ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கருவளையம் முதல் முகப்பரு வரை... கிரீன் டீ அருந்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்..!

கருவளையம் முதல் முகப்பரு வரை... கிரீன் டீ அருந்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்..!

கிரீன் டீ

கிரீன் டீ

பொதுவாக சருமத்தில் அதிகளவு டாக்ஸின்கள் தங்கியிருப்பதால், முகத்தில் அதிக பருக்கள் ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. ஆனால் கிரீன் குடிப்பதன் மூலம் சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுத்துவதைத் தடுக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரீன் டீ என்றாலே உடல் எடையைக் குறைப்பதற்காக மற்றும் மன நிம்மதியைப் பெறுவதற்காக குடிக்கும் சூடான பானம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும்.

இதோடு கிரீன் டீயைக் குடித்தாலோ அல்லது அதனை சருமத்தில் அப்ளே செய்தாலே முகத்தில் எற்படும் சுருக்கங்களைத் தடுத்து, கருமையையும் போக்குகிறது. இதோடு மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதோ என்னென்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்…

கிரீன் டீ குடித்தால் சருமத்தில் ஏற்படும் நன்மைகள்:

எண்ணெய் பசை சருமத்தில் இருந்து விடுதலை :

கிரீன் டீயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் நுண்ணுயிர்களை கொள்ளும் ஆன்ட்டி மைக்ரோபையல் ஆகியவை அதிகமாக உள்ளதால் எண்ணெய் பிசுபிசுப்புள்ள சருமத்தை பொலிவாக்க கிரீன் டீ பங்கு வகிக்கிறது. சருமத்தின் நுண் துளைகள் அடைக்கப்பட்டு அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளர்வதற்கு தேவையான சூழலை சருமத்தில் உள்ள எண்ணெய் பசை உருவாக்குவதால் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.

பருக்களை தடுத்தல் :

பொதுவாக சருமத்தில் அதிகளவு டாக்ஸின்கள் தங்கியிருப்பதால், முகத்தில் அதிக பருக்கள் ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. ஆனால் கிரீன் குடிப்பதன் மூலம் சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுத்துவதைத் தடுக்கிறது.

எரிச்சல் மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து விடுதலை :

அடிக்கடி சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம் ஆகியவை பல்வேறு காரணங்களினால் உண்டாகலாம். கிரீன் டீ ஃபேஸ் மாஸ்க் உபயோகப்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவதுடன் சருமத்தை ஈரப்பதத்துடன் மென்மையாகவும் வைத்திருக்க முடியும்.

Also Read : வயதாலும் பிரகாசிக்கும் அழகை பெற வேண்டுமா..? உங்களுக்கான சூப்பர் சீக்ரெட் இதோ...

இளமை தோற்றத்தைப் பெறுதல் :

இளம் வயதிலேயே பலர் வயதானத் தோற்றத்துடன் காணப்படுவார்கள். ஆனால் கிரீன் டீ குடிப்பதன் மூலம் இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் சேதமடைந்த செல்களைப் புதுப்பித்து, இளமை தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. கிரீன் டீயை அருந்துவது மற்றும் சருமத்தில் கிரீன் டீயை மசாஜ் செய்து வந்தாலே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

சருமம் பொலிவுடன் இருத்தல் :

பொதுவாக ஒவ்வொருவரின் சருமத்தில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் சருமம் பொலிவின்றி காணப்படும். இந்நேரத்தில் கிரீன் டீயைக் குடிக்கும் போது டாக்ஸின்களை முற்றிலும் போக்கிவிடுவதோடு சருமம் பொலிவுடன் இருக்க உதவியாக உள்ளது.

சரும புற்றுநோயைத் தடுத்தல் :

இன்றைக்கு மாறிவரும் வாழ்க்கை சூழல், மோசமான உணவு முறைகள் மற்றும் அதிக மாசுபாடு காரணமாக புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மற்ற புற்றுநோய் அறிகுறிகள் போன்று சரும புற்றுநோயையும் நம்மால் எளிதில் அறிந்துக் கொள்ள முடியாது. எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பொதுவாக சருமத்தின் மீது அதிகப்படியான சூரியனின் புறஊதாக்கதிர்கள் பட்டால், சில சமயங்களில் சரும செல்கள் பாதிப்படைவதோடு, சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இதுப்போன்ற பிரச்சனையைத் தடுப்பதற்கும் நாம் கிரீன் டீயைக் குடிக்கலாம். இது சருமத்திற்குப் பாதுகாப்பைத் தருகிறது.

Also Read : நெருங்கும் குளிர்காலம்... சருமத்தை ஆரோக்கியமாக, பளபளப்பாக வைத்திருக்க உதவும் டிப்ஸ்.!

இதோடு கிரீன் டீயில் வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளதால் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. புதிய சரும செல்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த இரண்டு வைட்டமின்களும் உதவுகின்றன. மேலும் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் கொலாஜன் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.

கருவளையங்களில் இருந்து விடுதலை :

கிரீன் டீயில் உள்ள கேஃபைன் மற்றும் டானின்ஸ் ஆகியவை கண் சிவந்து போதல் மற்றும் கருவளையம் ஆகிய இரண்டு பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவுகிறது. எனவே கிரீன் டீ பேக்கை கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையங்கள் சரியாகும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Green tea, Skincare