Home /News /lifestyle /

காஸ்மெடிக் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்... மலைக்க வைக்கும் வளர்ச்சி...

காஸ்மெடிக் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்... மலைக்க வைக்கும் வளர்ச்சி...

காஸ்மெடிக்ஸ்

காஸ்மெடிக்ஸ்

எண்ணற்ற தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் செல்ஃப்-கேர் டூல்ஸ்கள் ஏற்கனவே பிரபலமாக உள்ள நிலையில், லேசர்கள் மற்றும் முடி வளர்ச்சி சிகிச்சைகள் போன்ற நடைமுறைகளும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன.

தோல் பராமரிப்பு மற்றும் அழகு பராமரிப்புத் துறை சமீபகாலமாக ஒரு தீவிர மாற்றத்தை கண்டு வருகிறது. சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பிரிவாக உள்ள அழகுகலை துறையானது உலகளவில் சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள விற்பனையை ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேரடியாக மற்றும் மறைமுகமாக மில்லியன் கணக்கான வேலைகளை வழங்கி வருகிறது. தொற்று காலத்தில் பலத்த அடி வாங்கிய காஸ்மெட்டாலஜி துறை, தற்போது முன்பை விட வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இப்போது புதிய அழகுசாதனவியல் மற்றும் தோல் பராமரிப்பு சிகிச்சைகளில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே எண்ணற்ற தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் செல்ஃப்-கேர் டூல்ஸ்கள் ஏற்கனவே பிரபலமாக உள்ள நிலையில், லேசர்கள் மற்றும் முடி வளர்ச்சி சிகிச்சைகள் போன்ற நடைமுறைகளும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன.

காஸ்மோடெர்மா கிளினிக்ஸின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தனுஷ்கா கே லால் பேசுகையில், இன்றைய இளைஞர்களிடையே தோல் பராமரிப்பு தேவை அதிகரித்து வருவதாக கூறினார். இரு பாலினத்தினவரிடையேயும் சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பெண்களை போலவே தோல் பராமரிப்பு தீர்வுகளை ஆண்கள் ஏற்று கொண்டு பரவலாக பயன்படுத்துகிறார்கள்.



சமீபத்திய அறிக்கையின்படி, அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு சந்தை மதிப்பு 2021-ல் $ 22,338 மில்லியனாக இருந்தது மற்றும் ஆண்டுதோறும் 6.5% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள், குறிப்பாக மில்லினியல்கள் அவர்களின் தோற்றம் மற்றும் அழகுக்கு செலவழிக்க அதிக வருமானம் பெறுகின்றனர். கூடுதலாக சோஷியல் மீடியாகளின் எழுச்சி மற்றும் இதிலிருக்கும் இன்ஃப்ளூயன்ஸர்களின் மூலம் அழகு தயாரிப்புகளின் பிரபலம் அதிகரித்துள்ளது. மக்கள் தங்களின் அழகை மெருகேற்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதிலிருந்து DIY வீட்டுப் பராமரிப்பு கருவிகள் மற்றும் பெஸ்போக் தோல் பராமரிப்புப் பொருட்கள் வரை புதிய வழியை கொண்டுள்ளனர்.

பீட்ரூட்டை பயன்படுத்தி உதடுகளை ஹைட்ரேட் செய்வது எப்படி..? 

முடி வளர்ச்சிக்காக QR678...

QR 678 ஹேர் ட்ரீட்மென்ட் என்பது மயிர்க்கால்களில் வளர்ச்சி காரணிகள் செலுத்தப்படும் ஒரு செயல்முறை. இது முடி உதிர்வைத் தடுப்பது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. இது முடி வளர்ச்சிக்கான அறுவைசிகிச்சை அல்லாத வலியற்ற சிகிச்சையாகும். குறிப்பாக QR678 சிகிச்சை மீண்டும் மீண்டும் வண்ணம் தீட்டுதல், வெப்ப அடிப்படையிலான ஸ்டைலிங் கருவிகள்,கெமிக்கல் ஸ்ட்ரெயிட்னிங், PCOD முடி உதிர்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளால் ஏற்படும் முடி சேதத்தை சரிசெய்கிறது. இருபாலருக்கும் பல முக்கிய முடி உதிர்தல் சிக்கல்களுக்கு பிறகும் முடி மீண்டும் வளர்வதை உறுதி செய்கிறது. எப்படியிருந்தாலும், QR678 என்பது மிகவும் மேம்பட்ட, அதிநவீன மற்றும் திறமையான முடி வளர்ச்சிக்கான சிகிச்சையாக இருப்பதால் இது இளைஞர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது.



காஸ்மெட்டாலஜியின் எதிர்காலம்:

எளிதில் கிடைக்கக்கூடிய தோல் பராமரிப்பு நடைமுறைகளைத் தவிர, அழகுசாதன நிபுணர்களால் வழங்கப்படும் மிக முக்கியமான சேவைகளில் ஒன்றாக இருந்து வருகின்றன முடி சிகிச்சைகள். வரும் 2027-க்குள் முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகளின் சந்தை பன்மடங்கு வளரும். சுருக்கமாகச் சொன்னால், பலதரப்பட்ட அழகுக்கலை சிகிச்சைகளுக்கான தேவை அதிகமாக உள்ளதால் எதிர்காலத்தில் காஸ்மெட்டாலஜி சிகிச்சை துறை இன்னும் அதிக வளர்ச்சி பெறும் என்று முடித்துள்ளார் தனுஷ்கா கே லால்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cosmetics

அடுத்த செய்தி