முடி உதிர்தலை குறைக்க நடிகை தமன்னா கொடுத்த சூப்பர் டிப்ஸ்..! டிரை பண்ணி பாருங்க

தமன்னா தலை முடி பராமரிப்பு

தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவின் படி, அவர் தனது முடி உதிர்வதில் இருந்து பாதுகாக்க வெங்காயச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை தன் கூந்தலில் பயன்படுத்தி வருகிறார்.

  • Share this:
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் தமன்னா பாட்டியா. தன் அழகில் மயக்கும் இவர் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, மலையாளம் என படுபிஸியாக நடித்து வரும் தமன்னா கொரோனா ஊரடங்கு காலத்தில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நீலக்கண்களை கொண்ட இந்த அழகு பதுமை ஒவ்வொருவருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தி வருகிறார்.

அதேபோல, தன்னை பற்றிய புதிய விஷயங்களை தெரிவிக்க தனது மதிப்புமிக்க நேரத்தை சக இன்ஸ்டாகிராமர்களோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். தனது வாழ்க்கை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்வதைத் தவிர, நடிகை சமீபத்தில் தனது பளபளப்பான கூந்தலுக்கான ரகசியத்தையும் பகிர்ந்து கொண்டார். அது நிச்சயம் அனைவரையும் ஆச்சர்யபடுத்தும். ஏனெனில் அவர் இயற்கையான DIY ஹேர் கேர் முறையை பின்பற்றி வருகிறார். இதுதொடர்பாக, தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவின் படி, அவர் தனது முடி உதிர்வதில் இருந்து பாதுகாக்க வெங்காயச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை தன் கூந்தலில் பயன்படுத்தி வருகிறார்.

அதுதான் அவரது கூந்தலின் வலிமைக்கும் பளபளப்புக்கும் காரணம். இந்த கலவை சற்று துர்நாற்றத்தை ஏற்படுத்தினாலும், கொடுக்கும் பலன்களோ ஏராளம். முடி பிரச்சனைகளுக்கு வெங்காய சாறு எப்படி உதவுகிறது என்பதையும் நடிகை தமன்னா வீடியோவில் விவரித்தார். தமன்னாவின் கூற்றுப்படி வெங்காயத்திலிருந்து வரும் சல்பர் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான தோல் செல்கள் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆனால் சிறிது நேரத்திலேயே நடிகை அந்த வீடியோவை நீக்கியுள்ளார். அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி தெரியவில்லை என்றாலும், அவரது கூந்தல் பராமரிப்புக்கான ரகசியம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. சரி, இந்த வெங்காய சாறு கலவையை எப்படி தயாரிப்பது மற்றும் எப்படி பயன்படுத்துவது குறித்து விரிவாக காண்போம்.தேவையான பொருட்கள்:

வெங்காயம் -1

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: ஒரு முழு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த பேஸ்டை வடிகட்டி அதன் சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த சாறுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும்.

இவ்வளவு வயதிலும் நடிகை நதியா ஃபிட்டாக இருக்க இதுதான் காரணமா..? இன்ஸ்டாவில் வெளியிட்ட ஃபிட்னஸ் வீடியோ

அதை எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த சாறு எண்ணெய் கலவையை உங்கள் தலைமுடி வேரில் தடவ வேண்டும். ஒரு காட்டன் பேட் உதவியுடன் உங்கள் தலைமுடி முழுவதும் தடவிக்கொள்ளலாம். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்:

நடிகையின் கூற்றுப்படி, வெங்காயச் சாறு குளிர்ச்சி என்பதால், வெங்காய எண்ணெயைப் பயன்படுத்திய 30 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலச வேண்டும். இல்லையெனில் அது உங்கள் மூளையை உறைய வைக்கும்.

 

 
Published by:Sivaranjani E
First published: