்களை சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் தேர்வு செய்ததை பற்றி கேட்டுப்பார்க்கலாம்.

சரியானது எது? ஷாம்புவா? கண்டிஷனரா?

மனிதர்களின் கைரேகை எப்படி ஒரே மாதிரி இருப்பதில்லையே அதேபோலத்தான் அவர்களின் தலை முடியும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான தலைமுடி இருக்கும். அந்த வகையில் உங்கள் தலைமுடியின் தன்மையை முதலில் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அதற்கு பொருத்தமான ஷாம்புகளை மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கி பயன்படுத்துங்கள். சிலருக்கு ஷாம்பு மட்டும் உபயோகித்தால் போதுமானதாக இருக்கும் சிலருக்கு கண்டிஷனரை ஷாம்புவுடன் பயன்படுத்த வேண்டியிருக்கும். மேலும் உங்களுக்கு தேவையானதை துறை சார்ந்த நிபுணர்களிடம் கலந்தாலோசித்த பின் முடிவெடுங்கள்.உங்கள் தலைமுடி வகையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்:

மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான தலைமுடி தயாரிப்புகள் இருந்தாலும் அதை அனைத்துமே உங்கள் தலைமுடிக்கு ஒத்துப்போகும் இன்று நம்மால் உறுதியாக கூற முடியாது. காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தலைமுடி இருக்கும். அதில் உங்கள் தலைமுடி வகையை முதலில் அறிந்து கொள்ளுங்கள். சிலருக்கு முடி மிகவும் மென்மையாக இருக்கும். சிலருக்கோ தலைமுடி கடினமாக இருக்கும். சிலருக்கு முடி கொட்டும், உடையும் அபாயமும் உண்டு எனவே உங்கள் தலைமுடி வகையை தெரிந்து கொண்டு பிறகு முடி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளில் தேவையான பொருட்கள் இருக்கிறதா...?

பலரும் இந்த காலகட்டத்தில் ஷாம்பு, கண்டீஷனர், சீரம் போன்ற பொருட்களில் குறிப்பிட்டிருக்கும் பொருட்களை படிப்பது கிடையாது. ஆனால் அவற்றில் குறிப்பிட்டிருக்கும் பொருட்களை பார்த்த பிறகு உங்கள் தலை முடிக்கு அவை செட் ஆகும் என்றால் நீங்கள் அவற்றை பயன்படுத்தலாம். சில தயாரிப்புகளில் சல்பேட் இருந்தால் அவற்றை நீங்கள் ஒதுக்கிவிட வேண்டும். இதுவே தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை போன்ற இயற்கை பொருட்கள் இருந்தால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்ஸ்..!

தலைமுடி தயாரிப்புகளை எப்படி பயன்படுத்துவது...?

நீங்கள் முதன் முதலாக ஒரு தலைமுடி தயாரிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அந்த தலைமுடி தயாரிப்பு பிரபலமானதா? அந்த நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? என்பனவற்றை தெரிந்து கொள்வதுடன் மேலும் சிறிய பேக்குகளில் அந்த தயாரிப்பு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் அப்படி இருந்தால் முதலில் அந்த சிறிய பாக்கெட்டுகளை வாங்கி உங்கள் தலை முடியில் பயன்படுத்திவிட்டு பிறகு நீங்கள் ரெகுலராக அவற்றை தலையில் ட்ரை செய்யலாம்.ஒரு நல்ல ஷாம்பூ எப்படி இருக்க வேண்டும்?

* ஒவ்வொருவரின் முடிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

* நிலைத்தன்மை (Consistency) உடையதாக இருக்க வேண்டும்.

* நச்சற்றதாக இருக்க வேண்டும்.

* எரிச்சல் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும்.

* முடியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

* மிக கடினமான தண்ணீரில் கூட நன்கு நுரைக்க வேண்டும்.

* தலைமுடியின் பளபளப்பை அதிகப்படுத்தி அதை மென்மையாக மாற்ற வேண்டும்.

* தலைமுடியை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்து, முடி பரட்டையாவதை தடுக்க வேண்டும்.

* முடியில் சிக்கு விழாமல் இருக்கச் செய்ய வேண்டும்.

* முடியின் நிறத்தை காக்க வேண்டும்.இப்படி, தலைமுடியை சுத்தம் செய்ய பயன்படும் ஒரு பொருளாக மட்டுமல்லாமல், ஒரு அழகுபடுத்தும் பொருளாகவும் ஷாம்பூ பார்க்கப்படுகிறது. ஒரு ஷாம்பூவில் கிட்டத்தட்ட 20-30 பொருட்கள் உள்ளன. அவற்றை பார்த்து வாங்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: