• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மேக்கப் இல்லாமலும் ஜொலிக்கும் பிரியங்கா முகம்... பிக் பாஸ் போறதுக்கு முன்னாடி இதுதான் யூஸ் பண்ணாங்களாம்!

மேக்கப் இல்லாமலும் ஜொலிக்கும் பிரியங்கா முகம்... பிக் பாஸ் போறதுக்கு முன்னாடி இதுதான் யூஸ் பண்ணாங்களாம்!

ப்ரியங்கா

ப்ரியங்கா

மேக்கப் இல்லாத நேரத்திலும் பிரியங்காவின் முகம் ஜொலிக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம்

  • Share this:
    சூப்பர் சிங்கர் டூ பிக் பாஸ் 5 சீசனில் கலக்கி கொண்டிருக்கும் விஜய் டிவி பிரியங்காவின் பியூட்டி சீக்ரெட் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?

    விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி, ஸ்டார் மியூஸிக் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சியிலும் பிரியங்காவை பார்த்து இருப்பீர்கள். சொல்லப்போனால் டிடிக்கு பிறகு விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் அது பிரியங்கா தான். பிரியங்காவும் மா.கா.பா ஆனந்தும் சேர்ந்து தொகுத்து வழங்கிய அனைத்து ரியாலிட்டி ஷோவும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். தன்னைத்தானே கலாய்த்தும் கொள்ளும் பிரியங்கா மிகவும் ஜாலியான கேரக்டர். யார் கலாய்த்தாலும் சரி அதை டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்பவர்.பிரியங்காவை பற்றி பலருக்கும் தெரியாத சில முகங்களும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வெளியே தெரிகிறது.

    பிரியங்கா வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். ஆனால் பூர்வீகம் மகாராஷ்டிரா.பிரியங்கா பெற்றோர் முதலில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள். சன் டிவியில் இருந்து தனது ட்ரீமை விஜய் டிவி பக்கம் திருப்பியவர் ஆங்கராக வளர்ந்து இப்போது பிக் பாஸ் போட்டியாளராக கலக்கி வருகிறார். பெரும்பாலும் பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவை மேக்கப் இல்லாமல் அதிகம் பார்க்க முடிகிறது. மேக்கப் இல்லாத நேரத்திலும் பிரியங்காவின் முகம் ஜொலிக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் தயிர்.

    இந்த சீக்ரெட்டை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே பிரியங்கா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து இருக்கிறார். அந்த சீக்ரெட் பற்றி பார்க்கலாம் வாங்க. பிரியங்காவின் முக அழகுக்கு காரணம் தயிர் தானாம். 3 விதமாக தயிரையே முகத்திற்கு பிரியங்கா
    பயன்படுத்துவாராம். முதலில் தயிரை கொண்டு முகத்தை சுத்தமாக கழுவி எடுக்க வேண்டுமாம்.



    அடுத்தது தயிருடன் காபி பொடியை சேர்த்து ஸ்கிரப் போல் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டுமாம். அடுத்தது தயிருடன் தேனை சேர்த்து ஃபேஸ் மாஸ்க்காக முகத்தில் போட வேண்டுமாம். இந்த டிப்ஸ்களை சரியாக ஃபோலோ செய்தாலே போதுமாம். முகம் பளீச்சென்று மாறிவிடுமாம். நீங்களும் கட்டாயம் டிரை பண்ணி பாருங்க.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: