நாம் அனைவருக்கும் நீளமான மற்றும் அடர்த்தியான முடியை பெற ஆசை. ஆனால், பலவேறு காரணங்களினால் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு என பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நேரம் இன்மையால் அந்த பிரச்சனைகளை நாம் கவனிக்கவும் தவறி விடுகிறோம். வாரம் ஒரு நாள் ஒரு 10 நிமிடம் செலவு செய்தால் போதும். நீங்கள் கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தல் பெற உதவும் எளிமையான ஹேர் மாஸ்கை முட்டை, பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு வீட்டிலேயே செய்வது எப்படி என இங்கு காணலாம். இது, உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
> முதலில் ஒரு கிண்ணத்தில் ஹேர் மாஸ்க் செய்ய எடுத்து வைத்த முட்டையை உடைத்து ஊற்றவும்.
> முட்டை மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, அதில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் தனியே ஒரு கோப்பையில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.
Also Read : வீட்டிலேயே ஈசியா ஹேர் கலரிங் செய்யலாம்… எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!
> இதில், 4 ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கினால் கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஹேர் மாஸ்க் ரெடி.
எப்படி பயன்படுத்துவது?
தலைக்கு குளிப்பதற்கு முன் இந்த மாஸ்கினை கூந்தலுக்கு பயன்படுத்தி மசாஜ் செய்து, உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
குளிக்கும் போது கண்டிஷனர் ஏதும் பயன்படுத்த வேண்டாம். வாரம் 3 முறை இந்த மாஸ்கினை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
பயன்கள் :
ஹேர் மாஸ்கில் நாம் பயன்படுத்தும் பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாக உள்ளது. இந்த சேர்மங்கள் மென்மையான கூந்தல் பெற உதவுகிறது.
இந்த ஹேர் மாஸ்கில் நாம் பயன்படுத்தும் முட்டையின் வெள்ளைக்கரு, கூந்தலின் அதிகப்படியான எண்ணெய் பசையினை குறைக்கும் பண்பு கொண்டது. அதே நேரம், கூந்தலில் ஈரப்பத்ததை தக்க வைத்து, தலைமுடி பொலிவுக்கு உதவுகிறது.
இந்த ஹேர் மாஸ்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், உச்சந்தலை வறட்சி நீக்கி, தலைமுடி வேர் கால்களை வலுப்படுத்துகிறது. அந்த வகையில் இந்த ஹேர் மாஸ்க் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
முட்டையில் உள்ள புரதங்களும், தேங்காய் மற்றும் பாதாம் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்களும் கூந்தல் மெலிவை தடுத்து, வலுவான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு வழிவகுக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.