ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த தீபாவளிக்கு எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் ட்ரை பண்ண போறீங்க..? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க...

இந்த தீபாவளிக்கு எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் ட்ரை பண்ண போறீங்க..? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க...

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு விதமான ஹேர் ஸ்டைல்கள் நீங்கள் வைத்தாலும் உங்களுக்கு முடி பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு குறையும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களுடைய அழகை மேலும் அழகாகக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது அவர்களுடைய தலை முடி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. முன்பெல்லாம் ஏதாவது பண்டிகைக் காலங்கள் அல்லது வீட்டில் விசேசம் என்றாலே தலைவாரிக் கொண்டு பூ வைத்துள்ள பெண்களேப் பார்ப்பதற்கே மகாலட்சுமியின் அம்சமாக தெரிவார்கள். ஆனால் இன்றைக்குள்ள மாடன் கலாச்சாரத்தில் விதவிதமான ஹேர் ஸ்டைல்களுடன் வலம் வர வேண்டும் என்ற நினைப்பில் தான் பெரும்பாலான பெண்கள் உள்ளனர்.

குறிப்பாக அலுவலக விழாக்கள், நண்பர்களுடன் வெளியே செல்வது, குடும்ப விழாக்கள் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களுக்கு ஏற்றவாறு புதிய புதிய ஹேர்ஸ்டைலை வடிவமைக்க முயல்வார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான சிகை அலங்காரங்கள் நம்முடைய தலைமுடிக்குக் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே இதுப்போன்ற சூழலில் எப்படி தலைமுடியை பராமரிப்பு என்பது? குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

தலை முடியைப் பராமரிக்க உதவும் சில டிப்ஸ்கள்:

இன்றைக்கு ஈரமான தலைமுடியை உணர்த்துவதற்கென்றே பிரத்யேக இயந்திரங்கள் வந்துவிட்டது. அவசரமாக ஏதாவது விசேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் ஈரத்தன்மையுள்ள முடியை நன்கு உலர்த்திய பின்னதாக செல்ல வேண்டும் என்று அனைவரும் நினைப்போம் இல்லாவிடில் ஈரமான தலைமுடி மிகுந்த சேதமடையும்.

Read More : உங்களுக்கு மேக்கப் போட பிடிக்குமா? தீபாவளிக்கு தேவதையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!

இந்நேரத்தில் தான் நாம் ஹேர் ட்ரையர் மூலம் ஈரமான முடியை உலர்த்துகிறோம். ஆனால் இதன் மூலம் ஏற்படும் அதிக வெப்பமும் உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் ஹேர் ஸ்டைலிங் செய்யும் போது சரியான வெப்பநிலையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.

ஒரு வேளை உங்களுக்கு ஹேர் ட்ரையர் மற்றும் பிரஷைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை இல்லை என்றால், டைசன் ஏர்வ்ராப் மல்டி – ஸ்டைலரைப் பயன்படுத்த முயற்சிக்கவும். இது உங்களுக்கு தலைமுடியை வேகமாகவும் எளிதாகவும் உலர்த்துவதற்குப் பயன்படுகிறது.

ஏதவாது விழாக்களுக்கு செல்லும் போது விதவிதமான ஹேர் ஸ்டைலிங் வைக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுண்டு. அந்த நாளில் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக, மெல்லிய கூந்தல் உடையவர்கள் இயந்திரங்கள் கொண்டு அதிகமாக உலர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வறண்ட மற்றும் சுருட்டை முடியைக் கொண்டவர்கள் கொஞ்சம் கூடுதலாக முடியை உலர்த்த வேண்டும்.

உங்களது கூந்தலுக்கு ரசாயன சாயம் பூசப்பட்டிருந்தாலும் அல்லது இயற்கையாக இருந்தாலும், அதிக வெப்பத்தை நாம் உபயோகிக்கும் போது அதன் தோற்றத்தை மாற்றுவதோடு நிறம் மங்கலாக இருக்கும். அல்லது ஒரு சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்ட நிறமாக இருக்கும். எனவே ஹேர் டிரையர், ஹேர் ஸட்ரைடினிங் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அதிக வெப்பத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் தலைமுடிக்கு அதிக ராசாயனம் பயன்படுத்துவதை நிறுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு விதமான ஹேர் ஸ்டைல்கள் நீங்கள் வைத்தாலும் உங்களுக்கு முடி பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு குறையும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். எனவே இனி நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Beauty Tips, Deepavali, Diwali, Hairstyle